திங்கள், 23 மே, 2016

2016 Jayalalithaa sworn in as Tamil Nadu CM today. தமிழக முதல்வராக இன்று திங்கட்கிழமை மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றார்.

தமிழக முதல்வராக 6வது முறையாக

இன்று திங்கட்கிழமை மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றார்.

அவருக்கு தமிழக ஆளுநர் ரோசைய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற அதிமுகவின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி இன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்ற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது.
சரியாக மதியம் 12 மணிக்கு நடந்த இந்த பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர் ரோசய்யா, ஜெயலலிதாவுக்குப் பதவியேற்பு உறுதிமொழியும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இரு பிரமாணங்களையும் " ஆண்டவன் மீது ஆணையிட்டு" என்று கூறி பிரமாணம் எடுத்துகொண்டார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவைத் தொடர்ந்து அவருடைய அமைச்சரவையில் நியமிக்கப்பட்டிருக்கும் 28 அமைச்சர்களும் கூட்டாக " ஆண்டவன் மீது ஆணையிட்டு" பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து கொண்டனர்.
இரு குழுக்களாக அவர்கள் இந்தப் பிரமாணங்களை எடுத்துக்கொண்டனர். முதலில் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 15 அமைச்சர்களும், பின்னர் மற்ற 13 அமைச்சர்களும் கூட்டாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாஜக உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சனி, 21 மே, 2016

Maalaimalar ePaper 21-MAY-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  21-MAY-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ePaper       <<<<<<<

=======================================================

வெள்ளி, 20 மே, 2016

Maalaimalar ePaper 20-MAY-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  20-MAY-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ePaper       <<<<<<<

=======================================================

2016 TAMILNADU ASSEMBLY ELECTION

அதிகாரபூர்வ இறுதி முடிவுகள்: 


அதிமுக: 134 


திமுக : 89 


காங்கிரஸ்: 8 




சென்னை – தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி நிலவர அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:

அதிமுக  – 134

திமுக       –  89

காங்கிரஸ் – 08

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் – 01

ADMK 2016 WINNING FACTS

2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சி அமைக்கிறது.  எம்ஜிஆருக்கு அடுத்து, அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்து சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை வெற்றிக்கான காரணங்கள் என்ன என்பது குறித்த ஒரு அல்சல் இங்கே...

கூட்டணி கணக்கு:
தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பதை கடந்த பல தேர்தல்களில், கூட்டணிகளே முடிவு செய்து வந்தன. 1996 ல் திமுக ஆட்சி அமைத்தபோது தமிழ் மாநில காங்கிரஸுடனும், 2001ல் அதிமுக ஆட்சி அமைத்தபோது த.மா.கா, பாமக உள்ளிட்ட கட்சிகளுடனும் 2006 ல் திமுக ஆட்சியமைத்தபோது காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட மெகா கூட்டணியுடனும்,  2011ல் அதிமுக ஆட்சி அமைத்தபோது தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தன. 

ஆனால் இந்தத் தேர்தலில்தான் கூட்டணி சரிவர அமையாமல் எல்லா கட்சிகளும் தனித்தனி தீவாக விலகியே நின்றன. தி.மு.க,  கடைசி நேரம்வரை தே.மு.தி.க தன் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடைசிவரை போக்கு காட்டிக்கொண்டே இருந்தாரே தவிர,  திமுகவுடன் சேரவில்லை. மக்கள் நலக்கூட்டணி உடன் கூட்டணி அமைத்தார். இதேபோல வடமாவட்டங்களில் செறிவான வாக்கு வங்கியைக்கொண்ட பா.ம.க, ஆரம்பம் முதலே தனித்துதான் போட்டி என்று சொல்லி தனியாக களம் கண்டது. இப்படி கட்சிகள் தனித்தனியாக பிரிந்து நின்றதால்,  ஆளுங்கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் சிதறி,  அதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது. வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்கூட சில வெற்றி தோல்விகள் அமைந்துள்ளதை பார்க்கும்போது,  கூட்டணி இல்லாதது எவ்வளவு பெரிய பின்னடைவு என்பதை திமுக தற்போது உணர்ந்திருக்கும். தவிர சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும்,  அனைவரையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்த அதிமுகவின் சாதுர்யமும் அக்கட்சியின் வெற்றிக்கு கூடுதல் காரணமாக அமைந்துவிட்டது. 

சொன்னாங்க செஞ்சாங்க, செய்வாங்க...
‘மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப், 
ரேசன்கார்டு உள்ள அனைவருக்கும் மாதம்தோறும் 20 கிலோ இலவச அரிசி, 
விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், 
திருமண உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், 
தாலிக்கு தங்கம், 
விலையில்லா ஆடு- மாடுகள் வழங்கப்படும், 
மருத்துவ காப்பீட்டுத் திட்டம்...’
 - இப்படி 2011-ம் ஆண்டு  அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஏகப்பட்ட நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை கடந்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அதிமுக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியது. அதுமட்டுமின்றி அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் உள்ளிட்ட ஏகப்பட்ட ‘அம்மா’ திட்டங்களை செயல்படுத்தியது. 

இதேபோல இந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், ‘100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் மின்சார கட்டணம் வசூலிக்கப்படாது. விவசாய கடன்கள் தள்ளுபடி, மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கூடிய இலவச இன்டர்நெட் இணைப்பு, பெண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கு 50 சதவிகித மான்யம்...'  போன்றவை உட்பட ஏகப்பட்ட அறிவிப்புகளை ஜெயலலிதா அறிவித்தார். ஏற்கெனவே 2011 தேர்தல் அறிவிப்புகளில் சொன்னவற்றில் பலவற்றை அதிமுக நிறைவேற்றியதால், இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதையும் செய்வார் என மக்கள் நம்பி வாக்களித்துள்ளதும் ஜெயலலிதாவின் வெற்றிக்கு முக்கியமான காரணம். 

தி.மு.க மீதான பொது எதிர்ப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட சில ஊழல் வழக்குகளின் மூலம்,  'ஊழல் கட்சி' என்ற திமுக மீது படிந்த பிம்பம் இந்த தேர்தல் வரை அகலாமல் போனதும் அக்கட்சிக்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துவிட்டது. தவிர,  'தி.மு.க என்பதே குடும்ப ஆட்சி' என்பது இன்னொரு குற்றச்சாட்டு.மேலும் கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கு எதிராக,  மக்கள் மனதில் பெரிய எதிர்ப்பலையை திமுக ஏற்படுத்தவில்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது. 

ஜெயலலிதா மீதான அபிமானம்
தனி ஒரு மனுஷியாக துணிந்து நிற்கும் ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டார். வரலாறு காணாத மழை வெள்ளம், ஊழல் புகார்கள், ஓரிடத்தில் குவிந்திருந்த அரசு அதிகாரம், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றது, விலைவாசி உயர்வு, டாஸ்மாக் வியாபாரம்... என பல புகார்கள், பிரச்னைகள் ஜெயலலிதா முன் அணிவகுத்து நின்றன. இவை அனைத்தையும் தனி ஒருவராக களத்தில் நின்று எதிர்கொண்டார். இவை எல்லாவற்றையும் தாண்டி,  இந்தத் தேர்தலில் பெருவாரியான தமிழக மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்து அக்கட்சியை வெற்றியடைய வைத்திருப்பது மக்கள், குறிப்பாக அடித்தட்டு மக்கள்  ஜெயலலிதா மீது கொண்ட அபிமானத்தையே காட்டுகிறது. 

வாக்கு வங்கி
வாக்கு வங்கியில் திமுகவைவிட அதிமுகவே பெரிய கட்சி. அது அந்தக் கட்சிக்கு எம்ஜிஆர் சேர்த்து வைத்த மிகப் பெரிய சொத்து. அந்த வாக்கு வங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறதே தவிர இறங்கவில்லை. இதை தவிர்த்து, ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களில் கணிசமானோர் அதிமுகவுக்கே அதிகம் வாக்களித்து வந்திருகின்றனர் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது. அடுத்தபடியாக மக்கள் அறிந்த இரட்டை இலை சின்னம். சீனியர் வாக்காளர்கள் மனதில் எம்ஜிஆர் அதனை பதியவைத்து சென்றதே காரணம். தவிர, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு இருந்த வாக்குவங்கியை விட அதில் இருந்து பிரிந்து சென்ற தமிழ்மாநில காங்கிரஸுக்கு அதிக வாக்கு வங்கி உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. மேலும் தி.மு.க,  தன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

எடுபடாத மதுவிலக்கு
தமிழகத்தில் டாஸ்மாக் மூலமான வருமானம் பெருகப் பெருக, மதுவால் ஏற்படும் குற்றங்களும் அதிகளவில் பெருகின. மதுவிலக்கைக் கொண்டுவரக் கோரி பல போராட்டங்களும் வலுவடைந்தன. சசிபெருமாளின் மரணம், மதுவிலக்குப் போராட்டங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனது. சசிபெருமாளின் மரணத்தையும் மதுவிலக்கையும் முன்வைத்து,  மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டது. மாணவர்கள் பலர்,  மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் இறங்கினர். 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால்,  மதுவிலக்கு கொண்டு வரப்படும்' என்றார் கருணாநிதி. மதுவிலக்கை வலியுறுத்தாத ஒரே கட்சியாக அ.தி.மு.க மட்டுமே இருந்தது.
தேர்தல் நெருங்கும்போதுதான், ' படிப்படியாக மதுவிலக்குக் கொண்டுவரப்படும்' என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இப்படியாக இந்தத் தேர்தலில் மதுவிலக்கு ஒரு முக்கியப் பிரச்னையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய தேர்தல் முடிவுகள்,  மதுவிலக்குப் பிரச்னை முக்கியப்பங்கு வகிக்கவில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மதுவிலக்கை கொண்டுவருவதாக அறிவித்தால், பெண்களின் வாக்குகள் மொத்தத்தையும் அள்ளிவிடலாம் என கட்சிகளும் கணக்குப் போட்டன. ஆனால், அத்தனை கணக்குகளும் இப்போது பொய்த்து இருக்கின்றன. 

ஒரு ஆண்,  தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை குடிக்கு செலவிட்டு, குடும்பத்தை தவிக்க விடும் நிலை பலகாலமாக நமது மனதில் பதிந்து கிடக்கிறது. ஆனால், கள நிலவரமோ வேறு மாதிரி இருக்கிறது. பெண்கள் நலன் சார்ந்து கொண்டுவரப்பட்ட சில நலத்திட்ட உதவிகள், கிராமப்புற பெண்களை பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்களாக மாற்றி இருக்கிறது. இதனால், குடிக்காக செலவழிக்கும் கணவர்களைப் பற்றிய கவலைகளில், பொருளாதாரக் காரணங்களைப் பெண்கள் கண்டுகொள்ளவில்லை. உடல்நலன் சார்ந்த கவலைகள் மட்டுமே பெண்களுக்கு இருக்கின்றன. இந்தக் காரணத்தால்தான் பெண்களின் வாக்குகள் மதுவிலக்குக்கு ஆதரவான கட்சிகளுக்கு கிடைக்காமல் போய் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

DMK : 10 FACTS ஆட்சி அரியணையை தி.மு.க. ஏன் எட்டிப் பிடிக்கவில்லை? - இந்த 10 விஷயங்கள்தான் காரணமா?

Thanks VIKATAN

------------------------------------------------------------------------


ஆட்சி அரியணையை தி.மு.க. ஏன் எட்டிப் பிடிக்கவில்லை? - 

இந்த 10 விஷயங்கள்தான் காரணமா?























டைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிக இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். மிக வலுவான எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. அண்ணாவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. 

போட்டியிட்ட முதல் பொதுத்தேர்தலில் (இந்தியாவின் இரண்டாவது பொதுத்தேர்தல்) 15 இடங்களை பிடித்து காங்கிரசுக்கு கிலி கொடுத்தது அண்ணாவின் தலைமையிலான திமுக. எந்த காங்கிரசை எதிர்த்து அரசியல் புரிந்து அரியணை ஏறியதோ, அதே காங்கிரசுடன் இணைந்து 1971 தேர்தலை சந்தித்தது திமுக.
 
திமுகவின் வெற்றி தோல்விகளில் இத்தகைய முரண்பாடுகள் நிறைய உண்டு. 'ஒட்டும் இல்லை உறவும் இல்லை' என 2014 ல் துாக்கி எறிந்த காங்கிரசுடன் இந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது வரை அதனை அடுக்கிக்கொண்டே போகலாம்.
 
இந்நிலையில் கோட்டையில் கொடி ஏற்றும் வாய்ப்பை திமுக கோட்டை விட்டதற்கான 10 காரணங்கள் இவை...தொகுதிக்கு தக்கபடி காரணங்கள் பொருந்தும்.
 
1. குலைந்த கட்டுக்கோப்பு
 
திமுக,  அண்ணா மற்றும் கருணாநிதியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தவரை கட்சியின் கட்டுக்கோப்பு பாராட்டும்படி இருந்தது. 

மதுராந்தகம் ஆறுமுகம் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக இருந்தபோது அவர்தான் அந்த மாவட்டத்தின் 'கருணாநிதி'. அதாவது மாவட்டத்தில் எதிர்கோஷ்டி என்ற ஒன்று உருவாகிவிடாமல் பார்த்துக்கொள்வார். எங்காவது சலசலப்பு கேட்டால் அந்த சலசலப்பு வந்த இடத்திற்கு தொடர்ந்து படையெடுப்பார். 'சாம தான பேத தண்டம்' என எந்த வழிகளிலாவது அதை அடக்கி ஒடுக்கிவிடுவார். தலைமை மீது அந்த கோஷ்டிக்கு ஏதேனும் அதிருப்தி இருந்தால், அடுத்தவாரமே அவர்களை தலைமையிடம் கொண்டுபோய் நிறுத்தி, கருணாநிதியை சந்திக்க வைத்து சமாதானம் செய்து அனுப்பிவைப்பார். 

இப்படி கட்சியினரை ஒருங்கிணைப்பதன் மூலம் கட்சியை காப்பாற்றிவந்தனர் அக்காலத்தில். ஆனால் இப்போது எதிர்கோஷ்டி உருவானால் அதை அடக்கி ஒடுக்குவதோ அல்லது அவர்களை அரசியலிலிருந்தே அப்புறப்படுத்திவிடுவதோ நடக்கிறது. இதற்கான முயற்சிகளில் கட்சி பலியாகிவிடுகிறது தேர்தல் சமயங்களில்.
 
2. தீர்மானத்தை தவிர்த்த லாபி
 
திமுக கடந்த பொதுக்குழுக் கூட்டமொன்றில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என தீர்மானம் ஒன்று நிறைவேறியது. காரணம் மாவட்டச் செயலாளர்களும் களம் கண்டால் குறிப்பிட்ட அந்த தொகுதியின் மீதே அவரது கவனம் இருக்கும். மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளின் மீதான கவனம் குறையும். இது மற்ற தொகுதிகளின் வெற்றியை பாதிக்கும் என்பதே இந்த தீர்மானத்தின் பின்னணி. ஆனால் லாபி செய்து, இந்த தீர்மானத்தை நடைமுறைக்கு கொண்டுவராமல் செய்துவிட்டனர் மாவட்டச் செயலாளர்கள். அச்சப்பட்டபடியே தேர்தல் முடிவு இப்போது வந்திருக்கிறது. ஒருவேளை தீர்மானத்தின்படி நடந்திருந்தால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கருணாநிதி கொடியேற்றியிருப்பார்.
 
3.  பலத்தை குறைத்த விட்டமின் 'ப'
 
ஜனநாயகம் பணநாயகமாக ஆகி பல ஆண்டுகள் ஆகிறது. இதில் எந்தகட்சியும் விதிவிலக்கல்ல...தொகை மட்டுமே மாறுகிறது. 

இந்த முறை ஒவ்வொரு தொகுதிக்கும், திமுக தலைமையிலிருந்து வேட்பாளர் கணக்கில் ஒரு கணிசமான தொகை வரவு வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

பிரச்னை என்னவென்றால், இந்த தொகையில் 90 சதவீதம் தொகையை முதற்கட்ட பிரசாரத்தின்போதே தந்ததுதான்.  


 
இதனால் அடுத்தடுத்த கட்டமாக இன்னும் 'கொஞ்சம்' தலைமையிலிருந்து வரலாம் என்ற கணக்கில் வேட்பாளர்கள் இந்த பணத்தை முதற்கட்டபிரசாரத்தின்போதே கனஜோராக செலவு செய்தனர். தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன் தரப்பட்ட மீதம் 10 சதவீத தொகை பேனர்கள், தொண்டர்களின் உணவு மற்ற செலவுகளுக்கு இருந்த நிலுவைத்தொகையை செலுத்தவே சரியாய்ப் போனது. இதனால் கடைசிக்கட்டத்தில் களத்தில் ஊடுருவி வேலை செய்ய முடியாத தர்மசங்கடத்துக்கு ஆளாகிவிட்டனர் உடன்பிறப்புகள்.  
 
4. அதிருப்தியை களைய ஆட்கள் இல்லை
 
பொதுவாக ஒவ்வொரு தொகுதிக்கும் பலரும் தலைமையிடம் 'சீட்' கேட்பர். வேட்பாளர் அறிவிப்புக்குப்பின் தலைமை எடுக்கும் முதல் நடவடிக்கை, 'சீட்' கிடைக்கப் பெறாதவர்களை அழைத்து சமாதானம் செய்வதுதான். சம்பந்தப்பட்டவரின் உழைப்பை பொறுத்து, அடுத்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்றோ, அல்லது வேறு ஏதாவது உறுதிமொழியோ தரப்பட்டு சமாதானம் செய்துவைக்கப்படுவர். தலைமையே தன்னை சமாதானம் செய்ததை எண்ணி, அத்துடன் மனமாச்சார்யங்களை மறந்து, வெயில் மழை பாராது கட்சியின் வெற்றிக்கு உழைப்பை செலுத்த ஆரம்பிப்பர். இந்த முறை இது மிஸ்ஸிங். 

'சீட்' கிடைக்கப்பெறாதவர்களை மட்டுமல்ல, மற்ற அதிருப்தியாளர்களைக் கூட சமாதானப்படுத்தி தேர்தல் பணிகளில் ஈடுபடச் செய்யும் முனைப்பு கட்சி சார்பிலோ அல்லது மாவட்டச் செயலாளர்கள் சார்பிலோ மேற்கொள்ளப்படவில்லை. அதிருப்தியாளர்களின் சுணக்கம்,  சுமுகமான முடிவை திமுகவுக்கு தராமல் போக காரணமாகிவிட்டது.
 

5. பழிதீர்க்கும் படலம்
 
இந்த முறை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பழிதீர்க்கும் படலம் நடந்தது என்கிறார்கள். அதாவது ஒருங்கிணைந்த மாவட்டங்களில் கோலோச்சிய பல மாவட்டச் செயலாளர்கள், மாவட்டங்கள் பிரிந்தபோது தனக்கான முக்கியத்துவத்தை இழந்தனர். இதனால் தங்களின் பழைய ஹோதாவைப்பெற,  தங்களின் வெற்றியை விட  எதிர்கோஷ்டியின் தோல்வியிலேயே பெரிதும் ஆர்வம் காட்டினர். காரணம் எதிர்கோஷ்டி வென்று,  அமைச்சர்கள் பந்தயத்தில் முந்தி சைரன் காரில் சென்றுவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான். இதன் எதிரொலி கட்சித்தலைமையே சைரன் காரை காணமுடியாமல் போய்விட்டது.
 
6. கூடா நட்பு கேடாய் முடிந்தது!
 
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் 

பங்காளிகளாக தேர்தலை சந்தித்த திமுக-

காங்கிரஸ் கூட்டணி, வெற்றிக்கோட்டைத் 

தொட முடியவில்லை. 2ஜியும் ஈழ விவகாரமும் 

ஒன்றுசேர,  பாராளுமன்றத் தேர்தலிலும் பல் 

இளித்தது அதன்வெற்றி. 


கூடாநட்பு என்று 

பவ்யமாய் தேர்தலுக்கு முன்பே  மத்திய 

ஆட்சியிலிருந்து வெளியேறியது தி.மு.க. 

அதன்பிறகு பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. 

தோற்றதற்கான காரணங்கள் அப்படியே உள்ள 

நிலையில், மீண்டும் காங்கிரசுடன் 

கைகோத்துக்கொண்டது ஏன் என்று இன்னமும் 

பொதுமக்களும், ஏன் சொந்தக்கட்சியினரும் கூட   

புரியாமல் உள்ளனர். மாற்றம் வேண்டும் என்று 

பல கூட்டணிகள், கோஷங்கள் 

எழுப்பிக்கொண்டிருந்த சூழலில், தி.மு.க.-

காங்கிரஸ் கூட்டணி, வாக்காளர் களுக்கு 

பழைய விவகாரங்களை நினைவுபடுத்தி, கூடா 

நட்பு கேடாய் முடிய காரணமாகிவிட்டது.



7. கட்சியா கம்பெனியா?
 
திமுகவின் பல மாவட்டங்கள், கட்சித்தலைமையின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் அதை கம்பெனிகள் போல நிர்வகித்து வருகின்றனர். ஸ்டாலினின் கீழ் செயல்பட்டால்போதும் என அவர்கள் செயல்பட ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வெளிப்படையாகவே சில மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களின் பெயரைக் குறிப்பிட்டு, 'அண்ட் கோ' எனக் கிண்டலடிக்கிற நிலைதான் பல மாவட்டங்களில் உள்ளது. 

மாவட்டச் செயலாளர்கள் மீது முரண்படுகிறவர்களை அழைத்துப் பேசாமல் அல்லது தலைமையிடம் மாவட்டச் செயலாளர்கள் குறித்து புகார் தெரிவிப்பவர்களை, தலைமைக்கே எதிரியாக கற்பித்துக்கொள்கிறது இப்போதுள்ள 'தலைமை'. தி.மு.க. என்ற கப்பல் தரைதட்ட இதுவும் ஒரு காரணம்.
 
8. அனுபவஸ்தர்களின் ஆலோசனை இல்லாதது!
 
அண்ணா காலத்திலும், கருணாநிதியின் கையில் கட்சி வந்த பின்னரும் மாவட்டம், நகரம் ஒன்றியம் என தேர்தல் வேலைகளுக்கு ஆட்கள் இருந்தாலும், அவர்களை ஒருங்கிணைக்க கட்சியின் சீனியர்கள்,  தேர்தல் பணியில் அனுபவம் கொண்ட தலைவர்களை தொகுதிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக  நியமிப்பர். அதிமுகவில் ஐவர் குழு, நால்வர் குழு என ஒட்டுமொத்த தொகுதிகளுக்குமாக  தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க குழு உள்ளதுபோல,  திமுகவில் எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை. முன்பு மாவட்டச் செயலாளர்களை, தங்கள் அருகில் உள்ள மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பாளராக நியமிப்பர். இது தேர்தல்பணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
 
ஆனால் இப்போது அப்படியில்லை. எல்லாவற்றிற்கும் ஒரே சர்வரோக நிவாரணி அந்தந்த மாவட்டச் செயலாளர்கள்தான். அனுபவஸ்தர்கள், தங்களது ஆதரவாளர்களுக்கு ஆலோசனை தருவதோடு தங்கள் பணியை முடக்கிக்கொண்டுவிட்டனர் இந்த தேர்தலில். கருணாநிதியின் உடல்நிலையால் தொகுதி பிரச்னைகளை அவரிடம் கொண்டு செல்ல முடியவில்லை. ஸ்டாலின் தரப்பிடம் பிரச்னைகளை கொண்டு செல்வதில் பல தடங்கல்கள். இதுவும் வெற்றிக்கோட்டை தொட முடியாமல் போனதற்கு காரணமாகிவிட்டது.
 
9.களப்பணியில் சுணக்கம்
 
திமுகவின் கடந்த தேர்தல் வெற்றிகளுக்கு கடைசி நேர அஸ்திரமாக ஒன்று இருந்தது உண்டு. அது அடிமட்டத்தொண்டன் மூலம் ஏவப்படும். அதாவது தங்கள் வார்டுகளில் உடல்நிலை சரியில்லாத வாக்காளர்களை முன்பே கணக்கெடுத்துக்கொண்டு, தேர்தல் நாளன்று சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ அல்லது தனது இருசக்கர வாகனம் என்று தன் சக்திக்குட்பட்ட வகையில் அவர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டுவருவதில் அக்கறை காட்டுவார்கள் அந்த தொண்டர்கள். அண்ணா காலத்தில் இது கட்சித்தலைமையோ  அல்லது மாவட்டச் செயலாளரின் அறிவுறுத்தலோ இன்றி தனிப்பட்ட முறையில் தொண்டனின் முயற்சியாக இருந்தது. 

இலங்கையில் பாலம் அமைக்க  ராமனுக்கு அணில் உதவியதுபோன்று, திமுகவின் வெற்றிக்கு ஒரு அணில்போன்ற அடிமட்டத் தொண்டனின் உதவி இது. ஆனால் இம்முறை இந்த வியூகத்தை தி.மு.க. தொலைத்துவிட்டது. பிரசாரத்துடன் தனது பணி முடிந்துவிட்டதாக  மாவட்டச் செயலாளரிலிருந்து கடைசி தொண்டன் வரை முடங்கிக்கொண்டான்.
 

10. மாற்றம் இல்லாத ஏமாற்றம்
 
திமுக என்றால் திருவாரூர் மு. கருணாநிதி என கட்சித் தொண்டர்கள் புளங்காங்கிதம் அடைந்த தொண்டர்களின் காலம் முடிந்துவிட்டதை கருணாநிதி இன்னமும் உணராதது ஆச்சர்யம். கட்சியில் கடந்த 3 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பே, கருணாநிதிக்கு மாற்றாக ஸ்டாலினை முன்னெடுக்கும் முயற்சிகள் கட்சி நிர்வாக மட்டத்தில் உருவாகிவிட்டன. கட்சி மட்டத்திலேயே என்பதைவிட,  கட்சித் தலைமையிலானாலேயே கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின்தான் என்ற பூடக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுவிட்டன.

ஆனால் இன்றுவரை அது கருத்துவடிவத்திலேயே வெளிப்பட்டுவருவதும் தோல்விக்கு முக்கிய காரணம். கட்சியில் தலைமைப் பதவிக்கு போட்டியற்ற சூழல் உருவாகிவிட்ட இந்த நிலையிலும், இன்னும் ஸ்டாலினுக்கு அதிகாரப்பூர்வமாக தலைமை பொறுப்பு அளிக்காததும் இளைஞர்கள் மத்தியில் ஒரு சுணக்கத்தை தந்தது எனலாம்.
 
பொதுவெளியிலும் ஜனநாயக முறையில் இயங்குவதாக கூறிக்கொள்ளும் ஒரு கட்சியில், தொடர்ந்து 47 ஆண்டுகள் ஒரே தலைமை இருப்பது பொதுவான புதிய தலைமுறை வாக்காளர்களிடம் ஏற்படுத்திய சலிப்பும் இந்த தோல்விக்கு முக்கியக் காரணமாகக் கூறலாம்!
 
- எஸ்.கிருபாகரன் ( Thanks VIKATAN )




தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி !



தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி !


வியாழன், 19 மே, 2016

நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜெயலலிதா !!!

நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜெயலலிதா !!!




மிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்ட நிலையில் வாக்களித்த வாக்களர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-

எழுகின்ற நன்றி உணர்ச்சி இவைகளை விவரிக்க அகராதியில் வார்த்தைகளே இல்லை. தி.மு.க-வின் பொய் பிரச்சாரங்களை பொடிப் பொடியாக்கி, உன்னதமான, உத்தமமான, உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டிய தேர்தல் இந்தத் தேர்தல். குடும்ப ஆட்சிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் இந்தத் தேர்தல். குடும்பத்தோடு வாக்கு கேட்டவர்களைகுழிதோண்டி புதைத்த தேர்தல் இந்தத் தேர்தல். தமிழக மக்களை நம்பாமல் கருத்துக் கணிப்புகளை நம்பிய கட்சிக்கு எதிர்பார்த்த தோல்வியைக் கொடுத்த தேர்தல் இந்தத் தேர்தல்.

என் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, மகத்தான, அபரிமிதமான, அளப்பரிய வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அளித்துள்ள தமிழக மக்களுக்கு என்றென்றும் நான் நன்றிக் கடன் பட்டவளாக இருப்பேன் என்றும்; தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றும்; இந்தியாவிலேயே தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க தொடர்ந்து அல்லும், பகலும் அயராது உழைப்பேன் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்.

இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, 1984-ஆம் ஆண்டுக்கு பிறகு, தொடர்ந்து ஆட்சியில் உள்ள கட்சியே வெற்றி பெற்ற பெருமையை எனக்கு அளித்த தமிழக மக்களுக்கும், இந்தத் தேர்தலில் மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், 'கருமமே கண்ணாயினார்' என்பதற்கேற்ப, ஓயாமல் கழகத்தின் வெற்றிக்காக உழைத்த ரத்தத்தின்
ரத்தமான, என் உயிரினும் மேலான, எனது அருமை கழக உடன் பிறப்புகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள ஏழு சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.



தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி ! Tamilnadu ADMK


Maalaimalar ePaper 19-MAY-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  19-MAY-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ePaper       <<<<<<<

=======================================================

திங்கள், 16 மே, 2016

Maalaimalar ePaper 16-MAY-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  16-MAY-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ePaper   <<<<<

=======================================================

திங்கள், 9 மே, 2016

Maalaimalar ePaper 09-MAY-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  09-MAY-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !



=======================================================

வெள்ளி, 6 மே, 2016

Maalaimalar ePaper 06-MAY-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  06-MAY-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !



=======================================================

புதன், 4 மே, 2016

TN Assembly Seat Names தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளும் சுவாரசியமான பெயர்களும்!

சட்டமன்றத் தொகுதிகளும் சுவாரசியமான பெயர்களும்! குடிகள் 8 ஆலங்குடி மன்னார்குடி பரமக்குடி காரைக்குடி தூத்துக்குடி லால்குடி திட்டக்குடி குடியாத்தம் புரங்கள் 8 காஞ்சிபுரம் விழுப்புரம் சங்கராபுரம் ராசிபுரம் தாராபுரம் கிருஷ்ணராயபுரம் ராமநாதபுரம் பத்பநாமபுரம் கோட்டைகள் 6 நிலக்கோட்டை அருப்புகோட்டை புதுக்கோட்டை பாளையங்கோட்டை பட்டுக்கோட்டை கந்தர்வக்கோட்டை மங்கலம் 5 கண்டமங்கலம் தாரமங்கலம் சேந்தமங்கலம் சத்யமங்கலம் திருமங்கலம் பேட்டை 5 சைதாப்பேட்டை ராணிப்பேட்டை உளுந்தூர்ப்பேட்டை உடுமலைப்பேட்டை ஜோலார்ப்பேட்டை பாளையம் 5 மேட்டுபாளையம் குமாரபாளையம் ராஜபாளையம் கோபிசெட்டிபாளையம் கவுண்டம்பாளையம் நகர்கள் 5 அண்ணாநகர் விருதுநகர் திருவிகநகர் தியாகராயநகர் ராதாகிருஷணன்நகர் நல்லூர் 5 சிங்காநல்லூர் சோளிங்கநல்லூர் மணச்சநல்லூர் கடையநல்லூர் வாசுதேவநல்லூர் கோவில்கள் 4 வெள்ளக்கோவில் சங்கரன்கோவில் நாகர்கோவில் காட்டுமன்னார்கோவில் குளங்கள் 4 பெரியகுளம் ஆலங்குளம் மடத்துக்குளம் விளாத்திகுளம் பாக்கம் 4 சேப்பாக்கம் அச்சரப்பாக்கம் கலசப்பாக்கம் விருகம்பாக்கம் 4 அறுபடைவீடு பழநி திருத்தணி திருபரங்குன்றம் திருசெந்தூர் பாடிகள் 4 காட்பாடி குறிஞ்சிப்பாடி எடப்பாடி வாணியம்பாடி பட்டிகள் 4 ஆண்டிப்பட்டி கோவில்பட்டி உசிலம்பட்டி பாப்பிரெட்டிப்பட்டி துறைகள் 4 பெருந்துறை மயிலாடுதுறை துறைமுகம் துறையூர் கிரிகள் 3 புவனகிரி சங்ககிரி கிருஷ்ணகிரி குறிச்சிகள் 3 மொடக்குறிச்சி அரவக்குறிச்சி கள்ளக்குறிச்சி கோடுகள் 3 திருச்செங்கோடு விளவங்கோடு பாலக்கோடு வேலூர் 3 வேலூர் பரமத்திவேலூர் கீழ்வேலூர் மலைகள் 2 விராலிமலை அண்ணாமலை கல் 2 நாமக்கல் திண்டுக்கல் பாறைகள் 2 வால்பாறை மணப்பாறை காடுகள் 2 ஆற்காடு ஏற்காடு வாக்கம் 2 புரசைவாக்கம் வில்லிவாக்கம் கோணம் 2 கும்பகோணம் அரக்கோணம் பூண்டிகள் 2 திருத்துறைப்பூண்டி கும்மிடிபூண்டி பரங்கள் 2 சிதம்பரம் தாம்பரம் வரம் 2 மாதவரம் பல்லாவரம் வேலிகள் 2 திருநெல்வேலி நெய்வேலி காசி 2 தென்காசி சிவகாசி ஆறுகள் 2 செய்யாறு திருவையாறு ஏரிகள் 2 பொன்னேரி நாங்குநேரி குப்பம் 2 கீழ்வைத்தான்குப்பம் நெல்லிக்குப்பம் பவானி 2 பவானி பவானிசாகர் மதுரை 2 மானாமதுரை மதுரை ஒரே பட்டினம் நாகபட்டினம் ஒரே சமுத்திரம் அம்பாசமுத்திரம் நல்லநிலம் நன்னிலம் ஒரே கன்னி கன்னியாகுமரி ஒரே மண்டலம் உதக மண்டலம் ஒரே நாடு ஒரத்தநாடு ஒரே புரி தர்மபுரி ஒரே சத்திரம் ஓட்டன் சத்திரம் ஊர்கள் பல திருபோரூர் கூடலூர் வானூர் அரியலூர் உளுந்தூர் மேலூர் தஞ்சாவூர் சாத்தூர் முதுகுளத்தூர் திருவாரூர் ஆலந்தூர் செய்யூர் உள்பட 40க்கு மேல்