புதன், 19 அக்டோபர், 2011

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் : மீண்டும் எச்சரிக்கிறது அமெரிக்கா USA warns srilanka



இலங்கையின் மனித உரிமை மீறல்கள்; பதிலளிக்காவிடின் அழுத்தம் அதிகரிக்கும்; மீண்டும் எச்சரிக்கிறது அமெரிக்கா

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு உடனடியாக பிரதிபலிப்பை வெளிப்படுத்த வேண்டுமென்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.






நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் பிரதிப் பேச்சாளர் மார்க்ரோனர், சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை இலங்கை வழங்கத் தவறும் பட்சத்தில் சர்வதேச அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியவை வருமாறு:

இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க மற்றும் விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்குச் சரியான பதிலாக இருக்குமா என்பது குறித்து அமெரிக்காவால் இப்போதைக்குக் கருத்து எதனையும் கூறமுடியாது. அந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே எதனையும் கூறமுடியும்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசின் விசாரணைகள் வெளிப்படையானது என்பதை நிரூபிக்கவேண்டிய தேவை உள்ளது.

இலங்கை அரசு அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால், சுதந்திரமான பொறிமுறை குறித்த அழுத்தங்களைச் சந்திக்க நேரிடும்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த உள்நாட்டுக்குள்ளேயே இதைச் செய்யவேண்டியது முக்கியமானது. இலங்கை அதனைத் தானாகவே செய்துகொள்ளும் என்ற நம்பிக்கை இன்னும் எமக்கு உள்ளது.அதை அவர்கள் செய்யாது போனால், நாங்கள் பலமுறை கூறியது போன்று, ஏனைய பல பொறிமுறைகளின் மீது கவனம் செலுத்துவதற்கான அனைத்துலக அழுத்தங்கள் அதிகரிக்கும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

-----------

Thanks :  Uthayan Newspaper  & Yarl.com  website

கருத்துகள் இல்லை: