வியாழன், 21 ஜூலை, 2011

Hillary Clinton on Srilanka ஹில்லாரி கிளிண்டன் & ஜெயலலிதா



20July2011

இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் அந்த மக்களின் நீண்டகால அபிலாஷையான நிரந்தரமான அரசியல் உரிமைகள் ஆகியவற்றுக்கு அமெரிக்கா உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.




இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஹிலாரி கிளின்டன் நேற்றைய தினம் சென்னைக்கு வந்திருந்தபோது தமிழக முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். இதன்போதே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இதன்போதும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
 
 

இலங்கை மக்கள் அனைவரும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இன்று சென்னையில் வலியுறுத்தினார்.

1)


2)




3)


4)





கருத்துகள் இல்லை: