வெள்ளி, 24 ஜூன், 2016

EU Britain பிரிட்டன் கருத்தறியும் வாக்கெடுப்பு : வெளியேறும்



பிரிட்டன் கருத்தறியும் வாக்கெடுப்பு: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் தரப்பு வெற்றி- பிபிசி கணிப்பு




பெரும்பான்மையான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், வாக்களித்தவர்களில் 52 சதவீதத்தினர் , பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டும் என்ற தரப்பு லண்டனிலும், ஸ்காட்லாந்திலும் பெரும்பான்மையைப் பெற்றது ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் , ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகவேண்டும் என்ற தரப்புக்கே ஆதரவு கிடைத்திருக்கிறது.
பிரிட்டன் இப்போது முன்பு பயணிக்காத பாதையில் செல்கிறது என்று பிரதமர் டேவிட் கேமரனுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தக் கருத்துக் கணிப்பின் தாக்கம் பிரிட்டனிலும், ஐரோப்பாவிலும் அதற்கப்பாலும், இன்னும் சற்று காலத்துக்கு, பெரும் அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று பிபிசியின் அரசியல் செய்தியாளர் கூறுகிறார்

புதன், 15 ஜூன், 2016

2016 CM Jaya Meets PM ஜெயலலிதா மோடியிடம் அளித்த மனு

ஜெயலலிதா மோடியிடம் அளித்த மனு: 94 பக்கங்கள்! 29 அம்சங்கள்! முக்கியமானவை என்ன?




நேற்று நடைபெற்ற ஜெயலலிதா-நரேந்திர மோடி சந்திப்பின் போது,ஜெயலலிதா 94 பக்கங்களைக் கொண்ட, 29 அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளைச் சமர்ப்பித்தார்.



அந்த மனுவின் முக்கிய அம்சங்களில் சில பின்வருமாறு:
  • முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்.
  • காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
  • கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்குத் தடைவிதிக்க வேண்டும்.
  • தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
  • நதிநீர் இணைப்பு செயல்படுத்தப்பட வேண்டும்
  • மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
  • இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்கள் மற்றும் அவர்களின் 92 படகுகளை விடுவிக்க வேண்டும்.
  • கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் கோவில் மறு சீரமைப்பை தமிழக மீனவர்களின் ஒப்புதலுடன் நடத்த வேண்டும்.
  • கூடங்குளம் அணுமின் நிலைய இரண்டாவது கட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
  • தமிழை நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக அங்கீகரிக்க வேண்டும்.
  • மெட்ரோ இரயில் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும் – முழுமைப்படுத்தப்பட வேண்டும்.
  • பறக்கும் ரயில் – மோனோ இரயில் – சேவையை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க வேண்டும்.
  •  ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள்சேவை வரி மீதான மசோதா திருத்தம் செய்யப்பட்டால் ஆதரவு.
  •  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது
  •  அரசு நடத்தும் தொலைக்காட்சி இணைப்பு (கேபிள்) சேவைக்கு டிஜிட்டல் எனப்படும் இலக்கவியல் உரிமம் அளிக்கப்பட வேண்டும்.
  • கெயில் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும்.
  • தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.
  • மற்ற சில அம்சங்கள் வெள்ள நிவாரணம், தமிழகத்தின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கோரிக்கைகளாகும்.


பிரதமருடனான தனது சந்திப்பை முடித்துக் கொண்ட ஜெயலலிதா, அதன் பின்னர் மத்திய இணை அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.இராதாகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்தார்.
தனது சந்திப்புகளை முடித்துக் கொண்டு நேற்றிரவே ஜெயலலிதா சென்னைக்கு தனி விமானம் மூலம் திரும்பினார்.



Thanks : Selliyal   ( http://www.selliyal.com/archives/131545 )


திங்கள், 13 ஜூன், 2016

Tamil Sanskrit “சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம்” திமுக தலைவர் கருணாநிதி.

சென்னை – “சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம்” என்று சொல்லியிருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.
திமுக மருத்துவ அணிச் செயலாளர் பூங்கோதை இல்ல திருமண விழாவில் பங்கேற்று விட்டு உரையாற்றிய கருணாநிதி, “தமிழ்நாட்டில், தமிழ் மொழிக்கு இருந்த மூவேந்தர் காலந்தொட்டு இருந்து அதனுடைய மூப்பு, அதனுடைய மொழி ஆதிக்கம், அந்த மொழிக்கு இருந்த செல்வாக்கு, அதைக் கையாண்ட மூவேந்தர்களின் பரம்பரை, அந்தப் பரம்பரையை எல்லாம் ஒழித்துக் கட்டி விட்டு, நாங்கள் தமிழுக்கு இடம் தர மாட்டோம், வட மொழிக்குத் தான் இடம் தருவோம் என்று சொல்வார்களானால், கையில் தமிழன் ஒவ்வொருவரும் “சவுக்கை”எடுத்துக் கொண்டு வடமொழி ஆதிக்கத்தை வேரறுக்கக் கிளம்ப வேண்டும். அதைத் தான் ஆலடி உயிரோடு இருந்திருப்பாரேயானால், எனக்கு அதைத் தான் யோசனையாகச் சொல்வார்.”
“அப்படிப்பட்ட வீரர், அப்படிப்பட்ட கொள்கைவாதி, அப்படிப்பட்ட மொழிப் பற்றாளர், அந்த ஆலடி அருணாவின் இல்ல விழாவில் தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம். பல ஆலடி அருணாக்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும். அப்படி உருவாகின்ற ஆலடி அருணாக்கள் வடமொழி ஆதிக்கத்தை வீழ்த்த ஒன்று திரளுவார்கள்.”
“அதற்கு நாம் துணை போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்த மணவிழாவில் நாம் எடுத்துக் கொள்ளும் வீர சபதமாக வட மொழி ஆதிக்கத்திற்கு இடம் தர மாட்டோம், சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம்.” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 12 ஜூன், 2016

7 பேர் விடுதலை கோரி பேரணி!

7 பேர் விடுதலை கோரி சென்னை இராஜரத்தினம் அரங்கிலிருந்து – கோட்டையை நோக்கிப் பேரணி!

சென்னை – ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலையைக் கோரி சென்னை இராஜரத்தினம் அரங்கிலிருந்து புறப்பட்ட பேரணி பிற்பகல் 3.00 (இந்திய நேரம்) அளவில் சென்னை கோட்டையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இன்று வேலூரில் இருந்து, சென்னை கோட்டை நோக்கி வாகனப் பேரணியாக நடைபெறவிருந்த இந்தப் பேரணி இறுதி நேரத்தில் காவல் துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க, தொடங்கும் இடம் சென்னையிலேயே இராஜரத்தினம் அரங்கம் என மாற்றப்பட்டது.
கோட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கும் பேரணியில் பல திரைப்பட இயக்குநர்களும், நட்சத்திரங்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்தப் பேரணிக்குத் தலைமை தாங்கிச் செல்கின்றார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சிறைவாசம் அனுபவிக்கத் தொடங்கி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
பேரணி முடிவடையும்போது, பேரணியின் பிரதிநிதிகளை தமிழக அரசு சார்பில் சந்திக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஆனால், ஜெயலலிதா நேரடியாக பேரணி பிரதிநிதிகளைச் சந்திப்பாரா அல்லது அவரது அமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகள் பெற்றுக் கொள்வார்களா என்பது இன்னும் தெரியவில்லை.

வெள்ளி, 3 ஜூன், 2016

Maalaimalar ePaper 03-JUNE-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  03-JUNE-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !



=======================================================