திங்கள், 4 ஏப்ரல், 2016

2016 ADMK இன்று அ. தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் தொண்டர்களிடையே பரபரப்

மிழக சட்டசபை தேர்தலையொட்டி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இன்று 12.15 மணியளவில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகிற  மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க. முகாமில் நேர்காணல் முடிந்து, கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதிப் பங்கீடு என பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 

அதிமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் சென்னையில் நேர்காணல் நடந்து வருகிறது. கடந்த மார்ச் 6ம் தேதி முதற்கட்ட நேர்காணல் நடைபெற்றது. 2ம் கட்ட நேர்காணல் கடந்த 21ம் தேதி தொடங்கியது. போயஸ்கார்டனில் இன்று 14வது நாளாக நேர்காணல் நடைபெறுகிறது விடுபட்ட தொகுதிகளுக்கு இன்று நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் போயஸ்கார்டனில் அதிமுகவினர் பலரும் குவிந்துள்ளனர். 

அதிமுகவில் வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அமாவாசை தினமான ஏப்ரல் 7ம்தேதி தேர்தல் அறிக்கையும், ஏப்ரல் 11ம் தேதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்  அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இன்று 12.15 மணியளவில் வெளியாகலாம் எனவும் அ.தி.மு.க வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: