ஞாயிறு, 29 ஜூன், 2014

Thinakkural ePaper 29June2014 தினக்குரல்

Uthayan ePaper 29June 2014 உதயன்

Malaysia Tamil Nesan 29JUNE2014 : தமிழ் நேசன்

https://www.facebook.com/tamilnesan1924?fref=ts


தமிழ் நேசன்



Thaimoli - New Tamil Daily Malaysia தாய்மொழி தமிழ் தினசரி பத்திரிகை - மலேசியா


2014-JUNE-29

ஏற்கெனவே 6 தமிழ் தினசரி பத்திரிகைகள் மலேசியாவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், தற்போது 7ஆவது பத்திரிகையாக தாய்மொழி என்ற பெயரில் மற்றொரு தமிழ் தினசரி உதயமாகியுள்ளது.

எந்த ஒரு காலகட்டத்திலும் இத்தனை தமிழ்ப்பத்திரிகைகள் மலேசியாவில் வெளிவந்ததில்லை. இது மலேசிய தமிழ் வாசகர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ்மொழியை வளர்க்க நினைப்பவர்களுக்கும் இனிப்பான செய்திதான் என்றாலும், இதனால் தமிழ்ப்பத்திரிகைகளுக்கு இடையே கடுமையான வர்த்தக போட்டி தலைதூக்கியுள்ளதோடு எந்தப் பத்திரிகையை வாங்குவது என்ற சிக்கலும் தமிழ் பத்திரிகை வாசகர்களுக்கு எழுந்துள்ளது.

தாய்மொழி பத்திரிகை டான்ஸ்ரீ கேவியஸ் தலைமையிலான பிபிபி கட்சியின் அரசியல் செய்திகளை நிறைய தாங்கி வெளி வருகின்றது. இதற்கிடையில், கூடிய விரைவில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட தினக்குரல் நாளிதழ் அடுத்த சில தினங்களில் வெளி வரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு தினக்குரல் வெளிவரும் என்றால் அதோடு சேர்த்து மலேசியாவில் வெளிவரும் தமிழ் தினசரிகளின் எண்ணிக்கை 8 ஆக உயரும்.


(  Thanks :  ஈகரை தமிழ் களஞ்சியம்  http://www.eegarai.net/t111370-7  )

வெள்ளி, 27 ஜூன், 2014

ஞாயிறு, 22 ஜூன், 2014

Maalaimalar ePaper 22June2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  22-JUNE-2014




   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

சனி, 21 ஜூன், 2014

வெள்ளி, 20 ஜூன், 2014

Oru Paper - Issue 220 ஒரு பேப்பர்

http://www.orupaper.com/Issue/issue-220/


Link

Facebook Link

===================================================

ஒரு பேப்பர் ( Oru Paper ) 


Oru Paper’ is a Free bi-lingual Fortnightly Newspaper of Tamilnadu & Srilankan Tamil Community. It is published from London since 2004 by Oru Paper Ltd. on the 1st and 3rd Fridays of each month.

It is been Published in Five Seperate Editions and been distributed in Canada, France, Germany, Switzerland and the United Kingdom.

===============================================


from Facebook http://ift.tt/1iQbVYi

via IFTTT


from Facebook http://ift.tt/1pQ6EaO

via IFTTT

Tamil Nadu Chief Minister Jayalalithaa email to PM on Hindi Imposition

http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=2062014



Thanks to  Deccan Chronicle
-------------------------
NDA government's proposal to give prominence to Hindi in official accounts in social media has met with stiff opposition in Tamil Nadu with Chief Minister Jayalalithaa and even BJP allies joining DMK chief Karunanidhi in slamming the move, voicing fears of "imposition" of the language on non-Hindi speaking sections.

Firing off a letter to Prime Minister Narendra Modi, Jayalalithaa described the Home Ministry's proposal as "against the letter and spirit" of the Official Languages Act, 1963," while pointing out that the "highly sensitive issue" caused "disquiet" to the people of Tamil Nadu "who are very proud of and passionate about their linguistic heritage".


Following is the full text of

TAMILNADU CM J.JAYALALITHA's letter to PM Narendra Modi:


It has come to my notice that the Ministry of Home Affairs has issued two Office Memoranda, the first by the Official Language Department of the Ministry of Home Affairs (O.M.No.12019/03/2014-OL, dated 10.3.2014) and the second by the Co-ordination Division of the Ministry of Home Affairs (O.M.No.11020/01/2013-Hindi, dated 27.5.2014). These Office Memoranda direct that official accounts on social media like Facebook, Twitter, blogs, Google and You Tube which at present use only English should compulsorily use Hindi, or both Hindi and English,  with Hindi being written above or first. This makes the use of Hindi mandatory and English optional.

As you are aware, as per the Official Languages Rules, 1976, communications from a Central Government office to a State or Union Territory in Region "C" or to any office (not being a Central Government office) or person in such State shall be in English. This provision has been introduced following the introduction of a mandatory proviso to Section 3(1) of the Official Languages Act, 1963, by an amendment in 1968 which states as follows:-
"Provided that the English language shall be used for purposes of communication between the Union and a State which has not adopted Hindi as its official language".
In this context, while the Office Memoranda have been primarily made applicable to Government of India officers and offices located in "Region A", social media by their very nature are not only accessible to all persons on the internet but meant to be a means of communication to persons living in all parts of India including those in "Region C".  People located in "Region C" with whom the Government of India communication needs to be in English, will not have access to such public information if it is not in English. This move would therefore be against the letter and spirit of the Official Languages Act, 1963.  As you are aware, this is a highly sensitive issue and causes disquiet to the people of Tamil Nadu who are very proud of and passionate about their linguistic heritage.
Hence, I request you to kindly ensure that instructions are suitably modified to ensure that English is used on social media.

In the Memorandum that I had presented to you on 3.6.2014 I had also raised the long pending demand of the people of Tamil Nadu to make the ancient Tamil language an official language of India. I had also urged that all the languages included in the VIII Schedule of the Constitution of India be declared as official languages of India. If this request is fulfilled the use of all official languages on social media can be encouraged.

=============================================================

Maalaimalar ePaper 20June2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  20-JUNE-2014




   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வியாழன், 19 ஜூன், 2014

மோடி இந்தி திணிப்பில் ஆர்வம் காட்டக்கூடாது கருணாநிதி அறிக்கை

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


'பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப் படி வெளியிடப் படும் ஆணை - சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன் படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக்  கொள்கிறது” என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நாளேடு  அன்று செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளை யிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன் முறையாக முடிவெடுத்துள்ளது.
வெளிநாடுகளின் தலை வர்களுடன் உரையாடு வதற்கு இந்தி மொழியையே பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுத்துக் கொள் கிறார். அவரது விருப் புரிமையையட்டி, அரசு அதிகாரிகள் சமூக வலைத் தளங்களில் தங்க ளுடைய கருத்துகளைப் பதிவு செய்வதற்கு இந்தி மொழியையே பயன்படுத்திட வேண்டும்.

27--5--2014 அன்று மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரி களும் சமூக வலைத் தளங் களில் இந்தியைப் பயன் படுத்துவதைக் கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்துள்ளது. அனைத்து அமைச்சகங் கள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் “ட்விட்டர்”, ”பேஸ்புக்” போன்ற தங்களு டைய சமூக வலைத் தளங் களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்; ஆனால் இந்தியைப் பயன்படுத்து வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

மத்திய உள்துறை அமைச் சகத்தின் இந்த உத்தரவு அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டு, அது நடை முறைப்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுதல் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, “டிவிட்டரில்” இந்தி மொழியைத் தான் பயன் படுத்துகிறார் என்று ஆங்கில நாளேட்டின் செய்திக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அர சாணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற் கான செயலின் ஆரம்பம்தான் இது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

1938ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாய பாடமாக்கிய போதும், 1965ஆம் ஆண்டில் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போதும் ஏற்பட்ட பேரெழுச்சியையும், கிளர்ச் சியையும் சரித்திரம் விரி வாகப் பதிவு செய்து வைத் திருக்கிறது.

 மொழிப் போர்க் களங்கள் இன்னும் உலர்ந்து போய் விடவில்லை. “அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவு - ஆட்சி மொழி பற்றிய பிரிவு- கட்டாயமாக அரபிக் கடலிலே தூக்கி எறியப்பட வேண்டு”மென்றும்; “நல்ல நாட்டுப் பற்றுள்ள, நுண் ணறிவுள்ள இந்தியக் குடிமக்களான தமிழ் மக்களை, கோபம் கொண்ட பிரிவினைக்காரர்களாக மாற்றும் சட்டமே இது” என்றும்; மூதறிஞர் ராஜாஜி எடுத்துரைத்து எச்ச ரித்ததை யாரும் மறந்து விடவில்லை.

4-3-1965 அன்று மாநிலங் களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நடந்த விவாதத்தின்போது, பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் முன்னிலையில், பேரறிஞர் அண்ணா “மொழிப் பிரச்சினையை புனராலோசனை செய்து ஒரு திருப்திகரமான முடிவு காணும் வரை, ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்கட்டும்; எல்லா தேசிய மொழிகளும், ஆட்சிமொழிகளாகும் வரை, ஆங்கிலம் இருக்கட்டும்; பிறகு இந்திய மொழி ஒன்று வளர்ந்து தகுதி பெற்றுத் தொடர்பு மொழியாகும் வாய்ப்பைக் காலப் போக்குக்கு விட்டு விடலாம்“” என்று அனைத்துத் தரப் பினரும் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் விளக்கியதை மறந்து விடத் தான் முடியுமா?

இந்தியத் திருநாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக்காத்து வளர்த்திடும் நோக்கில், அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாகப் பாவிக்காமல், அவற்றில் ஒன்றான இந்தி மொழிக்கு மட்டும் முன்னுரிமையும், முதல் இடமும் கொடுத்திட முற்படுவது, இந்தி பேசாத இந்தியக் குடிமக்களிடையே பேதத்தைப் புகுத்தி, அவர் களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிடும் முயற்சி யின் முதற்கட்டமாகவே கருதப்பட நேரிடும்.  இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் ஒருமித்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திட ஆக்கப்பூர்வமான முயற்சிகள் அடுக்கடுக்காகத் தேவைப்படும் நிலையில், அவசரப்பட்டு தொடர்பு மொழிப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்தி விடும்.

எனவே பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார வளர்ச்சியையும், சமூக மேம்பாட்டையும் முன் னெடுத்துச் செல்வதி லேயே கருத்தூன்றிச் செயல் படவேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Maalaimalar ePaper 19June2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  19-JUNE-2014




   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

செவ்வாய், 17 ஜூன், 2014

Maalaimalar ePaper 17June2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  17-JUNE-2014




   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

தமிழ் இசுலாமியர் மீது சிங்களவர் தாக்குதல் ! கலவரம்

http://epaper.thinakkural.lk/


இலங்கையின் அளுத்கம, பேருவளை ஆகிய இடங்களில் சிங்களர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.


கடந்த 15-06-2014ம் திகதி அளுத்கம, பேருவளை, தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற தமிழ் பேசும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் சிங்கள பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறை...
 

திங்கள், 9 ஜூன், 2014

மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்



தமிழக மீனவர்கள் 82 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததைக் கண்டித்து ராமேசுவரம் மற்றும் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 82 மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

இதில் 10 விசைப்படகுகளில் இருந்த 50 மீனவர்கள் தலைமன்னார் கடற்படைத்தளத்துக்கும், 8 விசைப்படகுகளில் இருந்த 32 மீனவர்கள் காங்கேசன் துறை கடற்படைத் தளத்துக்கும் கொண்டு செல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இலங்கை நீதிமன்றம் விடுமுறை என்பதால் மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ராமேசுவரம் மற்றும் பாம்பனில் தனித்தனியாக விசைப்படகு மீனவர் பிரதிநிதிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். 

பின்னர் செய்தியாளரிடம் ராமேசுவரம் மீனவப் பிரதிநிதி தேவதாஸ் கூறும்போது, “இலங்கை அரசு முன்னர் மீனவர்களை விடுதலை செய்யும்போது விசைப்படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட தளவாடங்களுடன் மீனவர்களை விடுதலை செய்யும். ஆனால் தற்போது விசைப்படகுகளையும் மீன்பிடித் தளவாடங்களையும் கைப்பற்றிக் கொண்டு மீனவர்களை மட்டும் விடுவித்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது, மீனவர்களை விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் ஈடுபடுவார்கள்” என்றார்.

Uthayan epaper 09June2014 உதயன்

http://euthayan.com/indexresult.php?id=28609&thrus=0


http://euthayan.com/indexresult.php?id=28609&thrus=0



ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 715 படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 6 சிறு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர்.
தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பிச் செல்லுங்கள் என்று மிரட்டினார்கள். தமிழக மீனவர்கள் சிலரை அவர்கள் தாக்கவும் செய்தனர்.

பிறகு 10 விசைப்படகுகளையும் அவற்றில் இருந்த 50 தமிழக மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர். அவர்களை  செவ்வாய்க் கிழமை தலை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த சுமார் 1200 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது 8 படகுகளுடன் 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அந்த 32 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 82 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தமிழக கடலோர பகுதி மீனவர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடத்தப்பட்ட 82 மீனவர்களையும் உடனே விடுவிக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இருந்து முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே தமிழக மீனவர்கள் 82 பேரையும் உடனே மீட்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை தடுக்க நிரந்தர செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
இதையடுத்து மத்திய அரசு இந்த பிரச்சினையில் உடனடியாக கவனம் செலுத்தியது. மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், தமிழக மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். அவரது உத்தரவின் பேரில் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நேற்றே இலங்கை அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது 82 மீனவர்களையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இன்று கொழும்பில் உள்ள தூதரக அதிகாரிகள் இரண்டாவது நாளாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இலங்கை அதிகாரிகள், ‘‘தமிழக மீனவர்கள் தினமும் எங்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைகிறார்கள்’’ என்றனர்.

82 மீனவர்களையும் உடனே விடுவிப்பது பற்றி இலங்கை அதிகாரிகள் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. என்றாலும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அக்பருதீன் கூறினார்.

இதற்கிடையே தமிழக மீனவர்கள் 82 பேரில் 36 பேர் ஊர்க்காவல்துறை கோர்ட்டிலும், 46 பேர் மன்னார் கோர்ட்டிலும் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் 82 மீனவர்களும் எப்போது மீட்கப்படுவார்கள் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.




தமிழ் நேசன் Tamilnesan Epaper 09-JUNE-2014 Malaysia


Thinakkural 8JUNE2014 ePaper தினக்குரல்

தமிழ் நேசன் Tamil


வெள்ளி, 6 ஜூன், 2014

Maalaimalar ePaper 7June2014 மாலைமலர் இ-பேப்பர் 7-JUNE-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  7-JUNE-2014




   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

Maalaimalar ePaper 6JUNE மாலைமலர் இ-பேப்பர் 6-JUNE-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  6-JUNE-2014




   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

தமிழ்மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்த தினம் Tamil Classical Language June6

தமிழ்மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்த தினம் தமிழ் மொழியின் வரலாற்றை 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சிறு வட்டத்திற்குள் அடைத்தாலும், இதுவரை மொழியின் தோற்றம் குறித்து முழுமையாக ஆராயப்படவில்லை. எழுத்து, சொல், பொருளுக்கு இலக்கணம் வகுத்து, ஐம்பெங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், நீதி இலக்கியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட ஏராளமான படைப்புகளை உள்ளடக்கிய பழமையான மொழி தமிழ் மொழி. இத்தகு பெருமை வாய்ந்த தமிழ் மொழிக்கு, இலக்கியத்தின் பழமையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் செம்மொழி அங்கீகாரம் 2004-ம் ஆண்டு இதே நாளில்தான் தமிழ் மொழிக்குக் கிடைத்தது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெளியிட்டார். -------------------------------------------------- இந்தியாவில் சுமார் 1,600 மொழிகள் பேசப்படு கின்றன. அவற்றில் 22 மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவற்றில் சம்ஸ்கிருதமும் தமிழும் அடங்கும். அறிஞர் கால்டுவெல் திராவிட மொழிகளை ஒப்பிட்டு 1856-ல் ஒரு ஆங்கில நூலை எழுதினார். அதில் தமிழின் தொன்மையை விளக்கினார். அது உலக அளவில் விவாதிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக, பேராசிரியர் பரிதிமாற் கலைஞர் தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என 1902-ல் கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகளும் அறிஞர்களும் இது தொடர்பாகப் பல முயற்சிகளை எடுத்தனர். அதன் விளைவாக, இந்திய அரசால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று. செம்மொழி என இந்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ்தான். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 - ம் ஆண்டில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவில் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்சிமொழியாகத் தமிழ் இருக்கிறது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இடம்பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது குறிப்பிடத் தக்கது. --------------------------------------------------------

ஞாயிறு, 1 ஜூன், 2014

மாலைமலர் இ-பேப்பர் 01-JUNE-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  1-JUNE-2014




   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !