வியாழன், 30 மே, 2013

யாழ்ப்பாணத்தில் இந்திய " றோ" அதிகாரிகள் !







 
 உதயன்
-------------------

இந்திய புலனாய்வு அமைப்பான "றோ' வின் உயரதிகாரி ஒருவர் நேற்று யாழ். மாவட்ட படைத் தளபதியை பலாலியில் சந்தித்து ரகசியப்பேச்சு நடத்தியுள்ளார்.
 
"றோ'வின் உயர்அதிகாரி எல்.ஐ.என்.ஜி.லங்கா தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் யாழ். குடாநாட்டுக்கு நேற்றுப் புதன்கிழமை இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.
 
இவர்கள் யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். 
 
அத்துடன் இவர்கள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்கவை பலாலியில் சந்தித்து ரகசியப் பேச்சு நடத்தியுள்ளனர். எனினும் பேச்சின் போது ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் தெரியவரவில்லை. யாழ். மாவட்டத் தளபதியை "றோ' அதிகாரி சந்தித்துப் பேசினார் என்பதை இராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. 
 
அத்துடன் பலாலியில் நடைபெற்ற விசேட வைபவம் ஒன்றிலும் இந்தக் குழுவினர் கலந்துகொண்டனர் எனத் தெரியவந்தது. 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்தியப் படையினர் நினைவாக பலாலி விமான நிலையத் தளத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கும் இவர்கள் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
 
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் சீனா சென்றுள்ள நிலையில், இந்தியப் புலனாய்வாளர் யாழ்ப்பாணத்துக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்துள்ளனர். 

--------------------------------

கருத்துகள் இல்லை: