http://www.euthayan.com/indexresult.php?id=17899&thrus=0
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின்
கடைசி மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு
பதுங்குகுழி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட பின்னரே
சுட்டுக்கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தும் புதிய ஒளிப்படங்கள்
வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஒளிப்படங்களை பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளேடு மற்றும் இந்தியாவின் ‘தி இந்து‘ நாளேடு என்பன வெளியிட்டுள்ளன.
‘சனல் 4‘ தொலைக்காட்சிக்கு கிடைத்த இந்த
ஒளிப்படங்களை, ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ காணொலி ஆவணப்படங்களை இயக்கிய
கல்லும் மக்ரே, இந்த ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.
ஒரே ஒளிப்படக்கருவியால், சில
மணிநேரங்களுக்குள் எடுக்கப்பட்ட பல படங்களில், விடுதலைப் புலிகளின் தலைவர்
பிரபாகரனின் 12 வயதான கடைசி மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படைகளின்
காவலில் பதுங்குகுழி ஒன்றில் உயிருடன் அமர்ந்திருக்கும் காட்சியும், சில
மணி நேரங்களின் பின்னர், அவர் நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து
கிடக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இந்த ஒளிப்படங்கள் 2009 மே மாதம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் எடுக்கப்பட்டவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக