வியாழன், 7 ஆகஸ்ட், 2014

WARCRIMES : LANKA போர்க்குற்ற ஆதாரங்களை அனுப்ப மின்னஞ்சலை வெளியிட்டது ஐ.நா.


இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக தகவல்களை சமர்ப்பிக்க விரும்புவோர் மின்னஞ்சல் ஊடாக அதனை பகிர்ந்துகொள்ளலாம் என ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் இணையத் தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு -

இலங்கை குறித்து விசாரணை செய்யும் குழுவினர் அரச மற்றும் சிவில் சமூகத்தினரின் அறிக்கைகள் உட்பட இதுகுறித்த சகல விவரங்களையும் ஆவணங்களையும் ஆராய்வர்.

பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்கள், உயிர் தப்பியவர்களின் சாட்சியங்கள் மற்றும் குற்ற வாளிகளின் வாக்குமூலங்கள்
உட்பட அனைத்து விபரங்களும் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படும்

செய்மதி புகைப்படங்கள், நம்பகத் தன்மை மிகுந்த விடியோக்கள், புகைப் படங்கள் ஏணைய ஆவணங்கள் போன்றவற்றிலிருந்து தகவல்கள் பெறப்படும் தகவல்களைச் சேகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக எந்த நாடும், அமைப்பும், தனிநபரும் தகவல்களை வழங்குவதை மனித உரிமை ஆணைக்குழு வரவேற்கிறது.

மின்னஞ்சல் மூலமாக தகவல்களை வழங்க விரும்புவோர் – 

oisl_submissions@ohchr.org
 
 என்ற முகவ ரிக்கு அதனை அனுப்பலாம்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்த பின்னர், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயும் நடவடிக்கைகள் இடம்பெறும்.

இலங்கை அரச அதிகாரிகளையும், ஏனையவர்களையும் சந்திப்பதற்காகவும், தொடர்புபட்ட தகவல்களை ஆராய்வதற்காகவும் விசாரணை குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கு மாறு மனித உரிமை ஆணையாளர் அராங்கத்திடம் வேண்டுகோள் விடுப் பார்.

தனது பணிகளை முன்னெடுக்கும் வேளை விசாரணைக் குழுவினர் – சுதந்திரம்,பக்கச்சார்பின்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை, யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமை போன்ற கொள்கைகளைப் பின்பற்றுவர்.
விசாரணைகுழுவினர் சாட்சி மற்றும் பாதிக்கப்பட்டவர் பாதுகாப்பு குறித்து நிலவும் சகல கரிசனைகளுக்கும் – தீர்வுகாண்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பர்.

அதேபோன்று, இலங்கை அரசும் சாட்சியங்களையும் ஐ.நாவுடன் தகவலை பரிமாறுவோரையும் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


---------
Thanks Sudar Oli newspaper

http://sudaroli.com/?p=1232



 

கருத்துகள் இல்லை: