புதன், 10 செப்டம்பர், 2014

கொலை வழக்கில் ஆஜராவதிலிருந்து டக்ளஸ் தேவானந்தாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு

கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த கொலை தொடர்பாக, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், பின்னர் நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் டக்ளசுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எனினும், தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

அதில், தற்போது இலங்கை அமைச்சராக இருக்கும் தன்னிடம் வீடியோ ஃகான்பரசிங் மூலம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற சென்னை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், கொழும்பில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மூலம் வீடியோ கான்பரன்சில் ஆஜராக வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டும் தேவானந்தா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
- See more at: http://www.thinakkural.lk/article.php?local/fvkuxcesau32116b620aedfa11517cghrt4cf153467265629501dd61yeb4w#sthash.wloXgxby.dpuf

கருத்துகள் இல்லை: