உதயன் ePaper 24June2012
-----------------------------------------------------
ஐக்கிய நாடுகள்
மனித உரிமைகள் சபையை இலங்கை அரசு மதிப்ப தில்லை என்ற குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. இலங்கையில் நடை பெறும் பல்வேறு மனித உரிமை மீறல்கள்
தொடர்பில் கேள்விகளை எழுப்பும் ஐ.நா. மனித உரிமைச் சபைக்கு இலங்கை அரசு
உரிய பதில்களை வழங்குவதில்லை என ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும்
சபையின் 20 ஆவது கூட்டத் தொடரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சபையின் சிறப்பு அறிக்கையாளர் குழுவே
இந்தக் குற்றச்சாட்டை இலங்கை மீது சுமத்தியிருக்கிறது. நடைபெற்றுவரும் ஐ.நா
மனித உரிமைகள் சபையின் 20ஆவது கூட்டத் தொடரில், கருத்துச் சுதந்திரம்,
சட்டத்துக்குப் புறம்பான செயற்பாடுகள் தொடர்பிலான மூன்று வெவ்வேறு
அறிக்கைகள், ஐ.நாவின் சிறப்பு வல்லுநர்கள் குழுவினால் சமர்ப்பிக்
கப்பட்டிருந்தன.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக