திங்கள், 16 பிப்ரவரி, 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் வளர்மதி அமோக வெற்றி !


ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதி 96 ஆயிரத்து 417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர் வளர்மதி திமுக வேட்பாளர் ஆனந்தை விட முன்னிலை வகித்து வந்தார்.


23 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில், அதிமுகவைச் சேர்ந்த வளர்மதி ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 461 வாக்குகள் பெற்றார்.

இதேபோல் திமுக வேட்பாளர் ஆனந்த் 55 ஆயிரத்து 44 வாக்குகளும், பாரதிய ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம் 4 ஆயிரத்து 834 வாக்குகளும், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாதுரை ஆயிரத்து 466 வாக்குகளும் பெற்றனர். 2011ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தேர்தலைக் காட்டிலும், ஏறக்குறைய 12 சதவீத வாக்குகளை அதிமுக அதிகம் பெற்றுள்ளது.

=====================================================
ஸ்ரீ ரங்கம் இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். வளர்மதி 1,51,561 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

தனக்கு அடுத்ததாக வந்த தி.மு.க. வேட்பாளர் என். ஆனந்தைவிட 96,516 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

தி.மு.க. வேட்பாளர் என் ஆனந்த் 55,045 வாக்குகளையும் பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளர் எம். சுப்ரமணியம் 5,015 வாக்குகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே. அண்ணாதுரை 1552 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

சுயேச்சையாகப் போட்டியிட்டவர்களில் டிராஃபிக் ராமசாமி என்ற சமூக ஆர்வலர் 1167 வாக்குகளை பெற்றுள்ளார்.

யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைக் குறிக்கும் நோட்டாவுக்கு 1919 வாக்குகள் விழுந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரைவிட அதிக வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இதில் தி.மு.கவைத் தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும் டெபாசிட் இழந்துள்ளன.

அ.தி.மு.க. இந்த இடைத் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் கோஷங்களை எழுப்பியும் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.கவின் தலைமையத்திலும் ஜெயலலிதாவின் இல்லம் முன்பாகவும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வாழ்த்து கோஷங்களை எழுப்பினர


================================================================
       

ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதி 96 ஆயிரத்து 417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர் வளர்மதி திமுக வேட்பாளர் ஆனந்தை விட முன்னிலை வகித்து வந்தார். 23 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில், அதிமுகவைச் சேர்ந்த வளர்மதி ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 461 வாக்குகள் பெற்றார். இதேபோல் திமுக வேட்பாளர் ஆனந்த் 55 ஆயிரத்து 44 வாக்குகளும், பாரதிய ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம் 4 ஆயிரத்து 834 வாக்குகளும், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாதுரை ஆயிரத்து 466 வாக்குகளும் பெற்றனர். 2011ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தேர்தலைக் காட்டிலும், ஏறக்குறைய 12 சதவீத வாக்குகளை அதிமுக அதிகம் பெற்றுள்ளது.
     
- See more at: http://www.ns7.tv/ta/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF#sthash.TPmalrwa.dpuf

கருத்துகள் இல்லை: