திங்கள், 3 ஜூன், 2013

தமிழ் புலிகளின் 120 கோடி சொத்து "சிங்கள " அரசு வசம் !

உதயன்


குற்றப்புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கையால் தமிழ் புலிகளுக்கு சொந்தமான சுமார் 120 கோடி ரூபா கொண்ட சொத்துக்கள் கடந்த வாரம் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் விரைவில் ஏலத்துக்கு விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதி திறைசேரிக்கு வழங்கப்படவுள்ளது. 
 
இந்தத் தகவலை குற்றப்புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தி உள்ளார். இதேவேளை, புலிகளுக்குச் சொந்தமான ஒரு பில்லியன்  ரூபா பெறுமதியான வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் என்பன தற்போது இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவையும் விரைவில் சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
கடந்த வாரம்  "சிங்கள "அரசால் சுவீகரிக்கப்பட்ட புலிகளுக்குச் சொந்தமான சொத்துக்களில் காணிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அச்சகங்கள், வீடுகள், இயந்திரங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், மீன் பிடி இழுவைப் படகுகள், பல மில்லியன் தொகை கொண்ட வங்கிக் கணக்குகள் என்பன அடங்குகின்றன. 
 
இவை அனைத்தும் புலிகளுக்குச் சொந்தமானவை தான் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்பே  "சிங்கள " அரசால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
சுவீகரிக்கப்பட்ட சொத்துகளில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் கொள்வனவு செய்யப்பட்ட தொடர்பாடல் கருவி, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பெயரில் வாங்கப்பட்ட 3 மாடிக் குடியிருப்பு, கொட்டாஞ்சேனையில் உள்ள அச்சகம், கட்டுநாயக்கவில் உள்ள காணி என்பனவும் உள்ளடங்குகின்றன. 

=======================================

கருத்துகள் இல்லை: