ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

வடக்கு மாகாண தேர்தல் : TNA தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியை பிடித்தது




வடக்கு மாகாணத்தில் பெரும்பாலான தொகுதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியை பிடித்தது.


இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு, 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக இன்று தேர்தல் நடைபெற்றது. தனித்தமிழ் ஈழ நாடு கோரி நடத்திய போரின்போது, விடுதலைப்புலிகளின் மையப்பகுதியாக வடக்கு மாகாணம் திகழ்ந்தது.

இந்த மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனினா ஆகிய மாவட்டங்கள் அடங்கி உள்ளன.

யாழ்பாணம்:அனைத்து 14 இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.






( சாவகச்சேரி , பருத்தித்துறை , கோப்பாய் , உடுப்பிட்டி , மானிப்பாய்  ,வட்டுக்கோட்டை ,  காங்கேசந்துறை ,  யாழ்  ,  நல்லூர் & ஊர்காவற்துறை  )



முல்லை தீவு: தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கிளிநொச்சி:தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 இடங்களில் வெற்றி

மன்னார்: தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

வவுனியா: தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தம் உள்ள 36 ‌இடங்களில் 28ல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சி‌யை ‌பிடித்தது.

விக்னேஷ்வரன் முதல்வராகிறார்:

இலங்கையில் நடந்த வடக்க மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு‌ வெற்றியை தொடர்ந்து விக்னேஷ்வரன் முதல்வர் ஆகிறார்.

கருத்துகள் இல்லை: