ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

வடநாட்டுக் கட்சிகள்

காங்கிரசானாலும், காவி கும்பலானாலும்சரி இன்றுவரை தமிழக அரசியலில் அவர்களுக்கு போட்டியாக இருப்பது தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளே, மற்றைய கட்சிகளை அவர்கள் ஒரு பொருட்டாக எண்ணுவதே கிடையாது. பணத்தையோ, பதவியையோ கொடுத்தால் வாலாட்டும் ஒரு விலங்காகத்தான் மற்றைய அரசியல் கட்சிகளை அவர்கள் கணித்து வைத்துள்ளனர்,

இன்னும் சொல்லப்போனால் சிறுசிறு அமைப்புகளுக்கு இருக்கும் மரியாதை கூட இந்த தலைவர்களின்(வைகோ, ராமதாசு,திருமா,நெடுமா) அமைப்புகளுக்கு இல்லை என்பதே உண்மை.

அவ்வகையில் தமிழகத்தில் கோலோச்சுவதற்குத் தடையாய் உள்ள தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் அழிவிலேயே தாங்கள் வளர முடியும் என்பதில் வடநாட்டுக் கட்சிகள் தெளிவாயுள்ளன.

இவ்விரு கட்சிகளுக்கும் பெரியதாக தமிழக நலனிலோயோ அல்லது தமிழர் நலனிலேயோ அக்கரையில்லை என்றாலும்கூட, ஓட்டரசியல் அடிப்படையில் வடநாட்டுக் கட்சிகள் வளரவேண்டுமானால் இவர்களை வீழ்த்துவது தேவையானதாக உள்ளது...

கருத்துகள் இல்லை: