ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தினகரன் வெற்றி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க.வை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் வெற்றிசுயேச்சை - தினகரன்: 89, 013 
அ.தி.மு.க. - மதுசூதனன்: 48,306
தி.மு.க. - மருதுகணேஷ்: 24,651
நாம் தமிழர் - கலைக்கோட்டுதயம்: 3,802
பா.ஜ.க. - கரு. நாகராஜன்: 1,368
நோட்டா: 2,348

களமிறங்கிய டி.டி.வி தினகரன் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன்  சுமார் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் தி.மு.க. உள்பட 57 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டில் ஜெயலலிதா போட்டியிட்டு 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை சுயேட்சையாக களமிறங்கிய தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


#ADMK
#TAMILNADU

கருத்துகள் இல்லை: