Tamil Newspapers & ePaper,தமிழ்ச் செய்திதாள்கள் & இ பேப்பர் ,Journaux Tamouls, Tamilisch Zeitung, Kranten, Aviser
செவ்வாய், 30 ஜூன், 2015
எம்.எல்.ஏ.வாக ஜெயலலிதா இன்று மாலை பதவி ஏற்கிறார்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அதிக
வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட 27 பேருக்கும் டெபாசிட் பறிபோனது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றதை தேர்தல் அதிகாரி இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவர் ஜெயலலிதாவின் முகவரிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து அந்த வெற்றி சான்றிதழ் போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை அ.தி. மு.க. மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்றே எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்க முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று மாலை 4 மணிக்கு அவர் தலைமை செயலகத்துக்கு செல்கிறார்.
சபாநாயகர் அறையில் ஜெயலலிதா பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்றுக்கொள்கிறார்.
அவருக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்ற பிறகு முதல்–அமைச்சர் ஜெயலலிதா புதிய திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.

Labels:
2015,
தமிழ்நாடு / Tamilnadu,
மாலை மலர் / Maalaimalar
போடி முதல் ஆர்.கே. நகர் வரை ! ஜெயலலிதா
போடி முதல் ஆர்.கே. நகர் வரை !
1) 1989 போடி
போடியில் முதல் வெற்றி
1989 ம் ஆண்டு அண்ணா தி.மு.க. இரண்டாக பிளவுபட்ட போது தென் தமிழகத்தின்
போடிநாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட்டு
வென்றார். அத்தொகுதியில் ஜெயலலிதா 57,603 வாக்குகளையும் அவரை எதிர்த்து
போட்டியிட்ட தி.மு.க.வின் முத்து மனோகரன் 28,872 வாக்குகளையும்
பெற்றிருந்தார்.
வாக்கு வித்தியாசம் 28731.
--------------------------------------------------------------
2) 1991 பர்கூர் - காங்கேயம்
1991ம் ஆண்டு எல்லை பகுதியான பர்கூர் மற்றும் மேற்கு பகுதியான ஈரோடு
மாவட்டத்தின் காங்கேயம் தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்டார். பர்கூரில்
ஜெயலலிதா 67,680 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக
முன்னேற்றக் கழகத்தின் டி.ராஜேந்தர் 30,465 வாக்குகளையும் பெற்றார். வாக்கு
வித்தியாசம் 37215.
-------------------------------------------------------------------------
காங்கேயம் தொகுதியில் ஜெயலலிதா 69,050 வாக்குகளையும் அவரை எதிர்த்து
போட்டியிட்ட தி.மு.க.வின் ராஜ்குமார் மன்றாடியார் 35,759 வாக்குகளையும்
பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் 33291. எனினும் காங்கேயம் தொகுதியை
ராஜினாமா செய்தார் ஜெயலலிதா.
--------------------------------
--------------------------------
3) 1996 பர்கூரில் தோல்வி
1996ம் ஆண்டு மீண்டும் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு
தோல்வியைத் தழுவினார். தி.மு.க.வின் சுகவனம் 59,418 வாக்குகளையும் ஜெயலலிதா
50,782 வாக்குகளையும் பெற்று 8639 வாக்குகள் வித்தியாசத்தில்
தோல்வியடைந்தார்.
4)
2001 ல் வேட்புமனுக்கள் தள்ளுபடி
2001 ல் வேட்புமனுக்கள் தள்ளுபடி
2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி,
புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல்
செய்திருந்தார். 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டதாலும் ஜெயலலிதாவின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
5) 2002 ஆண்டிபட்டி
ஆண்டிபட்டி 2002ம் ஆண்டு தென்மாவட்டத்தின் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில்
போட்டியிட்டு வென்றார் ஜெயலலிதா. இத்தேர்தலில் ஜெயலலிதா 78.437
வாக்குகளையும், தி.மு.க.வின் வைகை சேகர் 37,236 வாக்குகளையும் பெற்றார்.
6)
2006 ஆண்டிபட்டி ( மீண்டும் )
2006ம் ஆண்டு மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா
73,927 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் தி.மு.க.வின் சீமான் பெற்ற
வாக்குகள் 48,741 வாக்குகள். வாக்கு வித்தியாசம் 25186.
7) 2011 ஸ்ரீரங்கம்
2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம்
தொகுதியில் போட்டியிட்டு, 1,05,328 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து
போட்டியிட்ட தி.மு.க.வின் ஆனந்த் 63,480 வாக்குகளைத்தான் பெற்றிருந்தார்.
வாக்கு வித்தியாசம் 41848.
8) 2015 - ஆர்.கே.நகர் தொகுதி
8) 2015 - ஆர்.கே.நகர் தொகுதி
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழந்த ஜெயலலிதா,
கர்நாடகா உயர்நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுதலை செய்ததை அடுத்து கடந்த
மே மாதம் 23ம் தேதி 5வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்றார்
ஜெயலலிதா. இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தனது
பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட
ஜெயலலிதா பெற்ற வாக்குகள் 1,60,921. அவரை எதிர்த்து போட்டியிட்ட
சி.மகேந்திரன் பெற்ற வாக்குகள் 9,669. ஜெயலலிதா 1,51,252 வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா 1,51,215வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா 1,51,215வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததற்கு ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள் மற்றும் தோழமை கட்சியினருக்கும் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். வாக்காளப் பெருமக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப பாடுபடுவேன் என ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
மேலும் ஜெயலலிதா வெற்றி பெற்றதை அடுத்து அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இன்று மாலை சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்ஏ.வாக பதவி ஏற்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.
சமூக ஆர்வலர் டிராபிக் ராசாமி 2,939 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தார்.

திங்கள், 29 ஜூன், 2015
சனி, 27 ஜூன், 2015
ஞாயிறு, 21 ஜூன், 2015
சனி, 20 ஜூன், 2015
வெள்ளி, 19 ஜூன், 2015
புதன், 17 ஜூன், 2015
திங்கள், 1 ஜூன், 2015
Maalaimalar ePaper 01-JUNE-2015 மாலைமலர்
Maalaimalar ePaper மாலைமலர்
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர் 01-JUNE-2015
மேலே உள்ள
இ-பேப்பர்
>>>> மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
Labels:
2015,
தமிழ்நாடு / Tamilnadu,
மாலை மலர் / Maalaimalar
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)