மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
மாலைமலர் இ-பேப்பர் 24-OCT-2013
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
BBC NEWS TAMIL :
இலங்கையில் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும்
காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தி ( இன்று 24-10-2013 ) வியாழன் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று
நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த அத் தீர்மானத்தில் தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டினில் பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது, இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கைக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும்,
மேலும் இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா தனது உரையில் 2009 ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், இனப்படுகொலை அங்கு நடந்தேறியது என குற்றஞ்சாட்டினார்.
மேலும் 2011 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் நாளன்று, அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படக் காரணமாயிருந்தவர்கள் போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் அவையில் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
'இலங்கை நட்பு நாடு அல்ல'
ஆனால் இவைகுறித்து இது நாள் வரை இந்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் குறைகூறினார் முதல்வர்.
மேலும் இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்களுக்குத் தேவையான மறுவாழ்வுப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்றும், தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுவது தொடர்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இப்பின்னணியில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி கடந்த மார்ச் மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக மக்களின் உணர்வுகள் உட்பட, அனைத்து காரணிகளையும் பரிசீலித்து, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்வது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று பாரதப் பிரதமர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக மக்கள் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், பாரதப் பிரதமர் தன்னுடைய பங்கேற்பு பற்றி மட்டும் கருத்து தெரிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளததாகக் கூறினார் ஜெயலலிதா.
இலங்கை காமன்வெல்த் சாசனத்திற்கு முரணாக நடந்துகொள்வதாக சுட்டிக்காட்டி கனடா பிரதமரே நவம்பர் மாநாட்டினை புறக்கணிக்கவிருக்கிறார் அவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சரின் நாடாளுமன்றச் செயலர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் மிகக் குறைவாக வசிக்கும் கனடா நாடே இப்படி ஒரு முடிவெடுத்திருக்கும் நிலையில் இந்தியா இந்த மாநாட்டில் பெயரளவிலும் கலந்து கொள்ளாது என்னும் தீர்க்கமான முடிவை இன்னமும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்று வருந்தினார் ஜெயலலிதா.
அனைத்து கட்சிகளின் ஆதரவுடன், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக