புதன், 25 மார்ச், 2015

தமிழ் படிக்கக் கட்டணம்; தென்னாப்பிரிக்க இந்தியத் தூதரகத்தின் பாரபட்சம்; வைகோ கண்டனம்

இந்திய அரசின் செலவில் தூதரகங்கள் மூலம் வெளிநாடுகளில் இந்தி மொழியை மட்டும் கற்றுத்தரத் திட்டமிட்டு இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று வைகோ கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுள் 60 விழுக்காட்டினர் தமிழர்கள் ஆவர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து 150 ஆண்டுகளாகத் தமிழர்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். வெள்ளையர்களின் நிறவெறிக் கொடுமையை எதிர்த்து அண்ணல் காந்தி அடிகள் தென் ஆப்பிரிக்காவில் சத்யாகிரகப் போராட்டங்களை நடத்தியபோது தமிழ் மக்கள்தான் காந்தி அடிகளுக்குப் பெரும் துணையாக இருந்தனர். ஆனால், தென் ஆப்பிரிக்காவில் காந்தியார் நடத்திய சத்யாகிரகப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நடைபெறுகின்ற நேரத்தில், தமிழர்களின் போராட்டம் இன்னமும் அங்கு தொடர்கிறது. 

தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம், அங்குள்ள இந்தியர்களுக்கு இந்தி மொழியை இலவசமாகக் கற்றுத் தர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், 2008 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மொழி இலவசமாகப் பயிற்றுவிக்கப்பட்டு வந்ததை நிறுத்திவிட்டு, இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்து உள்ளது.

இந்தியாவையும் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட தேசிய இனங்களின் தாய் மொழியையும் பண்பாட்டுக் கூறுகளையும் இந்தித் திணிப்பு மூலம் அழிக்கும் முயற்சியில் மோடி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
 
2004 ஆம் ஆண்டு தமிழுக்குச் செம்மொழி சிறப்பை அளித்துள்ள இந்திய அரசு, தமிழ் மொழியை வளர்க்கவோ, உலகப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகளை உருவாக்கி ஆராய்ச்சிப் பணிகள் பெருகிடவோ சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை. இந்நிலையில், மோடி அரசின் அதிகார மமதையின் காரணமாக, இந்திய அரசின் செலவில் தூதரகங்கள் மூலம் வெளிநாடுகளில் இந்தி மொழியை மட்டும் கற்றுத்தரத் திட்டமிட்டு இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

இந்தியக் கூட்டு ஆட்சித் தத்துவத்தின் பன்முகத் தன்மைகளுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன என்பதற்கு தென் ஆப்பிரிக்காவில் இந்தித் திணிப்பும் ஓர் எடுத்துக்காட்டு ஆகும். 

உலகில் தொன்மைச் சிறப்பும், இலக்கிய இலக்கண வளமையும் நிரம்பிய தமிழ் மொழியை அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் கற்றுத் தேர்ந்து தமிழ் மொழியின் சிறப்பைப் பேணிப் பாதுகாத்திட, தமிழ்நாட்டை ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளுமே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனை தருகிறது.

தமிழக அரசின் அலட்சியத்தால், மத்திய அரசு தமிழ்மொழியின்பால் பாராமுகமாக இருப்பது மட்டும் அன்றி, தூதரகங்கள் மூலம் வலிந்து இந்தியைத் திணிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் இந்திய மொழி கற்பித்தலில் இருக்கும் பாரபட்சமான அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தென் ஆப்பிரிக்கத் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

அயல்நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் தமிழ்மொழியைக் கற்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

#தமிழ்
#தமிழ்வாழ்க
 

சனி, 21 பிப்ரவரி, 2015

Jessica Gifts her Prize ஏர்டெல் சூப்பர் சிங்கர் 4 - தமிழக, ஈழ ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்கத்தை தாரைவார்த்து கொடுத்த ஜெசிக்கா

சென்னை: 
 
தமிழகத்தின் செல்லக் குரல்களுக்களுக்கான தேடல் என்று விஜய் டிவி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்ற "ஏர்டெல் சூப்பர் சிங்கர் 4" நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்தவர் கனடாவாழ் ஈழச்சிறுமியான ஜெசிகா. ஆனால் தான் பரிசாக பெற்ற 1 கிலோ தங்கத்தையும் தமிழகம் மற்றும் ஈழத்தில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அப்படியே தாரைவார்த்துக் கொடுத்து தமிழர் நெஞ்சில் நீங்காத முதலிடத்தைப் பெற்றுவிட்டார்..
 
 
 கனடா வாழ் ஈழத் தமிழராக இக்குழந்தையின் பாடல்களில் அரங்கம் மட்டுமல்ல, டிவி வழியாக இந்நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு மனமுள்ள மனிதர்களும் கண்டிப்பாக கண்ணீர் சிந்தியிருப்பார்கள். அந்தக் குழந்தையின் உருக வைக்கும் குரலும், சோகம் கலந்த கானமும் கல்லையும் கரைய வைத்திருக்கும் என்பது

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jessica-gifts-her-prize-tamil-children-sri-lanka-221447.html

புதன், 18 பிப்ரவரி, 2015

#தமிழ்வாழ்க : ட்விட்டரில் வியப்பு: இந்திய அளவில் #தமிழ்வாழ்க முதலிடம்#தமிழ்வாழ்க

ட்விட்டரில் வியப்பு: இந்திய அளவில் #தமிழ்வாழ்க முதலிடம்

 

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் தமிழிலேயே ஒரு ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் (போக்கு) முதல் முறையாக முன்னிலை வகித்துள்ளது.

பொதுவாக, அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் கருப்பொருளையொட்டிய சொற்களால் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்குகள் (#) ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவிலோ, உலக அளவிலோ முதல் 10 இடங்களை வகிப்பது வழக்கம்.

அதாவது, ஒரு குறிப்பிட்டை ஹேஷ்டேக் சொற்கள் தொடர்பாக நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட குறும்பதிவுகள் இடப்படும்போது, அந்தச் சொற்கள் ட்ரெண்டிங்கில் வலம் வரும்.

கடந்த சில ஆண்டுகளாக, ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவை அனைத்துமே ஆங்கில மொழியில்தான் அரங்கேற்றப்படும். ஆனால், சில தினங்களாக இந்திய மொழிகளுக்கும் ட்ரெண்டிங்கில் முக்கியத்துவம் தரத் தொடங்கியிருக்கிறது ட்விட்டர். 

அந்த வகையில், முதலில் இந்தி மொழி சொல் ட்ரெண்டிங்கில் வலம் வந்தன. அதைக் கண்ட தமிழ் இணையவாசிகள், தமிழில் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் ஒன்றை ட்ரெண்டிங்கில் வரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை ட்விட்டரும் ஏற்றுக்கொண்டு தமிழில் 'போக்கு' காண்பிக்க ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில், முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் ஹேஷ்டேக் சொல் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக். ட்விட்டரில் #தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியவர் சுடர்கொடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு. #தமிழ்வாழ்க" என்று குறும்பதிவிட்டு, தமிழ் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தார்.

இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் #தமிழ்வாழ்க என்ற சொல், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது கவனிக்கத்தக்கது.

 

Thinakkural ePaper 18FEB2015 தினக்குரல் #தமிழ்வாழ்க


#தமிழ்வாழ்க

 http://epaper.thinakkural.lk/ 


http://epaper.thinakkural.lk/