வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மாலைமலர் இ-பேப்பர் - 31-Aug-2012

 

 

  மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்    இங்கே படிக்கவும்   <<<

மாலைமலர் இ-பேப்பர் - 31-Aug-2012 

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

உதயன் :30Aug : அவசரமாக இந்ததியா விரைகிறார் மஹிந்த


டில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உட்பட்ட முக்கியஸ்தர்களை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து பேச்சுகளை நடத்தவுள்ளது
 
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுத்துவருகிறது என  இந்தியா இராஜதந்திர மட்டத்தில் எதிர்ப்புகள் வலுவடைந்துவரும் ஒரு சூழ் நிலையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் இடம்பெறுகிறது.


மாலைமலர் இ-பேப்பர் - 30-Aug-2012

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்    இங்கே படிக்கவும்   <<<


மாலைமலர் இ-பேப்பர் - 30-Aug-2012 


புதன், 29 ஆகஸ்ட், 2012

மாலைமலர் இ-பேப்பர் - 29-Aug-2012
மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்    இங்கே படிக்கவும்   <<<

மாலைமலர் இ-பேப்பர் - 29-Aug-2012 

இலங்கை வீரர்களுக்கு தொடர் பயிற்சி: மத்திய அமைச்சர் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது


Dinamani : சென்னை, ஆக. 28: இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தொடரும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


 தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை நிறுத்திக்கொண்டு அவர்களை மத்திய அரசு உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


 இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சி தொடரும் என்று மத்திய அரசு சார்பில், மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு தில்லியில் திங்கள்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார்.


 தமிழக அரசு மற்றும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இலங்கை கடற்படை வீரர்களுக்கு உதகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இலங்கை நமது நட்பு நாடு, எனவே இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடரும்' என்று அவர் பதில் கூறியிருந்தார்.


 இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில், மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜு கூறியுள்ள கருத்து அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


 தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், நீலகிரியில் பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவ வீரர்களைத் திருப்பி அனுப்ப வேண்டுமென்று என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 28) மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
 அதன் விவரம்: நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து கடந்த 25-ம் தேதி தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். வீரர்கள் இருவரையும் திருப்பி அனுப்ப வேண்டுமென கடிதத்தில் வலியுறுத்தியிருந்தேன்.


 இந்தக் கோரிக்கையை ஏற்பதற்குப் பதிலாக, இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளதாக அறிகிறேன். இந்தக் கருத்து எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.


 அதாவது, இலங்கை நட்பு நாடாகத் தொடரும் வரையிலும் அந்த நாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளதாகத் தெரிகிறது.


 எனது அரசின் நோக்கங்களையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மத்திய அரசு முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத நிலையையே இது காட்டுகிறது.


 எனவே, இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற கண்டனத்துக்குரிய செயல்களை மத்திய அரசு மேற்கொள்ளாமல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வரும் வீரர்களை உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
 
கருணாநிதி:
மத்திய அமைச்சரின் பதில் தமிழகத்தையும், தமிழர்களின் உணர்வையும் காயப்படுத்துவதுபோல் உள்ளது.இந்தியாவைவிட ஆறு மடங்கு அதிகமான பல்வேறு உதவிகளை இலங்கைக்கு சீனா செய்துள்ள நிலையில், இந்தியா எதை நம்பி இன்னமும் இலங்கையை நட்பு நாடு என்று சொல்கிறது. இதை ஒருதலைபட்சமான நட்பு என்றுதான் சொல்லமுடியுமே தவிர, இருநாடுகளுக்கிடையே சுமுகமான நட்பு என்று எப்படிச் சொல்ல முடியும்? விஜயகாந்த்:தமிழகத்தையும், தமிழர்களையும் பணயம் வைத்து இலங்கையுடன் ஒருதலைபட்ச நட்புகொள்ள மத்திய அரசு துடிப்பது ஏன் என்பது புரியவில்லை. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுதான் நட்பின் லட்சணமா? தா.பாண்டியன்:இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு கொச்சைப்படுத்தி வருகிறது. பயிற்சி பெறும் இலங்கை வீரர்களை வெளியேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 1-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். ராமதாஸ்:இலங்கை வீரர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிப்போம் என மத்திய இணையமைச்சர் பல்லம் ராஜு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை என்பதையே அமைச்சரின் பேச்சு காட்டுகிறது.
   

" போர்குற்றவாளி " சிங்கள இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கைவிடவேண்டும் !


செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

மாலைமலர் இ-பேப்பர் - 28-Aug-2012
மாலைமலர் இ-பேப்பர் - 28-Aug-2012 
மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்    இங்கே படிக்கவும்   <<<

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு, கச்சத்தீவு மீட்பு - அதிமுக செயற்குழுவில் தீர்மானம்

சென்னை: தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும், கச்சத் தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த இக்கூட்டத்துக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் மறுவாழ்வு மற்றும் மீட்புப் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பல்வேறு சாதனைத் திட்டங்களை செயல்படுத்தியமைக்கும் முதல்வரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் என்.வரதராஜன், பா.ஜ.க. முன்னாள் செயலாளர் சுகுமாரன் நம்பியார், புதுக்கோட்டை தொகுதி முன்னாள எம்.எல்.ஏ. முத்துக்குமரன் மற்றும் சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் மறைவுக்கு இக்கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதலை நிறுத்துவதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

மேலும் இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கைவிடவேண்டும். கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டு உலைகளிலும் உற்பத்தியாக உள்ள 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்கவேண்டும். தமிழகத்திற்கு தேவையான அளவு மண் எண்ணையை மத்திய அரசு வழங்க வேண்டும்.

மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தகக்து. காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தை கூடனே கூட்டவேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாலைமலர் இ-பேப்பர் - 27-Aug-2012


மாலைமலர் இ-பேப்பர் - 27-Aug-2012
மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்    இங்கே படிக்கவும்   <<<~~~~~~~~`

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

சனி, 25 ஆகஸ்ட், 2012

புதிய தலைமுறை தொலைக்காட்சி

செய்தி ஒளிப்பரப்பில் அதிக நேயர்களுடன் முதலிடத்தில் இருந்த சன் டிவியை பின்னுக்கு தள்ளி, தற்போது புதிய தலைமுறை டிவி முதலிடத்தை பிடித்துள்ளது.

-----------------------------------------------------------------------------------

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு - தமிழ்  இ-பேப்பர் வலைபூ-வின் வாழ்த்துக்கள் !நேரடி ஒளிப்பரப்பபை காண -  இங்கே
கிளிக் செய்யும்<<<
-----------------------------------------------------------------------------------


மாலைமலர் இ-பேப்பர் - 25-Aug-2012மாலைமலர் இ-பேப்பர் - 25-Aug-2012
மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்    இங்கே படிக்கவும்   <<<~~~~~~~~`

உதயன் 25Aug2012


செப்டம்பர் 17ம் தேதி மேட்டூர் அணை திறப்பு !

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

மாலைமலர் இ-பேப்பர் - 21-Aug-2012மாலைமலர் இ-பேப்பர் - 21-Aug-2012
மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்    இங்கே படிக்கவும்   <<<


------------------------------------

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

ஈழத்தமிழர் பிரச்னைக்கு ஐ.நா. தீர்மானம்: டெசோ
டெசோ மாநாட்டில், தமிழர் மறுவாழ்வு நடவடிக்கைகளை கண்காணிக்க பன்னாட்டு குழு அமைக்க வேண்டும், ( இலங்கை ) ஈழத்தமிழர் பிரச்னையை ஐ.நா. தீர்மானம் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

TESO டெசோ அமைப்பின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபேற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு ( டெசோ)  மாநாட்டை திமுக தலைவர் கருணாநிதி தலைமையேற்று நடத்தினார்.


இந்த மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


  •  போர் குற்றவாளிகள் ஐ.நா., சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் & தண்டிக்க பட வேண்டும் 
  • இலங்கையில் தமிழ்மொழி அடையாளங்கள் அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். 
  • சிங்களர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வீடு மற்றும் நிலங்களை மீட்க வேண்டும். 
  • தமிழர் மறுவாழ்வு நடவடிக்கைகளை கண்காணிக்க பன்னாட்டு குழு தேவை.
  • இலங்கை தமிழர் பிரச்னையில் அரசியல் தீர்வு காண ஜ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.இந்த தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஐ.நாவை வலியுறுத்த வேண்டும்.
  • தமிழர் பகுதியிலிருந்து ராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
  • இலங்கை ராணுவத்திற்கு இந்தியா எந்த மாநிலத்திலும் பயிற்சி அளிக்கக்கூடாது.
  • இந்தியாவின் நிர்வாக எல்லைகளுக்குட்பட்டிருந்த கச்சத் தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டதால், தமிழ் மீனவர்கள் அப்பகுதிக்குச் சென்றாலே, சுட்டுக் கொல்கின்றனர். எனவே, இக்கொடுமைக்கு முடிவு கட்ட, கச்சத் தீவை இந்தியா மீட்க வேண்டும். 
  • மேலும், தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் கடற்படை தளத்தை இந்தியா அமைக்க வேண்டும்

இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிபந்தனை அடிப்படையில் டெசோ மாநாடு நடத்த அனுமதி: உயர்நீதிமன்றம்.

நிபந்தனை அடிப்படையில் டெசோ மாநாடு நடத்த அனுமதி: உயர்நீதிமன்றம்
சென்னை, ஆக.12:


டெசோ மாநாட்டை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த அனுமதி மறுத்து காவல் துறை பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டை மைதானத்தில், நிபந்தனையின் அடிப்படையில் மாநாட்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நிபந்தனைகளை காவல்துறை மாநாட்டு அமைப்பாளர்களிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.இதை அடுத்து, மாநாடு ராயப்பேட்டை மைதானத்தில் நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.12-Aug-2012 பிற்பகல் 12 மணிக்குக் கூடிய நீதிமன்றம் சிறப்பு வழக்காக இதனை எடுத்து விசாரித்தது. நீதிபதி தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிஷன பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு. இதில், மாநாட்டுக்கு நிபந்தனையுடன் கூட் அனுமதி அளிக்குமாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

----------------------------------

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவின் டெசோ மாநாடு : : தடைக்கு எதிரான மனுவுக்கு உடனடித் தீர்ப்பு இல்லை
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவின் டெசோ மாநாடு தடைக்கு எதிரான மனுவுக்கு உடனடித் தீர்ப்பு இல்லை news
தி.மு.க.வின் ஏற்பாட்டில் சென்னையில் இன்று நடைபெறவிருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் இந்தத் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க நேற்று வழக்கு தாக்கல் செய்தது. எனினும் இந்த வழக்குத் தொடர்பில் உடனடியாகத் தீர்ப்பு எதையும் வழங்க முடியாது என்று நீதிபதி போல் வசந்தகுமார் அறிவித்தார்.
 இதனையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாநாட்டைச் சென்னையில் உள்ள தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடத்துவதற்குத் தி.மு.க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பால் வசந்தகுமார், இருதரப்பினரையும் சரமாரியாகக் கேள்விகள் கேட்டார். மேலும் இது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை விசாரிக்க அவர் மறுத்துவிட்டார்.
மாநாட்டுக்கு 2500 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே 8000க்கும் குறைவானவர்களே வருவார்கள் என்று டெசோ மாநாட்டு அமைப்பாளர்கள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மாநாடு நடத்துவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாகவும், பயங்கரவாதத் தாக்குதல் ஏதேனும் நடத்தப்படலாம் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அரச சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பால் வசந்தகுமார், டெசோ மாநாட்டுக்கு 8000க்கும் மேற்பட்டவர்கள் வந்தால் என்ன செய்வீர்கள்? மாநாட்டுக்கு வருபவர்களின் பாதுகாப்புக்கு டெசோ மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்களா? 
டெசோ மாநாட்டுக்கு அனுமதி கோரியவர் ஒருவர்? தற்போது வழக்குத் தொடர்ந்திருப்பவர் வேறொருவரா? இதில் யார் பொறுப்பேற்பது? ஒரு வேளை சில நிபந்தனைகளுடன் பொலிஸ் அனுமதி அளித்தால் அதனை ஏற்றுக் கொள்வீர்களா? என்ன நீதிபதி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.
மேலும், டெசோ மாநாட்டுக்கு வருபவர்களின் பாதுகாப்பு நாங்கள் பொறுப்பு என்று எழுதிக் கொடுத்தால் பொலிஸ் அனுமதி அளிக்குமா எனவும் அவர் அரசிடம் கேட்டார்.
பின்னர், டெசோ மாநாடு குறித்த முக்கிய வழக்கு டிவிஷன் பெஞ்ச் முன்பு இருப்பதால் இந்த வழக்கை தான் விசாரிப்பது சரியாக இருக்காது. இந்த வழக்கு ஆவணங்களையும் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறி வழக்கை விசாரிக்க மறுப்புத் தெரிவித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது கோபாலாபுரம் வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். உயர்நீதிமன்றத்தில் அனுமதி கிடைக்காமையால் அண்ணா அறிவாலயத்தின் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் மாநாட்டை நடத்தி முடிக்க தி.மு.க. திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

டெசோ மாநாடு : வழக்கை விசாரிக்க மறுப்பு ( தினத்தந்தி)

டெசோ மாநாடு : வழக்கை விசாரிக்க மறுப்பு ( விடுதலை 12Aug)


சனி, 11 ஆகஸ்ட், 2012

உதயன் 11Aug2012 TESO டெசோ


TESO டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு:


TESO  :  டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்து விட்டது. இதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை நள்ளிரவு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனிடம் போலீஸôர் அளித்தனர். 

முன்னதாக தமிழக டி.ஜி.பி. கே.ராமானுஜத்துடன் ஆணையர் திரிபாதி, கூடுதல் ஆணையர் பி.தாமரைக்கண்ணன் ஆகியோர் இரவு ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அனுமதி மறுப்பு உத்தரவு அளிக்கப்பட்டது.

TESO  : Tamil Eelam Supporters Organisation

------------------------------------------------------------------------
டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. எனினும் டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெசோ அமைப்பு சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கக் கூடாது என்று கோரி சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எலிபி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர். முத்துகுமாரசாமி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேர் எதிரே உள்ள மைதானத்தில் மாநாடு நடத்த உள்ளனர். அங்கு மாநாடு நடத்த அனுமதி அளித்தால், அதனால் எழும் சப்தத்தால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று வாதிட்டார்.  பொது மக்களுக்கு பாதிப்பு: தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன், பொதுப்பணித் துறை நடத்திய ஆய்வின்படி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெறும் 8 ஆயிரம் பேர் மட்டுமே கூட முடியும். ஆனால், சுமார் 1,250 வாகனங்களில், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டெசோ மாநாட்டுக்கு வருவார்கள் என்று தி.மு.க. நாளேடான முரசொலியில் கூறப்பட்டுள்ளது.  மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், இவ்வளவு பேர் திரண்டால் அதனால் பொதுமக்களுக்கும், ராயப்பேட்டை மருத்துவமனை நோயாளிகளுக்கும் பல பாதிப்புகள் ஏற்படும். ஆகவே, மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி வழங்க சாத்தியமில்லை என்று குறிப்பிட்டார்.  ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வி.ஆர். தங்கவேல், ஒய்.எம்.சி.ஏ. மைதானம் 99 கிரவுண்ட பரப்பளவு கொண்டது. இதற்கு முன்னர் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல அரசியல் கட்சிகள் பல மாநாடுகளை இந்த மைதானத்தில் நடத்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.  


 உள்நோக்கமே காரணம்: டெசோ மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி. வில்சன், முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைத்த மெகா திருமண நிகழ்ச்சி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் நிகழ்ச்சி உள்பட ஏராளமான நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளன. 

  இப்போது நடத்த உத்தேசித்துள்ள டெசோ மாநாடு பற்றிய செய்திகள் ஜூலை மாதத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆகஸ்ட் 12-ம் தேதி மாநாடு நடக்கவுள்ள சூழலில், ஆகஸ்ட் 7-ம் தேதிதான் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். மாநாட்டைத் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கூடிய இந்த வழக்கில், அரசு அதிகாரிகளும் மனுதாரருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர் என்று வாதிட்டார்.

டெசோ மாநாடு ??? : போலீஸ் ஆலோசனை ‎


வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

"ஈழம்" என்ற வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.சென்னை:


திமுக ஆதரவுடன் டெசோ அமைப்பின் சார்பாக சென்னையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் "ஈழம்" என்ற வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.


தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு என்ற டெசோ 1985-ல் தீவிரமாக இயங்கியது. ஆனால் அதன் பினன்ர் அந்த அமைப்பு செயல்படவில்லை. இந்த நிலையில் ஈழத்தில் பெரும்துயர்மிகுந்த போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென டெசோ அமைப்பை புதுப்பிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். மேலும் தமிழீழத்தை அடைவதற்காக டெசோ சார்பில் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.


இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் "தமிழீழம் கோரி" தமீழீழ ஆதரவாளர்கள் அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் போட மாட்டோம் என்று கருணாநிதி அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் டெசோ சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்துகிறோம் என்றார்.இப்பொழுது "ஈழம்" என்ற வார்த்தையையே டெசோ மாநாட்டில் பயன்படுத்தக் கூடாது என்று டெசோவின் அமைப்பாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது சர்ச்சையை பெரிதாக்கியுள்ளது.
NEWS  <<<<

 

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

மகாராஸ்டிர மாநிலம் புனேயில் தொடர் குண்டு வெடிப்பு – பாரிய சேதங்கள் இல்லை

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் இன்று இரவு 4 இடங்களில் அடுத்தடுத்து குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் காயமடைந்தனர். உயிரிழப்பு ஏதுமில்லை.

மக்கள் அதிகம் நிறைந்திருந்த பகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகளை தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர். மக்களை பீதிக்குள்ளாக்கும் நோக்கிலேயே இந்த வெடிகுண்டுச் சம்பவத்தை தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளதாக கருதப்படுகிறது.


சம்பவ இடத்திற்கு டெல்லி மற்றும் மும்பையிலிருந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அதிகாரிகள் விரைந்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடங்களை முற்றுகையிட்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

வெடிகுண்டுச் சம்பவங்கள் குறித்து புனே போலீஸ் கமிஷனர் குலப் ராவ் பாட்டீல் கூறுகையில், இதுதீவிரவாத சம்பவம் போலத் தெரியவில்லை. உள்ளூர் விஷமிகள்தான் பீதியை ஏற்படுத்துவதற்காக இதைச் செய்துள்ளதாக சந்தேகிக்கிறோம். எந்த தீவிரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை. குப்பைத் தொட்டியிலும், சைக்கிள் கேரியரிலும் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.

---------------------------------------------------------------------------
                              தினத்தந்தி ( Mumbai Edition )


--------------------------------------------

கூடங்குளத்தில் -25 ஆம் தேதி மின் உற்பத்தி


----------------

புதன், 1 ஆகஸ்ட், 2012

உதயன் 01Aug2012


இந்தியாவிற்கு 4வது முறையாக நிதி அமைச்சரானார் ப.சிதம்பரம்

நிதி அமைச்சராக பதவியிலிருந்த பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானதுடன் அப்பொறுப்பை கூடுதலாக பிரதமர் மன்மோகன் சிங் கவனித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சரவையில் மூன்று துறைகளில் மாற்றம் செய்யப்பட்டது.அதன்படி உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்துறை அமைச்சராக இருந்த சுஷீல்குமார் ஷிண்டே, மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மத்திய அமைச்சரவையில் கம்பெனி விவகாரங்கள்துறை அமைச்சராக இருக்கும் வீரப்ப மொய்லி, கூடுதல் பொறுப்பாக மத்திய மின்துறையை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பரிந்துரையின்பேரில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இதற்கான நியமன உத்தரவை பிறப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.More news .............