ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

'ஜெ.க்கு தொடர்பில்லை, நானே பொறுப்பு': சசிகலா அழுகை & சாட்சியம்

'ஜெ.க்கு தொடர்பில்லை, நானே பொறுப்பு': சசிகலா சாட்சியம் & நீதிமன்றத்தில் கதறி அழுகை!






பெங்களூரூ, பிப். 18 :

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தொடர்புடைய சசிகலா நடராஜன், பெங்களூரூ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி, இந்த குற்றத்திற்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.



பெங்களூரூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சசிகலாவிடம், இன்று முதன்முறையாக கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி சசிகலா கண்ணீர் விட்டு அழுதார்.


1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு காலத்திற்குள் ஜெயலலிதா மற்றும் சசிகலா பேரில் சுமார் 66 கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமான இந்த சொத்துக்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான வழக்கு பெங்களூரூ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
 
 
# BBC UK Tamil


# Google News


----

கருத்துகள் இல்லை: