செவ்வாய், 3 டிசம்பர், 2013

மன்மோகன் சிங் - யாழ்ப்பாணம் - கடும் எதிர்ப்பு Opposition Jaffna Visit by Manmohan : Uthayan 03DEC2013

வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வரவுள்ளமைக்குப் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றில் நேற்றுக் கடும் எதிர்ப்பு வெளியிட்டது.

http://www.euthayan.com/paperviews.php?id=24532&thrus=0

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுப் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க மறுத்த மன்மோகன் சிங், வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ். செல்வதை நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். அதற்கு எதிராகச் செயற்படுவோம்'' என்றும் அது தெரிவித்தது.

இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் செல்கிறார் என்று எதிர்க் கட்சியின் பிரதம கொரடாவான ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி செலவினத் தலைப்புகள் மீதான குழு நிலை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

"வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்லப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் நாம் அறிய விரும்புகிறோம்.

விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வந்தாலோ, யாழ்ப் பாணம் சென்றாலோ அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம். நாட்டின் ஜனாதிபதியின் அழைப்பில்லாமல் மன்மோகன் சிங் இலங்கை வரமுடியாது.

பொதுநலவாய மாநாட்டுக்கு எமது ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்து மாநாட்டைப் புறக்கணித்த இந்தியப் பிரதமர், வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இங்கு வருவதை எம்மால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

பொதுநலவாய மாநாட்டுக்கு இலங்கை வராத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இப்போது மட்டும் இங்கு வருவதேன்? இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா அவர் யாழ்ப்பாணம் செல்கிறார்?

எமக்கும் அரசுக்குமிடையில் அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், நாட்டின்மீது எமக்கும் பற்று இருக்கிறது. அந்தவகையில், வடமாகாண முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வருவதை நாம் அனுமதிக்கமாட்டோம். எனவே, இந்தியப் பிரதமரின் யாழ். விஜயம் குறித்து அரசு தெளிவுபடுத்தவேண்டும்" என்றார்..

வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வரவுள்ளமைக்குப் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றில் நேற்றுக் கடும் எதிர்ப்பு வெளியிட்டது.
"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுப் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க மறுத்த மன்மோகன் சிங், வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ். செல்வதை நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். அதற்கு எதிராகச் செயற்படுவோம்'' என்றும் அது தெரிவித்தது. 
இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் செல்கிறார் என்று எதிர்க் கட்சியின் பிரதம கொரடாவான ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார். 
நாடாளுமன்றில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி செலவினத் தலைப்புகள் மீதான குழு நிலை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
"வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்லப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் நாம் அறிய விரும்புகிறோம். 
விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வந்தாலோ, யாழ்ப் பாணம் சென்றாலோ அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம். நாட்டின் ஜனாதிபதியின் அழைப்பில்லாமல் மன்மோகன் சிங் இலங்கை வரமுடியாது. 
பொதுநலவாய மாநாட்டுக்கு எமது ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்து மாநாட்டைப் புறக்கணித்த இந்தியப் பிரதமர், வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இங்கு வருவதை எம்மால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? 
பொதுநலவாய மாநாட்டுக்கு இலங்கை வராத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இப்போது மட்டும் இங்கு வருவதேன்? இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா அவர் யாழ்ப்பாணம் செல்கிறார்?
எமக்கும் அரசுக்குமிடையில் அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், நாட்டின்மீது எமக்கும் பற்று இருக்கிறது. அந்தவகையில், வடமாகாண முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வருவதை நாம் அனுமதிக்கமாட்டோம். எனவே, இந்தியப் பிரதமரின் யாழ். விஜயம் குறித்து அரசு தெளிவுபடுத்தவேண்டும்" என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=603462484603678941#sthash.NhkdU2H1.dpuf

கருத்துகள் இல்லை: