ஞாயிறு, 13 நவம்பர், 2011

இலங்கையில் சமாதான முயற்சிகள் சீர்குலைய இந்தியாவே காரணம் !

இலங்கையில் சமாதான முயற்சிகள் சீர்குலைய இந்தியாவே காரணம்  !

நோர்வே அறிக்கை - "அமைதியின் பகடைகள் " Pawns of Peace




 
சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கும், தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு தொடுத்த இனப் படுகொலைப் போருக்கு இந்தியாவின் மெளன சம்மதமே காரணமென்றும் நார்வே அரசு அமைத்த குழு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

சர்வதேச ஆதரவுடன் இலங்கையில் அமைதி ஏற்படுத்த நார்வே அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது ஏன் என்பது பற்றி ஆராய நார்வே அரசு அமைத்த குழு தனது அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.

நோர்வே அரசின் பணிப்பின் பேரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட, அமைதியின் பகடைகள் ‘ (Pawns of Peace) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, நார்வே தலைநகர் ஒஸ்லோவிலநேற்று வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் சமாதான முயற்சிகள் முறிந்து போக இந்தியா எவ்வாறு காரணமாஇருந்தது என்பது பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நார்வே அரசின் அதிகாரப்பூர்வ ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை இலங்கையில் தமிழர் அழித்தொழிக்கப்பட்டதில் இந்திய அரசு வகித்த பங்கு ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tamil Webduniahttp://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1111/12/1111112032_1.htm






மக்கள் ஓசை  Makkal OSai Epaper 13-NOV-2011  ( page 15 )


To read Makkal Osai Epaper 13-Nov-2011 - Click here











 

கருத்துகள் இல்லை: