சனி, 21 மே, 2011

செய்தி : கனிமொழி கைது

21-May-2011


இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ( 2G ) ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த முறைகேட்டால் மத்திய அரசுக்கு சுமார் 1,76,000 கோடிகள் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக முதல் குற்றப்பத்திரிக்கையை, இது குறித்து விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிபிஐ, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசவைக் கைது செய்து இருந்தது.
இந்நிலையில், இரண்டாவது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த சிபிஐ, அதில் நாடாளுமன்ற உறுப்பினரும், கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் பெயரை சேர்த்து இருந்தது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக கனிமொழி கைது செய்யப்படக்கூடும் என்ற கருத்து நிலவி வந்தது. கனிமொழி சார்பாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத் மலானி, கனிமொழி பெண் என்பதாலும், ஒரு குழைந்தைக்கு தாய் என்பதாலும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார். இது குறித்த தீர்ப்பை கடந்த 14 தேதிக்கு ஒத்திவைத்திருந்த நீதிபதி, பின்னர் விசாரணையை 20 தேதிக்கு ஒத்திவைத்தார்.

நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் கண்மொழியின் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார் நீதிபதி.

இந்த வழக்கில் ஏற்கனவே மத்திய அமைச்சர் ஆ.ராசா, யுநிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சதியில் கனிமொழிக்கு முக்கியப் பங்கு உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அவரை ஜாமீனில் விடுவித்தால் அவர் சாட்சிகளை கலைக்கக்கூடும் அல்லது அழிக்கக்கூடும் என்று தெரிவித்தார். மேலும் கனிமொழியை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட்டார். இதனால் கனிமொழி நேற்று மாலை (20 மே) சிபிஐ ஆல் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர், தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

-----

இதனை சில தமிழ் பத்திரிகைகள் வெளியிட்டது முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டது , ஆனால் தினகரன்   திரு. " மம்தா "  அவர்கள் மேற்கு வங்க முதல்வராக பதவி  ஏற்ற செய்தியினை முக்கிய செய்தியாக வெளியிட்டு இருந்தது !

1) தினத்தந்தி ( தமிழ்நாடு )




2) தினமணி ( தமிழ்நாடு )




3) மக்கள் ஓசை ( மலேசியா )



4) தினகரன்  ( தமிழ்நாடு )

5) வீரகேசரி ( இலங்கை )



---

கருத்துகள் இல்லை: