திங்கள், 25 மே, 2015

Maalaimalar ePaper 25MAY2015 மாலைமலர்

Maalaimalar ePaper 25
 MAY2015 மாலைமலர்


மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  25-MAY-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

ஞாயிறு, 24 மே, 2015

Maalaimalar ePaper 24MAY2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  24-MAY-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

சனி, 23 மே, 2015

ஜெயலலிதா பதவியேற்பில் அரங்கேறிய வினோதங்கள்..!

ஜெயலலிதா இன்று 5 ஆவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட விழாவில், சில வினோத நிகழ்வுகள் நடைபெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

தமிழகத்தின் புதிய முதல்வராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. அவருடன்  2 பெண்கள் உட்பட 28 பேர் அமைச்சர்களாக  கூட்டாக ஒரே நேரத்தில் பதவியேற்றனர். அவர்களுக்கு பதவிப் பிரமாணத்தையும், ரகசிய காப்புப் பிரமாணத்தையும் ஆளுநர் ரோசய்யா செய்து வைத்தார்.

முன்னதாக, ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப்  பிரமாணமும் ஆளுநர் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியை வாசித்த ஜெயலலிதா, ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி கூறுவதாகக் கூறி பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதா பச்சை நிற சேலையும்,பச்சை நிற மோதிரமும் அணிந்து இருந்தார்.அதே போல பச்சை நிற பேனா மூலம் கையெழுத்திட்டார். 

இதற்கு முந்தைய பதவி ஏற்பு நிகழ்வுகளில் முதல்வரைத் தொடர்ந்து  அமைச்சர்கள்  தனித்தனியாக ‘மைக்’ முன் வந்து பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு ஆளுநர் தனித்தனியாகப்  பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

ஆனால் இன்று நடந்த பதவி ஏற்பு விழாவை விரைந்து முடிப்பதற்கு வசதியாக 28 அமைச்சர்களும் மொத்தமாக பதவி ஏற்றுக் கொண்டனர். 28 அமைச்சர்களும்  இரு குழுக்களாக பிரிந்து மேடையின் இருபுறமும் நின்று பதவி ஏற்றுக் கொண்டனர். 

அவர்கள் பதவி ஏற்க வசதியாக 10 க்கும் மேற்பட்ட மைக்குகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் 10 நிமிடங்களுக்குள் 28 அமைச்சர்களும் பதவி ஏற்க முடிந்தது. அதன்பிறகு அமைச்சர்கள் கையெழுத்திட்டனர். 20 நிமிடங்களில் விழா எளிமையாக முடிந்தது.

முன்னதாக விழா தொடங்கும் போது நிகழ்ச்சித் தொகுப்பாளர்,  'விழா முறைப்படி தொடங்குகிறது.முதலில் தேசிய கீதம் சுருக்கமாக... அதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து!` என்று அறிவிப்பு செய்தார். அரசு நிகழ்வு ஒன்றில் தேசிய கீதம் சுருக்கமாக இசைக்கப்பட்டது குறித்து  பல்வேறு தரப்பினர் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Maalaimalar ePaper மாலைமலர் இ-பேப்பர் 23-MAY-2015

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  23-MAY-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 


>>>  http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=23052015

 

 

28 அமைச்சர்களுடன் இன்று காலை 11 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா

அதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு முதல்வராகப் பதவியேற்க இருக்கிறார். முதல்வராக ஜெயலலிதாவும், 28 புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். 
 
 
Jaya to meet Governor அதிமுக எம்.எல்ஏக்கள் கூட்டத்தில் நேற்று சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஓ.பன்னீர் செல்வம். இதைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்க வருமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆளுநரைச் சந்திக்கக் கிளம்பினார் ஜெயலலிதா. போயஸ் தோட்ட வீட்டிலிருந்து ராஜ்பவன் வரை வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கில் குவிந்து விட்ட அதிமுக தொண்டர்களால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போனது, 
 
போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் வீட்டை விட்டு இன்று வெளியே வந்தார். அவர் செல்லும் பாதை நெடுங்கிலும் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கூடி நின்று ஆட்டம் பாட்டத்துடன் பூ தூவி வரவேற்றனர். பஸ்கள் ரூட் மாற்றம், கடும் வெயில் உள்ளிட்டவை காரணமாக மக்கள் பெரும் சிரமத்துக்கும், துயரத்துக்கும் உள்ளானார்கள். இப்படியாக ஜெயலலிதா ராஜ்பவன் வந்து சேர்ந்தார்.
 
 
 Jaya to meet Governor அங்கு ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்தார். அவரிடம் முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தன்னை சட்டசபை கட்சித் தலைவராக அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்தது தொடர்பான தீர்மான நகலையும் ஆளுநரிடம் வழங்கினார். அமைச்சரவைப் பட்டியலையும் அவர் ஆளுநரிடம் கொடுத்தார்.. கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவும், ரோசய்யாவும் ஆலோசனை நடத்தினர். பிரமாண்ட வரவேற்பு முன்னதாக ஆளுநர் மாளிகைக்கு ஜெயலலிதா வந்து சேர்ந்தபோது அவருக்கு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். நாடி நரம்புகள் புடைக்க அம்மா, அம்மா, அம்மா என்று அவர்கள் போட்ட கோஷம் காதுகளைக் கிழித்தது. Jaya to meet Governor சரியாக 2.02 மணிக்கு ஜெயலலிதாவின் கார் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்தது. 
 
 
ஜெயலலிதா, ஆளுநர் சந்திப்பின் போது முக்கிய அதிமுக பிரமுகர்களும் உடன் இருந்தனர். பொக்கே கொடுத்தார் ரோசய்யா ஜெயலலிதாவை வரவேற்ற ஆளுநர் ரோசய்யா அவருக்கு பொக்கே கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ஆளுநரின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா ஆளுநர் மற்றும் அவருடன் அவரது மனைவி ஆகியோரிடம் நலம் விசாரித்தார். 28 அமைச்சர்களுடன் ஜெயலலிதா நாளை பதவியேற்பு ஜெயலலிதா இன்று காலை 11 மணியளவில் பதவியேற்கிறார். மேலும் அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் அமைச்சரவையில் இருந்த பழைய முகங்கள் அப்படியே மீண்டும் அமைச்சராகிறார்கள். உடல் நலமில்லாமல் இருக்கும் செந்தூர்பாண்டியன் மற்றும் ஆனந்த் ஆகியோர் மட்டும் நீக்கப்பட்டுள்ளனர். 
 
 
ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் பதவியேற்பு விழா இன்று நடைபெறவுள்ளது. ஜெயலலிதாவுக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது. மத்திய அமைச்சர்கள், சில மாநில முதல்வர்களும் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jaya-meet-governor-227249.html

வியாழன், 21 மே, 2015

புதன், 20 மே, 2015

செவ்வாய், 19 மே, 2015

திங்கள், 11 மே, 2015

ஜெயலலிதா விடுதலை !

http://tamilepaper.blogspot.in/p/maalaimalar.html

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 

 
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து  கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக, கடந்த 1996ஆம் ஆண்டில், சுப்ரமணியன் சுவாமி கொடுத்த புகாரின் பேரில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து.

 
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அக்டோபர் 17ஆம் தேதி ஜெயலலிதா உட்பட நால்வருக்கும் ஜாமீன் வழங்கியது. பின்னர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு முன்பாக விசாரணை தொடங்கியது. கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட நால்வர் தரப்பு வாதமும் நிறைவடைந்தது.

45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3 மாதங்களுக்குள் மேல் முறையீட்டு விசாரணையை முடித்த நீதிபதி, மார்ச் 12ஆம் தேதி முதல் தீர்ப்பு எழுதும் பணியை தொடங்கினார்.

இந்நிலையில் திமுக தரப்பின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானி சிங்கின் நியமனம் சட்டப்படி செல்லாது. எனவே மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எழுதும்போது பவானிசிங் முன்வைத்த வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக திமுக தரப்பும், கர்நாடக அரசு தரப்பும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வ வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என ஏப்ரல் 27ஆஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நீதிபதி குமாரசாமி ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மேல்முறையீட்டில் மீண்டும் தீர்ப்பை திருத்தி எழுதும் பணியைத் தொடங்கினார். இந்நிலையில், தீர்ப்பு எழுதும் பணிகள் முடிவடைந்த நிலையில் மே 11ஆம் தேதி காலை 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பாட்டீல் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதிமுகவினர் தொடர்ந்து குவிந்ததால் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், தீர்ப்பு வழங்குவதற்காக நீதிபதி குமாரசாமி இன்று காலை 10 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வந்தடைந்தார். அதிமுக தரப்பில் வழக்கறிஞர்கள் குமார், செந்தில், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர்கள் சரவணன், தாமரைச் செல்வன் மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பு வழக்கறிஞர்களும் வந்தனர். இதனிடையே, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சம்பந்தனும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு வந்தார்.
விடுதலை

இதனைத் தொடர்ந்து சரியாக 11 மணிக்கு மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி , ஜெயலலிதா உள்பட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் ஏற்று, அவர்களை விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.
அபராதமும் ரத்து

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் முன்வைத்த வாதங்களை ஏற்று, பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை ரத்து செய்வதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதனால், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்தாகி விடுகிறது. 

3 நிமிடத்தில் தீர்ப்பின் முக்கிய அம்சத்தை மட்டும் வாசித்துவிட்டு நீதிபதி குமாரசாமி, தனது அறைக்கு திரும்பினார். தீர்ப்பு மொத்தம் 900 பக்கங்கள் கொண்டதாக உள்ளதாகவும், அது விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 4 மே, 2015