சனி, 30 ஆகஸ்ட், 2014

Maalaimalar ePaper 30-AUG-2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  30-AUG-2014  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

அல்லது    இங்கே படிக்கவும் !

=============================================

பத்து மலை கோவில் நிலத்தை விற்க முயற்ச்சி ??

https://www.facebook.com/mytamilmalar?fref=ts

Sudar Oli 30AUG2014 சுடர் ஒளி

https://www.facebook.com/pages/Sudar-Oli/241113479414219?ref=ts&fref=ts

சுடர் ஒளி

Tamil Nesan Malaysia ePaper 30AUG2014 தமிழ் நேசன்

https://www.facebook.com/tamilnesan1924?fref=ts

 தமிழ் நேசன்

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

Maalaimalar ePaper 29-AUG-2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  29-AUG-2014  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

அல்லது    இங்கே படிக்கவும் !

=============================================

Sudar Oli ePaper 29AUG2014 சுடர் ஒளி

சுடர் ஒளி

“ஜனாதிபதி மஹிந்தராஜபக்­ச தலைமையிலான அரசு தமிழருக்குத் தீர்வு வழங்காமல் காலத்தை இழுத் தடித்து அவர்களை அடக்கி – ஒடுக்கி சர்வாதிகார ஆட்சியை நடத்துகின்றபடியால்தான் தீர்வு விடயம் தொடர்பில் சர்வதேசத்தை நாடினோம்” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

“”சர்வதேசத்தின் உதவியுடன் தமிழருக்கான தீர்வை எந்த வழியில் – எப்படிப் பெறலாம் என்று எமக்குத் தெரியும். இது தொடர்பில் அமைச்சர்கள் எமக்குப் பாடம் புகட்டத் தேவையில்லை” என்றும் கூட்டமைப்பு கூறியுள்ளது.
“2011 – 2012இல் நடைபெற்ற இரு தரப்புப் பேச்சை அரசுதான் குழப்பியடித்தது. இறுதியில் 3 தடவைகள் பேச்சு மேசைக்கு வராமல் எம்மை ஏமாற்ற அரசு முயன்றது. எனவே, இனிமேல் இருதரப்புப் பேச்சு நடைபெறுவதாக இருந்தால் அரசுதான் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவேண்டும். அவ்வாறு அரசு அறிவித்தால் அதனை நாம் பரிசீலனை செய்து இறுதி முடிவை அறிவிப்போம்” என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான இருதரப்புப் பேச்சுக்கு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு முறையாக கோரிக்கை விடுத்தால், அது பற்றி பரிசீலிப்பதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­வே தரவேண்டும் என்றும், வெளிநாடுகளிடம் முறையிடுவதால் தீர்வு எதுவும் கிடைக்கப்போவ தில்லை என்றும்

நேற்றுமுன் தினம் பூநகரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பஸில் ராஜபக்ச­ கூறியிருந்தார்.

இவ்விரு அமைச்சர்களினதும் கருத்துகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரிடம் நேற்று “சுடர் ஒளி’ வினவியது. இதன்போதே மேற்படி விடயங்களை அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
மாவை சேனாதிராஜா எம்.பி.

“2009இல் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பேன் என்று சர்வதேசத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ வாக்குறுதியளித்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் இதுவரை நிறைவேற்றவில்லை.

2011ஆம், 2012ஆம் ஆண்டுகளில் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பலசுற்றுப் பேச்சுகள் நடைபெற்றன. இதன்போது தீர்வுத் திட்டம் ஒன்றை எழுத்துமூலமாக அரசிடம் சமர்ப்பித்திருந்தோம். ஆனால், அதற்குப் பதிலை வழங்காமல் காலத்தை இழுத்தடிக்கும் நோக்கில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்துப் பேச்சைக் குழப்பியடித்தது அரசு.
இந்தத் தெரிவுக்குழுவில் பங்கேற்றி நாம் ஏமாறத் தயாரில்லை என்று இருதரப்புப் பேச்சுக் குழம்பிய கையோடு ஜனாதிபதியிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நேரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழருக்குத் தீர்வு வழங்காமலும், அவர்களை அடக்கி d ஒடுக்கி மஹிந்த அரசின் சர்வாதிகார ஆட்சி தொடர்ந்தபடியாலும் தீர்வு விடயம் தொடர்பில் வெளிநாடுகளை நாம் நாடினோம்.
எனவே, வெளிநாடுகளின் உதவியுடன் தமிழருக்கான தீர்வை எந்த வழியில் d எப்படிப் பெறலாம் என்று எமக்குத் தெரியும். அந்த வல்லமை தமிழருக்கு இருக்கின்றது. இது தொடர்பில் ஜனாதிபதியின் சகோதரர் அமைச்சர் பஸில் உட்பட அமைச்சர்கள் எமக்குப் பாடம் புகட்டத் தேவையில்லை.

அதேவேளை, மீண்டும் இருதரப்புப் பேச்சுக்கு அரசு விரும்பினால் உத்தியோகபூர்வமாக எமக்கு அறிவிக்கவேண்டும். அவ்வாறு அரசு அறிவித்தால் கூட்டமைப்பின் தலைவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய பின்னர் இது குறித்து நாம் கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்போம்.

எனினும், இலங்கை d இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13ஆவது அரசமைப்பு திருத்தத்தையே முழுமையாக அமுலாக்கப் பின்னடித்து அதில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பிடுங்கி வைத்திருக்கும் அரசு தமிழருக்கு எப்படித் தீர்வை வழங்கப்போகின்றது என்பது சந்தேகமே” d என்று தெரிவித்தார் மாவை சேனாதிராஜா எம்.பி.சுமந்திரன் எம்.பி.

“2011இல் அரசின் அழைப்புக்கிணங்கவே நாம் பேச்சுமேசைக்குச் சென்றோம். 2011 ஆம் ஜனவரி தொடக்கம் 2012 ஜனவரி வரை இரு தரப்புப் பேச்சுகள் தொடர்ந்தன. ஆனால், 2012 ஜனவரி இறுதியில் 3 தடவைகள் பேச்சு மேசைக்கு அரசு வரவில்லை. பேச்சு நடைபெறவிருந்த இடத்திற்கு நாம் சென்று திரும்பி வந்தோம்.
ஆனால், குறித்த இடத்திற்கு வராமல் பேச்சைக் குழப்பியடித்தது அரசு.
எம்மை அன்று ஏமாற்ற முயன்ற அரசு, தற்போது இருதரப்புப் பேச்சுக்கு எம்மிடம் இருந்து முறையான கோரிக்கையை எதிர்பார்ப்பதன் அர்த்தம் குறித்து எமக்குப் புரியவில்லை.

இருதரப்புப் பேச்சுக்கு முதலில் அழைத்ததும் அரசு; இறுதியில் குழப்பியடித்ததும் அரசு. எனவே, இனிமேல் இரு தரப்புப் பேச்சு நடைபெறுவதாக இருந்தால் அரசுதான் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவேண்டும். அவ்வாறு அரசு அறிவித்தால் அதனை நாம் பரிசீலனை செய்து இறுதி முடிவை அறிவிப்போம். இதுதான் எமது நிலைப்பாடு” – என்றார் சுமந்திரன் எம்.பி.

Tamil Nesan epaper 29AUG2014 தமிழ் நேசன் மலேசியா

https://www.facebook.com/tamilnesan1924?fref=tsதமிழ் நேசன் - மலேசியா

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில், யாகம் நடத்திய திருச்செந்தூர் அர்ச்சகர்கள் ????

மகிந்தவின் வீட்டில் யாகம் செய்தவர்கள் தொடர்பில் விசாரணை வேண்டும் : தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள்
news

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில், யாகம் நடத்திய திருச்செந்தூர் அர்ச்சகர்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்’ என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணியினர், திருநெல்வேலி சரக டிஐஜியிடம் மனு கையளித்துள்ளனர்.

அதன் ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு, வழக்கறிஞர் ம.சு.சுதர்சன் (மதிமுக), ததேமு மாவட்ட செயலாளர் ஈ.தமிழீழன், தமமுக மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் உள்ளிட்டோர் அளித்த மனுவில்.

தமிழக இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகர்கள் குழு, 20.7.2014 அன்று இலங்கைக்கு சென்று  இலங்கை ஜனாதிபதியின் இல்லத்தில், ‘சத்ரு சம்கார திரிசத் செப’ யாகம் செய்துள்ளனர்.

அதன்பின், இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திரும்பியிருக்கிறார்கள். இந்த சம்பவம் பேரதிர்ச்சியை உள்ளாக்கியிருக்கிறது.

அர்ச்சகர்களின் இச் செயல்பாடுகள் முதல்வர் ஜெயலலிதாவின் தமிழீழ மக்கள் சார்பான நடவடிக்கைகளுக்கு எதிராகவும், முதல்வரின் முயற்சிகளை திசைதிருப்பும் வகையிலும் உள்ளது.

இதில் தனிக்கவனம் செலுத்தி, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=116053361228360538#sthash.QOfHxrIs.dpuf

Sudar Oli 28AUG2014 சுடர் ஒளி

https://www.facebook.com/pages/Sudar-Oli/241113479414219?fref=ts

Maalaimalar ePaper 28-AUG-2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  28-AUG-2014  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

அல்லது    இங்கே படிக்கவும் !

=============================================

'Senkodi வீரமங்கை' செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று.

ராஜீவ்காந்தி வழக்கில் தூக்குத் தண்டணை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் உயிரைக் காக்க தன்னுயிரை தியாகம் செய்த 'வீரமங்கை' செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு 2011 ம் ஆண்டு இதே தினத்தில் தூக்குத் தண்டணையை நிறைவேற்ற இந்திய அரசு தீர்மானித்திருந்தது.

இவர்களுக்கான தூக்குத் தண்டனையை தடுத்து அம் மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த செங்கொடி (வயது 27 ) என்ற வீரமங்கை காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி  ஈகைச்சாவடைந்தார்.

இந்நிலையில் 3 பேரது உயிரையும் காக்க அரசுக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=127193374328530769#sthash.ubmMAvMc.dpuf
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டணை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் உயிரைக் காக்க தன்னுயிரை தியாகம் செய்த 'வீரமங்கை' செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு 2011 ம் ஆண்டு இதே தினத்தில் தூக்குத் தண்டணையை நிறைவேற்ற இந்திய அரசு தீர்மானித்திருந்தது.
 
இவர்களுக்கான தூக்குத் தண்டனையை தடுத்து அம் மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த செங்கொடி (வயது 27 ) என்ற வீரமங்கை காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி  ஈகைச்சாவடைந்தார்.
 
இந்நிலையில் 3 பேரது உயிரையும் காக்க அரசுக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=127193374328530769#sthash.ubmMAvMc.dpuf

Tamil Nesan epaper 28AUG2014 தமிழ் நேசன்https://www.facebook.com/tamilnesan1924?fref=ts

Tamil Nesan epaper 28AUG2014  தமிழ் நேசன்

புதன், 27 ஆகஸ்ட், 2014

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

Sudar Oli 26AUG2014 சுடர் ஒளி

https://www.facebook.com/pages/Sudar-Oli/241113479414219?fref=ts

Maalaimalar ePaper 26AUG2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  26-AUG-2014  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

அல்லது    இங்கே படிக்கவும் !

Thiru V.K 'தமிழ்த் தென்றல்' திரு.வி.க. பிறந்த நாள் 26.8.1883

'தமிழ்த் தென்றல்' திரு.வி.க. பிறந்த நாள் 26.8.1883

ஆங்கிலம் எதற்கு! தமிழ் மொழிக்கு உழைத்திடுவீர்!

பிரித்தானியர் ஆட்சியில் ஆங்கிலவழிக் கல்வி திணிக்கப்பட்ட போது பார்ப்பனர்கள் ஆங்கிலம் படித்து உயர் பதவி பெற்றனர். அதன் வழியில் திராவிட இயக்கமானது தமிழர்களை ஆங்கிலம் படிக்கத் தூண்டியது. திராவிட இயக்கம் கற்பித்த பார்ப்பனரைப் போல பார்த்தொழுகும் பண்பாட்டிற்கு அடிமைப்பட்ட தமிழர்கள் இன்றுவரை ஆங்கில மோகத்திலிருந்து விடுபட மறுக்கின்றனர்.

உலகமயத்தை ஏற்றுச்செயல்படும் இன்றைய இந்திய வல்லரசுக் கொள்கையாலும் இந்திக்கும், ஆங்கிலத்திற்கும் ஏற்றமேயொழிய தமிழுக்கு இல்லை. தமிழ் தொடர்ந்து புறக்கணிப்படும் இழிநிலை கண்டு 1918ஆம் ஆண்டு முதலே தமிழ்த்தென்றல் திரு.வி.க. வேதனை அடைந்தார். அவர் நவசக்தி ஏட்டில் எழுதிய கீழ்க்கண்ட கட்டுரை இன்றும் தமிழருக்கு பொருத்தப்பாடாக உள்ளது. அது பின்வருமாறு:

"மனிதர்களுக்கு இருக்க வேண்டிய பொதுக்குணங்கள் பல. அவைகளுள் ஒன்று அபிமானமென்பது. அவை தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் என்பன. எவனிடத்தில் பாஷாபிமானம் உரம் பெற்று நிற்கிறதோ அவனிடத்து ஏனைய ஈரபிமானமும் நிலைபெற்று விளங்கும். பாஷை வளர்ச்சியே தேச வளர்ச்சிக்கும் சமய வளர்ச்சிக்கும் மூலமாயிருப்பது. ஆங்கில பாஷை இங்கிலாந்துக்கு உரியது. அம்மொழி எங்கெங்கே பரவி நிற்கின்றதோ அங்கங்கே ஆங்கிலேயர் வழக்க ஒழுக்கங்களும் நிலவி வருகின்றன.

தமிழ்நாட்டு மேதாவிகள் உபந்நியசிக்கும் போது மேல்நாட்டுக் கவிவாணர் உரைகளையே மேற்கோளாக காட்டுகின்றனர். அவர்கள் உள்ளம் ஆங்கிலமயமாக மாறியிருக்கிறது. நடை, உடை, பாவனை அங்ஙனே மாறுகின்றன. இவைகட்குக் காரணம் யாது? ஆங்கில மொழிப்பயிற்சியால் அவர்தம் உட்கரணங்கள் யாவும் அம் மொழியில் தோய்ந்து விடுவதேயாம். இதனால் மனிதன் வழக்க ஒழுக்கங்களை மாற்றும் ஆற்றல் மொழிகளுக்கு உண்டு என்பது நன்கு விளங்கும்.

நாம் தமிழகத்தாராலின், தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றி யோசித்தல் வேண்டும். தமிழில் உயரிய நூல்கள் பல இருக்கின்றன. இப்போது திருவள்ளுவரைப் படிப்பவர் யார்? தொல் காப்பியத்தைத் தொடுப்பவர் யார்? சிலப்பதிகாரத்தை சிந்திப்பவர் யார்? மணிமேகலையை மதிப்போர் யார்? பத்துப் பாட்டை படிப்போர் யார்? யாருமில்லையே? பண்டைக் காலத்தில் தமிழ் மக்களிடையில் சாதி வேற்றுமை பரவினதில்லை. 'பிறப்பொக்கும் எல்லா உயிருக்குஞ்' என்னும் வாய் மொழியை உற்று நோக்க. வயிற்றின் கொடுமைக்காக ஜனங்கள் ஆங்கில மொழியைப் பயில வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டார் தமிழை மறந்தார்கள். ஆங்கிலமயமாக விளங்குகிறார்கள். அதனால் தேச வழக்க ஒழுக்கங்களும் தேசாபிமானமும் அற்றுப் போகின்றன. பண்டைத் தமிழர் வழக்க ஒழுக்கங்கள் நிலவ வேண்டுமாயின் முதலாவது தமிழ்மொழி வளர்ச்சிக்கு உழைத்தல் வேண்டும். இப்பொழுது தமிழர்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? உத்தியோக சாலைகளிலும், சட்ட நிருவாக சபைகளிலும் தமிழே வழங்கப்பட வேண்டுமென்பது நமது கோரிக்கை. தமிழ்ச் சகோதரர்களே! தமிழ்மொழியிலேயே அரசியல் முறைகள் நடைபெற வேண்டிய வழிகளைத் தேடுங்கள். தமிழ்த் தாயின் நலத்தை நாடோறுங் கோரி இறைவனை வழிபடுங்கள்.
-திரு.வி.க.

(1918ஆம் ஆண்டில் திரு.வி.க. அவர்கள் 'தேசபக்தன்' ஏட்டில் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்த கட்டுரைச் சுருக்கம்)

நன்றி - கதிர் நிலவன், தூய தமிழ்ச்சொற்கள்

இலவம் - iLavam - The Brand of Nation

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

Nallur Murugan Temple : அரோகரா கோஷம் ஒலிக்க நல்லூரானுக்கு இன்று தேர்

வரலாற்று சிறப்புடன்  விளங்கும் நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இலட்சக் கணக்காண பக்தர்கள் புடைசூழ இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை 6மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து 7மணியளவில் கந்தன் தேர் ஏறி வீதி வலம் வந்தார்.நாடெங்கிலும் இருந்து இலட்சக் கணக்கான பக்தர்களின்  அரோகரா கோசத்துடன் வருடாந்த தேர் உலா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.http://onlineuthayan.com/News_More.php?id=380233362324831419

http://onlineuthayan.com/News_More.php?id=380233362324831419
- See more at: Online Uthayan
----------------------------------------------------------

Thanks : Sudar Oli

வரலாற்று சிறப்புடன்  விளங்கும் நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இலட்சக் கணக்காண பக்தர்கள் புடைசூழ இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை 6மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து 7மணியளவில் கந்தன் தேர் ஏறி வீதி வலம் வந்தார்.நாடெங்கிலும் இருந்து இலட்சக் கணக்கான பக்தர்களின்  அரோகரா கோசத்துடன் வருடாந்த தேர் உலா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=380233362324831419#sthash.wpe8sWSL.dpuf

Maalaimalar ePaper 24AUG2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  24-AUG-2014  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

அல்லது    இங்கே படிக்கவும் !

Sudar Oli ePaper 24AUG2014 சுடர் ஒளி

https://www.facebook.com/pages/Sudar-Oli/241113479414219?fref=ts
சுடர் ஒளி

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - இந்திய வெளிவிவகார அமைச்சர் - சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ;மா சுவராஜுக்கும் இடையிலான சந்திப்பு 22-08-2014 புதுடில்லியில் இடம்பெற்றது.

 =============================
இந்தியா சென்றுள்ள இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு சற்று முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவரஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. 
 
சுமார் ஒன்றரை மணி நேரம் இடம்பெற்ற இச் சந்திப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டதாகவும் அப்போது இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த சந்திப்பு தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில்:-
 
இலங்கை தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுஷ்மா சுவராஜிடம் முறையிட்டதாக தெரிவித்தார். 
 
சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா, :-
 
இலங்கையில் உள்ளவர்கள் பலர் இந்தியாவை பிறப்பிடமாக கொண்டவர்கள். அவர்களின் கலை, கலாசாரம் ஆகியவை இந்தியாவை ஒட்டியே உள்ளது. எனவே, அவர்களுக்காக உதவ வேண்டிய பெரிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது,' என்றார்.
 
இதேவேளை இக் குழுவினர் நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வடமாகாணச்சபை அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=893643359022250212#sthash.BPht6aB9.dpuf

இந்தியா சென்றுள்ள இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு சற்று முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவரஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

சுமார் ஒன்றரை மணி நேரம் இடம்பெற்ற இச் சந்திப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டதாகவும் அப்போது இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில்:-

இலங்கை தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுஷ்மா சுவராஜிடம் முறையிட்டதாக தெரிவித்தார்.

சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா, :-

இலங்கையில் உள்ளவர்கள் பலர் இந்தியாவை பிறப்பிடமாக கொண்டவர்கள். அவர்களின் கலை, கலாசாரம் ஆகியவை இந்தியாவை ஒட்டியே உள்ளது. எனவே, அவர்களுக்காக உதவ வேண்டிய பெரிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது,' என்றார்.

இதேவேளை இக் குழுவினர் நாளை 23-AUG-2014 இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வடமாகாணச்சபை அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
Thinakkural ePaper 22AUG2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/
தினக்குரல்

Maalaimalar ePaper 22AUG2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  22-AUG-2014  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

அல்லது 

   இங்கே படிக்கவும் !

Tamil Nesan ePaper22AUG2014 தமிழ் நேசன்

https://www.facebook.com/tamilnesan1924?fref=ts

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

Tamil endangered language - அழிந்து வரும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம் !

உலகின் தற்போதைய மக்கள் தொகை 724 கோடி. உலகின் மக்கள் தொகை வேகமாகப் பெருகிவருகிறது. ஆனால், உலக மக்களின் பல மொழிகள் அதைவிட வேகமாக அருகி மறைந்து வருகின்றன. சொந்த மக்களால் கைவிடப்படுதல், ஆதிக்க மொழிகளால் கழுத்து நெறிக்கப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கிவைத்தல், தங்களது தாய்மொழியை மதிப்பு குறைந்ததாக நினைத்தல் எனும் முதன்மையான நான்கு காரணங்களால் மொழிகள் மரணமடைகின்றன.

உலக அளவில் இப்போதைக்கு 7,105 மொழிகளும், அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 880 மொழிகளும் பயன்பாட்டில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் 1,000 க்கும் குறைவான மக்கள் தொகையினரால் சுமார் 2,000 மொழிகள் பேசப்படுவதாகவும், இந்திய அளவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துவிட்டதாகவும் மேலும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

உலகின் அனைத்து மொழிகளும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் அவை உள்ளிட்ட உலகளாவிய மொழி நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. ஆண்டுதோறும் பெப்ரவரி 21 ஆம்  திகதி உலக தாய்மொழி தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கும் 7,105 மொழிகளில் ஆங்கிலம், சீனம், ரஷ்யன், ஸ்பெயின் உள்ளிட்ட வெறும் 12 மொழிகள்தான் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படுகிற மொழிகளாக இருக்கின்றன.

இந்த 12 மொழிகளில் நமது தமிழ்மொழியும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், பிறநாடுகளிலுமாக உலக அளவில் தமிழர்கள் 10 கோடி பேர் இருக்கலாம்.

எனினும், தமிழர்களிடையே தமிழ்மொழி எந்த அளவுக்குப் பேச்சு மொழியாகவும், பயன்பாட்டு மொழியாகவும் இருக்கிறது எனும் ஒரு மிகப்பெரிய கேள்வி நம்முன் எழுகிறது. தமிழர்களின் தாய்மொழியான தமிழ் வெறும் வாய்மொழியாக இருக்கிறதே தவிர, அது அவர்களின் வாழ்க்கை மொழியாக இல்லை.

உலக அளவில் இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்துவிடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ்மொழி 8 ஆம் இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சவையின் யுனெஸ்கோ 10 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்திருக்கிறது.

பயன்படுத்தப்படாத நிலை, வேகவேகமாக வேற்றுமொழிச் சொற்கள் கலந்துவிடுகிற கலப்படநிலை போன்ற அளவுகோள்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு தமிழ்மொழிக்கு இந்த 8 ஆம் இடம் வழங்கப்பட்டிருக்கிறது.

"தமிழை யாராலும் அழிக்க முடியாது. அது முன்தோன்றிய மூத்தமொழி, உயர்தனிச் செம்மொழி, இலக்கிய வளம் செறிந்த மொழி, இலக்கணங்களால் ஆனமொழி' என்றெல்லாம் சில அறிஞர்கள் பேசுவதுண்டு. அத்தகையப் பேச்சு அவர்களது மொழிப் பற்றின் விளைவாக எழுகின்ற ஒரு நம்பிக்கைதானேயன்றி சமூக அறிவியல் அல்ல. பயன்படுத்தப்படாத எதுவொன்றும் படிப்படியாக மறைந்து அழிந்துவிடும் என்பது மொழிகளுக்கும் பொருந்தும்.

தாய்மொழியாக இருந்தும்கூட இன்றைய நிலையில் தமிழ்நாட்டில், தமிழர்களாலேயே தள்ளி நிறுத்தப்படுகிற ஒரு மொழியாகத்தான் தமிழ் இருக்கிறது. தமிழின் பெருமைகள் மேடைகளில் முழங்கப்பட்ட அளவுக்கு அதன் வளர்ச்சிக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை, நிரந்தரமாக அதைப் பாதுகாத்து நிலைபெறச் செய்வதற்கான வழிமுறைகளும் காணப்படவில்லை.

"எங்கும் தமிழ்' "எதிலும் தமிழ்' என்பதெல்லாம் அழகான முழக்கங்களாக மட்டுமே இன்றைக்கு நம்மிடம் இருக்கின்றன. வாழவைக்காமல் "வாழ்க' "வாழ்க' என்று மொழியிடம் விண்ணப்பம் செய்பவர்களாக நாம் இருக்கிறோம். ஒரு காலத்தில், இரண்டு தமிழர்களுக்கிடையே நிகழும் உரையாடல்களில் ஆங்கிலத்தைக் கலப்பது என்பது ஒரு கலாசாரமாகத் தொடங்கியது. இப்போது அது கட்டாயமாகிவிட்டது.

"தமிழ் என்பது நமது மொழிதான். அதன் அருமை பெருமையெல்லாம் சரிதான். ஆனால், அது இன்றைய நமது வாழ்வியலுக்குப் பயன்படாது' போன்ற கருத்துகள் தொடர்ந்து விதைக்கப்பட்டு அவை இன்றைக்குப் பெரும்பாலானோரின் மனங்களில் ஆழமாக வேரூன்றி அகலக் கிளைவிரித்துப் பரவியிருக்கின்றன.

தயாரிக்கப்படுவது தமிழ்த்திரைப்படங்களாக இருந்தாலும், தமிழர்களே அவற்றின் நுகர்வோராக இருந்தாலும் அவற்றின் தலைப்புகள், பாடல்கள், உரையாடல்கள் போன்றவற்றில் கூச்சமின்றியும் தங்குதடையின்றியும் ஆங்கிலம் கலக்கப்படுகிறது. ஒரு திரைப்படத்திற்குத் தமிழில் பெயர் சூட்டினால் அப்படத்திற்கு அரசு வரிவிலக்கு அளிக்கிறது. ஆனால் அந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் வேறு எந்த மொழியில் இருந்தாலும் பரவாயில்லை என்ற நிலை இருக்கிறது. இது எந்த வகைப்பட்ட தமிழ் மீட்பு நடவடிக்கையோ தெரியவில்லை.

மொழியில் கலப்படம் செய்தால் அதற்காகத் தண்டனை அளிக்கின்ற பல உலக நாடுகளுக்கிடையே, கலப்படம் செய்யாமல் இருக்கிறவர்களுக்கு பொருளாதாரச் சலுகை அளிப்பவர்களாக, வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால் அதற்குக் கையூட்டுக் கொடுப்பவர்களாக நாம் இருக்கிறோம்.

வாழ்வின் மிக முதன்மையான கட்டங்களில் தமிழர்களுக்குத் தங்களது தாய்மொழியான தமிழ் நினைவுக்கு வருவதேயில்லை. வாழ்க்கைக்கும், வங்கிக்கணக்கு நடைமுறைகளுக்கும், வரவு  செலவு வணிகத்திற்கும் வருமானத்திற்கும் தமிழ் பொருந்தாது அல்லது பயன்படாது என்கிற அறிவியலுக்குப் புறம்பான தாழ்வுமனப்பான்மையே அதற்கான காரணங்களாக இருக்கின்றன.

எனவேதான் தமிழர்களின் கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, மருத்துவம் என்று அத்தனைத் துறைகளிலும் நிறுவனங்களின் பெயர்கள் மட்டும் வேறு ஒரு மொழியில், மிகவும் குறிப்பாக ஆங்கில மொழியில் பதிவு செய்யப்படுகின்றன.

அந்த வகையில் இன்று , தமிழ் மக்கள் பார்ப்பதற்கான திரைப்படங்களை "மூவிஸ்'களும், "தியேட்டர்ஸ்''களும், "ஸ்டுடியோ'களும் தயாரித்துத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் வாங்குவதற்கான பொருள்களை "அன்கோ'களும், "பிரதர்ஸ்'களும், "சன்ஸ்'களும், "டிரேடர்ஸ்'களும், "எண்டர்பிரைசஸ்'களும் விற்றுக்கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்களுக்குத் தேவையான பணத்தை "பெனிபிட்'களும்,
"சிட்பண்ட்'களும்
கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் தங்க நகைகளை பான்புரோக்கர்ஸ்கள் அடகு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்கள் பார்ப்பதற்கான தொலைக்காட்சிகளை நெட்வோர்க்குகளும் கம்யூனிகேஷன்களும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்கள் கேட்பதற்கான பாடல்களை ஆடியோக்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் நோய்களுக்கான மருந்துகளை மெடிக்கல்ஸ்கள் விநியோகித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் நோய்களை ஹாஸ்பிட்டல்ஸ்கள் குணப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்ப் பிள்ளைகளின் கல்வித் தேவைகளை மெட்ரிகுலேஷன்கள் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றன.

தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய பயணங்களை டிராவல்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்குத் தேவையான வேளாண்மை பொருட்களை அக்ரோ பார்ம்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தமிழர்களின் பசியை ஹோட்டல்களே போக்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறாகத்தான் துறை தோறும் தமிழ் முழக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்.

தமிழ்நாட்டில் சண்டைகள் தமிழிலும், அவற்றின் பொருட்டான வழக்குகள் வேறு ஒரு மொழியிலும் நடக்கின்றன. தங்களது வாழ்வின் முதன்மையான கட்டங்களில் தமிழை வளாகங்களுக்கு வெளியே நிற்க வைத்துவிடுகிறார்கள் தமிழர்கள்.
அந்த வகையில் நீதிமன்றங்களுக்கு வெளியேயும், கல்வி நிறுவனங்களுக்கு வெளியேயும், திருமண அரங்குகளுக்கு வெளியேயும், இசையரங்குகளுக்கு வெளியேயும், நிதி நிறுவனங்களுக்கு வெளியேயும், வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியேயும், வணிகச் செயல்பாடுகளுக்கு வெளியேயும் தமிழை கால்கடுக்க நிற்க வைத்து உள்ளே நுழைகிற தமிழர்கள், வேலை முடிந்தவுடன் வெளியே வந்து தங்களது தமிழைக் கட்டிப்பிடித்துக் கொண்டு குலவுகிறார்கள், மூச்சுவிட்டுக் கொள்கிறார்கள், இளைப்பாறிக்கொள்கிறார்கள், சிரித்துக் கொள்கிறார்கள். இதுதான் இன்றையத் தமிழர்கள் தங்களது தாய்மொழியான தமிழை வாழவைக்கும் முறையாக இருக்கிறது.

இன்றைய நிலையில், நாம் தமிழைத் தலைவர்களின் சொற்பொழிவுகளாகவும் திரையிசைப் பாடல்களாகவும் வசனங்களாகவும் கேட்கலாம். கவிதை, கதை, கட்டுரை, செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களாகப் படிக்கலாம்.
அதாவது தமிழைக் கேட்கலாம் படிக்கலாம். இந்த இரண்டு நிலைகளைத் தாண்டி வாழ்வின் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்கிற பேச்சுக்கே இப்போது இடமில்லை.

- நன்றி - ஜெயபாஸ்கரன்
ஜெயபாஸ்கரன்
http://www.thinakkural.lk/article.php?article/zampjchlfb32869ddb9dd5d869758yowqaee9a76bf217a2a3c54833pyglp#sthash.eMyor9Ab.dpufஉலகின் தற்போதைய மக்கள் தொகை 724 கோடி. உலகின் மக்கள் தொகை வேகமாகப் பெருகிவருகிறது. ஆனால், உலக மக்களின் பல மொழிகள் அதைவிட வேகமாக அருகி மறைந்து வருகின்றன. சொந்த மக்களால் கைவிடப்படுதல், ஆதிக்க மொழிகளால் கழுத்து நெறிக்கப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கிவைத்தல், தங்களது தாய்மொழியை மதிப்பு குறைந்ததாக நினைத்தல் எனும் முதன்மையான நான்கு காரணங்களால் மொழிகள் மரணமடைகின்றன.

உலக அளவில் இப்போதைக்கு 7,105 மொழிகளும், அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 880 மொழிகளும் பயன்பாட்டில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் 1,000 க்கும் குறைவான மக்கள் தொகையினரால் சுமார் 2,000 மொழிகள் பேசப்படுவதாகவும், இந்திய அளவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துவிட்டதாகவும் மேலும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

உலகின் அனைத்து மொழிகளும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் அவை உள்ளிட்ட உலகளாவிய மொழி நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. ஆண்டுதோறும் பெப்ரவரி 21 ஆம்  திகதி உலக தாய்மொழி தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கும் 7,105 மொழிகளில் ஆங்கிலம், சீனம், ரஷ்யன், ஸ்பெயின், இந்தி உள்ளிட்ட வெறும் 13 மொழிகள்தான் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படுகிற மொழிகளாக இருக்கின்றன. இந்த 13 மொழிகளில் நமது தமிழ்மொழியும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், பிறநாடுகளிலுமாக உலக அளவில் தமிழர்கள் 10 கோடி பேர் இருக்கலாம்.

எனினும், தமிழர்களிடையே தமிழ்மொழி எந்த அளவுக்குப் பேச்சு மொழியாகவும், பயன்பாட்டு மொழியாகவும் இருக்கிறது எனும் ஒரு மிகப்பெரிய கேள்வி நம்முன் எழுகிறது. தமிழர்களின் தாய்மொழியான தமிழ் வெறும் வாய்மொழியாக இருக்கிறதே தவிர, அது அவர்களின் வாழ்க்கை மொழியாக இல்லை.

உலக அளவில் இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்துவிடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ்மொழி 8 ஆம் இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சவையின் யுனெஸ்கோ 10 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்திருக்கிறது.

பயன்படுத்தப்படாத நிலை, வேகவேகமாக வேற்றுமொழிச் சொற்கள் கலந்துவிடுகிற கலப்படநிலை போன்ற அளவுகோள்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு தமிழ்மொழிக்கு இந்த 8 ஆம் இடம் வழங்கப்பட்டிருக்கிறது.

"தமிழை யாராலும் அழிக்க முடியாது. அது முன்தோன்றிய மூத்தமொழி, உயர்தனிச் செம்மொழி, இலக்கிய வளம் செறிந்த மொழி, இலக்கணங்களால் ஆனமொழி' என்றெல்லாம் சில அறிஞர்கள் பேசுவதுண்டு. அத்தகையப் பேச்சு அவர்களது மொழிப் பற்றின் விளைவாக எழுகின்ற ஒரு நம்பிக்கைதானேயன்றி சமூக அறிவியல் அல்ல. பயன்படுத்தப்படாத எதுவொன்றும் படிப்படியாக மறைந்து அழிந்துவிடும் என்பது மொழிகளுக்கும் பொருந்தும்.

தாய்மொழியாக இருந்தும்கூட இன்றைய நிலையில் தமிழ்நாட்டில், தமிழர்களாலேயே தள்ளி நிறுத்தப்படுகிற ஒரு மொழியாகத்தான் தமிழ் இருக்கிறது. தமிழின் பெருமைகள் மேடைகளில் முழங்கப்பட்ட அளவுக்கு அதன் வளர்ச்சிக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை, நிரந்தரமாக அதைப் பாதுகாத்து நிலைபெறச் செய்வதற்கான வழிமுறைகளும் காணப்படவில்லை.

"எங்கும் தமிழ்' "எதிலும் தமிழ்' என்பதெல்லாம் அழகான முழக்கங்களாக மட்டுமே இன்றைக்கு நம்மிடம் இருக்கின்றன. வாழவைக்காமல் "வாழ்க' "வாழ்க' என்று மொழியிடம் விண்ணப்பம் செய்பவர்களாக நாம் இருக்கிறோம். ஒரு காலத்தில், இரண்டு தமிழர்களுக்கிடையே நிகழும் உரையாடல்களில் ஆங்கிலத்தைக் கலப்பது என்பது ஒரு கலாசாரமாகத் தொடங்கியது. இப்போது அது கட்டாயமாகிவிட்டது.

"தமிழ் என்பது நமது மொழிதான். அதன் அருமை பெருமையெல்லாம் சரிதான். ஆனால், அது இன்றைய நமது வாழ்வியலுக்குப் பயன்படாது' போன்ற கருத்துகள் தொடர்ந்து விதைக்கப்பட்டு அவை இன்றைக்குப் பெரும்பாலானோரின் மனங்களில் ஆழமாக வேரூன்றி அகலக் கிளைவிரித்துப் பரவியிருக்கின்றன.

தயாரிக்கப்படுவது தமிழ்த்திரைப்படங்களாக இருந்தாலும், தமிழர்களே அவற்றின் நுகர்வோராக இருந்தாலும் அவற்றின் தலைப்புகள், பாடல்கள், உரையாடல்கள் போன்றவற்றில் கூச்சமின்றியும் தங்குதடையின்றியும் ஆங்கிலம் கலக்கப்படுகிறது. ஒரு திரைப்படத்திற்குத் தமிழில் பெயர் சூட்டினால் அப்படத்திற்கு அரசு வரிவிலக்கு அளிக்கிறது. ஆனால் அந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் வேறு எந்த மொழியில் இருந்தாலும் பரவாயில்லை என்ற நிலை இருக்கிறது. இது எந்த வகைப்பட்ட தமிழ் மீட்பு நடவடிக்கையோ தெரியவில்லை.

மொழியில் கலப்படம் செய்தால் அதற்காகத் தண்டனை அளிக்கின்ற பல உலக நாடுகளுக்கிடையே, கலப்படம் செய்யாமல் இருக்கிறவர்களுக்கு பொருளாதாரச் சலுகை அளிப்பவர்களாக, வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால் அதற்குக் கையூட்டுக் கொடுப்பவர்களாக நாம் இருக்கிறோம்.

வாழ்வின் மிக முதன்மையான கட்டங்களில் தமிழர்களுக்குத் தங்களது தாய்மொழியான தமிழ் நினைவுக்கு வருவதேயில்லை. வாழ்க்கைக்கும், வங்கிக்கணக்கு நடைமுறைகளுக்கும், வரவு  செலவு வணிகத்திற்கும் வருமானத்திற்கும் தமிழ் பொருந்தாது அல்லது பயன்படாது என்கிற அறிவியலுக்குப் புறம்பான தாழ்வுமனப்பான்மையே அதற்கான காரணங்களாக இருக்கின்றன.

எனவேதான் தமிழர்களின் கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, மருத்துவம் என்று அத்தனைத் துறைகளிலும் நிறுவனங்களின் பெயர்கள் மட்டும் வேறு ஒரு மொழியில், மிகவும் குறிப்பாக ஆங்கில மொழியில் பதிவு செய்யப்படுகின்றன.
அந்த வகையில் இன்று , தமிழ் மக்கள் பார்ப்பதற்கான திரைப்படங்களை "மூவிஸ்'களும், "தியேட்டர்ஸ்''களும், "ஸ்டுடியோ'களும் தயாரித்துத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் வாங்குவதற்கான பொருள்களை "அன்கோ'களும், "பிரதர்ஸ்'களும், "சன்ஸ்'களும், "டிரேடர்ஸ்'களும், "எண்டர்பிரைசஸ்'களும் விற்றுக்கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்களுக்குத் தேவையான பணத்தை "பெனிபிட்'களும்,
"சிட்பண்ட்'களும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் தங்க நகைகளை பான்புரோக்கர்ஸ்கள் அடகு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்கள் பார்ப்பதற்கான தொலைக்காட்சிகளை நெட்வோர்க்குகளும் கம்யூனிகேஷன்களும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்கள் கேட்பதற்கான பாடல்களை ஆடியோக்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் நோய்களுக்கான மருந்துகளை மெடிக்கல்ஸ்கள் விநியோகித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் நோய்களை ஹாஸ்பிட்டல்ஸ்கள் குணப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்ப் பிள்ளைகளின் கல்வித் தேவைகளை மெட்ரிகுலேஷன்கள் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றன.

தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய பயணங்களை டிராவல்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்குத் தேவையான வேளாண்மை பொருட்களை அக்ரோ பார்ம்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தமிழர்களின் பசியை ஹோட்டல்களே போக்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறாகத்தான் துறை தோறும் தமிழ் முழக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்.

தமிழ்நாட்டில் சண்டைகள் தமிழிலும், அவற்றின் பொருட்டான வழக்குகள் வேறு ஒரு மொழியிலும் நடக்கின்றன. தங்களது வாழ்வின் முதன்மையான கட்டங்களில் தமிழை வளாகங்களுக்கு வெளியே நிற்க வைத்துவிடுகிறார்கள் தமிழர்கள்.
அந்த வகையில் நீதிமன்றங்களுக்கு வெளியேயும், கல்வி நிறுவனங்களுக்கு வெளியேயும், திருமண அரங்குகளுக்கு வெளியேயும், இசையரங்குகளுக்கு வெளியேயும், நிதி நிறுவனங்களுக்கு வெளியேயும், வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியேயும், வணிகச் செயல்பாடுகளுக்கு வெளியேயும் தமிழை கால்கடுக்க நிற்க வைத்து உள்ளே நுழைகிற தமிழர்கள், வேலை முடிந்தவுடன் வெளியே வந்து தங்களது தமிழைக் கட்டிப்பிடித்துக் கொண்டு குலவுகிறார்கள், மூச்சுவிட்டுக் கொள்கிறார்கள், இளைப்பாறிக்கொள்கிறார்கள், சிரித்துக் கொள்கிறார்கள். இதுதான் இன்றையத் தமிழர்கள் தங்களது தாய்மொழியான தமிழை வாழவைக்கும் முறையாக இருக்கிறது.

இன்றைய நிலையில், நாம் தமிழைத் தலைவர்களின் சொற்பொழிவுகளாகவும் திரையிசைப் பாடல்களாகவும் வசனங்களாகவும் கேட்கலாம். கவிதை, கதை, கட்டுரை, செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களாகப் படிக்கலாம்.
அதாவது தமிழைக் கேட்கலாம் படிக்கலாம். இந்த இரண்டு நிலைகளைத் தாண்டி வாழ்வின் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்கிற பேச்சுக்கே இப்போது இடமில்லை.
- See more at: http://www.thinakkural.lk/article.php?article/zampjchlfb32869ddb9dd5d869758yowqaee9a76bf217a2a3c54833pyglp#sthash.eMyor9Ab.dpuf

Thinakkural ePaper 21AUG2014 தினக்குரல்

Maalaimalar ePaper 21AUG2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  21-AUG-2014  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

அல்லது 

   இங்கே படிக்கவும் !

புதன், 20 ஆகஸ்ட், 2014

Uthayan ePaper உதயன் இ-பேப்பர் 20-AUG-2014

  உதயன் - இன்றைய  இ-பேப்பர்  20-AUG-2014
http://tamilepaper.blogspot.in/p/uthayan.html

மேலே உள்ள

உதயன் பக்கத்தை பார்க்கவும் !

அல்லது இங்கே படிக்கவும் !   Uthayan ePaper 

*********************************************** 

லம்பெயர் தமிழர்களிடம் தமிழீழம் தொடர்பான சிந்தனைக்கோட்பாடு இன்னமும் அழியாமல் இருப்பதால் அவர்கள் மூலமாக விடுதலைப்புலிகள் இயக்கம் மீளெழுச்சி பெறலாம் என்ற அச்சநிலை உள்ளது என யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்று வரும் பாதுகாப்புக் கருத்தரங்கின் இரண்டாம் நாள் அமர்வான நேற்று மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தீவக நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதிலும் முன்னெடுத்துச் செல்வதிலும் ஏற்படக்கூடிய புதிய சவால்களை சந்திப்பதற்கான தரைப்படையொன்றின் வழிமுறைகள் என்ற தலைப்பில் மேஜர் ஜெனரல் உதய பெரேரா உரையாற்றினார்.

இதன்போது கருத்தரங்கில் பங்கேற்ற பாகிஸ்தானிய முன்னாள் படையதிகாரியொருவர், விடுதலைப்புலிகள் மீள எழுச்சி பெறுவதற்கான சாத்தியங்கள் எந்தளவிற்கு உள்ளதென வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

எந்தவொரு இராணுவமும் தனித்த நிலையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாது. முதலில் சர்வதேச ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் ஓரங்கட்டிய பின்னர் சமூகத்திடமிருந்தும் தனிமைப்படுத்திய பின்னரே விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பது சாத்தியமானது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் சமூகத்தின் பங்களிப்பு இருந்தது. விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெறாத வண்ணம் எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

ஆனால், புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் சிந்தனை இன்னமும் அழியாமல் உள்ளது. புலம்பெயர்ந்தவர்கள் இங்குள்ள பிராந்திய அரசியற்கட்சிகளை தமது தேவைக்கு ஏற்ப திரிவுபடுத்திச் செயற்படுகின்றனர்.

பணம் கிடைக்கின்றமையால் இங்குள்ள கட்சிகளும் புலம்பெயர்ந்தவர்களின் தாளங்களுக்கு ஏற்ப செயற்படுகின்றனர். அந்தவகையில் புலம் பெயர்ந்தவர்களாலேயே விடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவதற்கானதொரு அபாயநிலை காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.   - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=229853349820645123#sthash.XkepSrYf.dpuf

பணம் கிடைக்கின்றமையால் இங்குள்ள கட்சிகளும் புலம்பெயர்ந்தவர்களின் தாளங்களுக்கு ஏற்ப செயற்படுகின்றனர். அந்தவகையில் புலம் பெயர்ந்தவர்களாலேயே விடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவதற்கானதொரு அபாயநிலை காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.