இலங்கை / srilanka லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை / srilanka லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 ஜனவரி, 2016

தை பூசம் 2016 Thaipusam


( Special Thanks to ASTRO Ulagam TV ! )

வணக்கம் !

தை பூசம் 2016

" ஆஸ்ட்ரோ உலகம் " தொலைக்காட்சி , 

உலகம் முழுவதும் இருந்து 5 வெவ்வேறு  திரு முருகன் ஆலயங்களில் இருந்து  ஒரு இடைநில்லா 50 மணி நேரம் நேரடி ஓளிபரப்பு செய்கிறது !

மலேஷியா             :   பத்துமலை , ஈப்போ , பினாங்கு
இலங்கை / ஈழம்   :   நல்லூர் ( யாழ்ப்பாணம் )
தமிழ்நாடு               :   பழனி



22 ஜனவரி , 2016 அன்று இரவு 7:00 மணிக்கு தொடங்கி 25 ஜனவரி 2016 மலேசியா நள்ளிரவு வரை தொடரும்.


கண்டு அருள் பெறவும் !

நன்றி !

( Special Thanks to ASTRO Ulagam TV ! )


LIVE URLs

http://www.astroulagam.com.my/thaipusam2016

https://www.youtube.com/watch?v=dJFFG6sXD_Y


#VetriVel2016
#Thaipusam
#Tamil

புதன், 16 செப்டம்பர், 2015

இலங்கை போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை கோரி ஐ.நா.வில் தீர்மானம்: பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்

http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=1692015



இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டு வர வேண்டும் என்றும், அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால், அதனை மாற்ற ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

“இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது தாங்கள் அறிந்ததே. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மனித உரிமை ஆணையர் இது தொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக 1-10-2015 மற்றும் 2-10-2015 ஆகிய நாட்களில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

இந்த சூழ்நிலையில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக்கோரி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா வலுவான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசு உடனடியாக நடவடிகை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பட்டுள்ளார்

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது


அங்கு இந்தக்காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பது, இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவும் ஐநா இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
சர்வதேச நீதிபதிகள், சட்ட நடவடிக்கை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலான சர்வதேச மற்றும் உள்நாட்டு அம்சங்கள் அடங்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் இந்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

சட்டத்துக்கு முரணான படுகொலைகள், பாலியல் வன்முறை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, கட்டாயமாக காணாமல் போகச் செய்தல், சித்ரவதை, கட்டாயமாக சிறாரைப் படைக்குச் சேர்த்தல், பொதுமக்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் மீதான தாக்குதல், மனிதநேய உதவிகளை மறுத்தல், தடுத்து வைத்தலின் போதான வன்முறைகள், என இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள், அரசோடு சேர்ந்து இயங்கிய துணை இராணுவக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வன்முறைகளை வகைப்படுத்தி விளக்கியுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு, ஆண்டுக்கணக்கில் இதற்கான நீதி மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளது.

இலங்கையில் இந்த வன்செயல்களுக்கு காரணமான பல கட்டமைப்புக்கள் இன்னமும் தொடருகின்ற நிலையில் அங்கு இவற்றை விசாரிப்பதற்கான உள்நாட்டு பொறிமுறைகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்துள்ளதாக கூறியுள்ள ஐநா அறிக்கை, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில், ஐயப்பாடும், கோபமும், நம்பிக்கையீனமும் அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

உள்நாட்டுப் பொறிமுறை மூலம் இவற்றை விசாரிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் கரிசனை குறிப்பிடத்தக்கதாக இருந்த போதிலும், இலங்கையின் நீதித்துறை இன்னமும் இதற்கு தயாரானதாக இல்லை என்றும் ஐநா கூறியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பின்மை, இந்த அளவு பாரிய சர்வதேச குற்றங்களை விசாரிக்கும் அளவுக்கு உள்நாட்டு நீதிக்கட்டமைப்பு போதாமை, தசாப்தகால அவசர நிலை, மோதல் மற்றும் குற்றத்துக்கு தண்டிக்கப்படாத நிலை ஆகியவற்றால் இலங்கையின் பாதுகாப்புத்துறை மற்றும் நீதித்துறை சீர்கெட்டு, ஊழல் மயப்பட்டு இருப்பதும்

இவற்றை உள்நாட்டில் உரிய வகையில் விசாரிக்க முடியாமல் போனமைக்கான காரணம் என்றும் ஐநா அறிக்கை கூறுகின்றது.
கடந்த ஜனவரி முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சாதகமான நடவடிக்கைகளை பாராட்டியுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஷைத் ரா அத் அல் ஹுசைன் அவர்கள், ஆனால், இலங்கை, அடக்குமுறை சார்ந்த கட்டமைப்புகளையும், நிறுவன கலாச்சாரத்தையும் கலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

இலங்கை போர்க்குற்றம் குறித்த ஐநா அறிக்கை - காணொளி


இலங்கையில் இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர் அடங்கிய சர்வதேச, உள்நாட்டு கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்று பரிந்துரைத்துள்ளது.



<iframe width="400" height="500" frameborder="0" src="http://emp.bbc.co.uk/emp/embed/smpEmbed.html?playlist=http%3A%2F%2Fwww.bbc.co.uk%2Ftamil%2Fmeta%2Fdps%2F2015%2F09%2Femp%2F150916_unlankavt.emp.xml&title=BBCTamil.com&product=news&lang=ta"></iframe>


போரில் ஈடுபட்ட அரசாங்கப் படைகள், விடுதலைப்புலிகள் மற்றும் துணை இராணுவக் குழுக்களுக்கு இந்த போர்க்குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் தொடர்பு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
இவை குறித்த பிபிசியின் காணொளி.


Thanks - BBC TAMIL

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150916_unlankavt

http://www.bbc.com/tamil/
====================================================

வியாழன், 3 செப்டம்பர், 2015

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார் இரா சம்பந்தர்

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை நாடாளுமன்றம் கூடியபோது சபாநாயகர் கரு ஜெயசூரிய இதனை அறிவித்தார்.

நாடாளுமன்றம் கூடியதும் இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் கரு ஜெயசூரிய எதிர்க்கட்சித் தலைவரின் நியமனம் சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் வேண்டுகோள்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் ஆகக்கூடிய ஆசனங்களை பெற்றுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதன்படி இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர் சம்பந்தன் கடமையாற்றவுள்ளார்.

தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது இது இரண்டாடவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஏ. அமிர்த்தலிங்கம் 1977ஆம் ஆண்டு முதல் 1983 ஆண்டுவரை எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டிருந்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்கள் கிடைத்தன.

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் நியமிக்கப்பட்டிருப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ நாடாளுமன்றத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நியமிக்கப்படவேண்டுமென்று

அந்த கூட்டமைப்பின் ஐம்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த பின்னிணியில் எதிர்க்கட்சி தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப் பட்டுள்ளார்.

சம்பந்தர் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 19 ஆகஸ்ட், 2015

Thinakkural epaper 19AUG2015 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/

இலங்கை : ரனில் மீண்டும் பிரதமர் ஆனார்

 இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி ராஜபக்சேவின் பிரதமர் கனவு தகர்ந்தது

ரனில் மீண்டும் பிரதமர் ஆனார்

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றதால், ரனில் மீண்டும் பிரதமர் ஆனார். இதன் மூலம் ராஜபக்சேவின் பிரதமர் கனவு தகர்ந்தது.

கொழும்பு, ஆக.19-

இலங்கை பாராளுமன்றத்தில் 225 இடங்கள் உண்டு. இவற்றில் 196 இடங்கள் தேர்தல் மூலமும், மீதி 29 இடங்கள் தேர்தலில் கட்சிகள் பெறுகிற ஓட்டுகளின் விகிதாச்சார அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன.

விறுவிறுப்பான தேர்தல்

இதன்படி அங்கு நேற்று முன்தினம் 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 196 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவு செய்த 21 அரசியல் கட்சிகள் களம் இறங்கின. அவற்றின் சார்பில் மொத்தம் 6 ஆயிரத்து 151 வேட்பாளர்களும், சுயேச்சையாக 2 ஆயிரத்து 498 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தல் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது. உடனடியாக ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. நேற்று ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ரனில் அணி வெற்றி

இந்த தேர்தலில் 113 இடங்களை பெறுகிற கட்சிதான் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், எந்தவொரு கட்சியும் அந்த தகுதியை பெற வில்லை.

எனினும் தனிப்பெரும் அணியாக ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணி தேர்தல் நடந்த 196 இடங்களில் 93 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. முன்னாள் அதிபர் ராஜபக்சே, தற்போதைய அதிபர் சிறிசேனா ஆகியோரின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி 83 இடங்களை கைப்பற்றியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழர்கள் பெருவாரியாக வாழ்கிற வட பகுதியில் 3 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அபார வெற்றி பெற்றது. இந்த அமைப்பு 14 இடங்களை கைப்பற்றி உள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திரிகோணமலை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை பாராளுமன்ற தேர்தலில், தமிழ் மக்களின் குரலை இவர்கள் ஓங்கி ஒலிக்க வழி பிறந்துள்ளது.

இறுதி நிலவரம்

மொத்த இடங்கள் - 225

தேர்தல் நடந்தவை - 196

ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி - 93

ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி - 83

தமிழ் தேசிய கூட்டமைப்பு- 14

ஜனதா விமுக்த பெரமுனா - 4

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 1

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1

விகிதாச்சாரம்

இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு 11 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு 9 இடங்களும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

இந்த இடங்களுடனும் சேர்த்து ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு மொத்தம் 104 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு 92 இடங்களும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 இடங்களும் கிடைக்கும்.

கட்சி தாவல்?

தனிப்பெரும்பான்மை பலம் பெற ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு இன்னும் 9 இடங்களே தேவை.

அதே நேரத்தில் ராஜபக்சே தலைமையிலான எதிர் அணியில் இருந்து 25 முதல் 40 எம்.பி.க்கள் வரை ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு தாவக்கூடும் என தகவல்கள் கசிந்துள்ளன. இலங்கையில் கட்சிதாவல் தடைச்சட்டம் அமலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரனில் விக்ரம சிங்கே கருத்து

தேர்தல் வெற்றி குறித்து ரனில் விக்ரம சிங்கே கருத்து தெரிவிக்கையில், “நல்லாட்சிக்கு மக்கள் தந்த தீர்ப்பு இது. மக்களுக்காக இந்த வெற்றியை உறுதி செய்வதற்கு ஓய்வின்றி உழைத்த அனைத்து கட்சிகள், தனிபட்ட நபர்கள் என அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, “புதிய சகாப்தத்தின் சவால்களை எதிர்கொண்டு, நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். சவால்களை எதிர்கொள்வதற்கு நீங்கள் அனைவரும் எங்களுடன் கரம் கோர்க்க அழைப்பு விடுக்கிறேன்” என கூறினார்.

ராஜபக்சே கனவு தகர்ந்தது

கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்த ராஜபக்சே, இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவியை பிடித்து விடலாம் என கனவு கண்டார். ஆனால் அந்த கனவு தகர்ந்து தவிடுபொடியாய் ஆகிவிட்டது.

இலங்கை தேர்தல் முடிவுகள் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராஜபக்சே, “பிரதமராகும் எனது கனவு கலைந்து விட்டது” என ஒப்புக்கொண்டார். மேலும், “நான் ஒப்புக்கொள்கிறேன். கடும் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம்” என கூறினார்.

பதவி ஏற்பு

மீண்டும் பிரதமர் ஆகியுள்ள ஐக்கிய தேசிய கூட்டணியின் தலைவரான ரனில் விக்ரம சிங்கே, உடனடியாக நாட்டின் 15-வது பிரதமராக பதவி ஏற்பார், அவருக்கு அதிபர் மாளிகையில் நடக்கிற எளிய விழாவில் அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

மந்திரிகள் பின்னர் ஓரிரு நாளில் பதவி ஏற்பார்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

சிறிசேனா தேசிய அரசுதான் அமைப்பார் என தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் இந்த அரசில் சேரப்போவதில்லை, எதிர்க்கட்சி வரிசையில் நாங்கள் அமர்வோம் என ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி உறுப்பினர் உதய கம்மான் பிள்ளை தெரிவித்துள்ளார். ஆனால் சிறிசேனாவின் ஆதரவாளர்கள் ரனில் விக்ரம சிங்கேயின் மந்திரிசபையில் இடம் பெறுவார்கள் என மற்றொரு தகவல் கூறுகிறது.

புதிய பாராளுமன்றம்

புதிய பாராளுமன்றம் அடுத்த மாதம் 1-ந் தேதி கூடும் என கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
 

============== தினத்தந்தி =========================