வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar Epaper 28-FEB-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  28-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

புதன், 26 பிப்ரவரி, 2014

காமராஜர் துறைமுகமானது எண்ணூர் துறைமுகம் Ennore Port



சென்னை:  
 
எண்ணூர் துறைமுகத்துக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பெயர் சூட்டினார். 
 
 
எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டும் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலை நடந்தது. மேடையில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர் பெயர் பலகையை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ‘ரிமோட்' மூலம் திறந்து வைத்து எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜர் பெயரை சூட்டினார். 
 
அப்போது விழாவில் பங்கேற்ற அனைவரும் காமராஜர் புகழ் ஓங்குக என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
 
 
மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சராக ஜி.கே.வாசன் பொறுப்பேற்ற உடன், முதலில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்பட்டது. தற்போது எண்ணூர் துறைமுகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/ennore-port-named-former-chief-minister-kamaraj-194403.html


Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/ennore-port-named-former-chief-minister-kamaraj-194403.html

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar Epaper 26-FEB-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  26-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தமிழீழம் அமைக்க "உலகத்த்தமிழர்"களிடம் வாக்கெடுப்பு ! ADMK Election Manifesto




மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் பல்வேறு விடயங்கள் அடங்கியுள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரின் போது, சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை, இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும்,

இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும்,

தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அ.தி.மு.க உறுதிபூண்டுள்ளது.



சட்டவிரோதமாக அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தவும்,

தமிழக மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில், இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.



ஆழ்கடல் மீன்பிடிப்பு, மீன்பிடி பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும் என்பதால், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கு மத்திய அரசு மூலம் முழு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பாதுகாக்கும் வகையில், கச்சதீவினை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் என தமிழக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=262932679225704547#sthash.9LPIL3op.dpuf

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் பல்வேறு விடயங்கள் அடங்கியுள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரின் போது, சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை, இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும்,

இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும்,

தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அ.தி.மு.க உறுதிபூண்டுள்ளது.

சட்டவிரோதமாக அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தவும்,

தமிழக மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில், இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.

ஆழ்கடல் மீன்பிடிப்பு, மீன்பிடி பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும் என்பதால், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கு மத்திய அரசு மூலம் முழு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பாதுகாக்கும் வகையில், கச்சதீவினை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் என தமிழக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=262932679225704547#sthash.9LPIL3op.dpuf
 
 

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar epaper 25-FEB-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  25-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar epaper 23-FEB-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  23-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

சனி, 22 பிப்ரவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar epaper 22-FEB-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  22-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar epaper 21-FEB-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  21-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வியாழன், 20 பிப்ரவரி, 2014

முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது; உச்சநீதிமன்றம் இடைக்கால தடை



முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது; உச்சநீதிமன்றம் இடைக்கால தடை 


news
முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலைலை செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

விடுதலை செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.ராஜீவ் கொலையாளிகள் விடுதலை முடிவு விஷயத்தில் உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை, தமிழக அரசு அவர்களை விடுவிக்க கூடாது என உயர் நீதிமன்ம் இடைக்கால தடைவிதித்தது.


முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்.  விடுதலை தொடர்பாக தமிழக அரசு வழிமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டும்.  எந்த அடிப்படையில் தமிழக அரசு இவர்களை விடுவிக்க முடிவெடுத்தது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதேவேளை குறித்த வழக்கு விசாரணையை மார்ச் 6ம் திகதிக்கு தள்ளி வைத்ததுடன். விதிகளை மீறி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட  முதல்வர் ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று காலை தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ், ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மூன்று நாட்களுக்குள் இவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=865802665620383996#sthash.Bon36PPX.dpuf

கைதிகள் விடுதலை : பிரதமர் மன்மோகன் சிங் & காங்கிரஸ் எதிர்ப்பு




கைதிகள் விடுதலை  :  

பிரதமர் மன்மோகன் சிங் &  காங்கிரஸ் எதிர்ப்பு  ! 


இவ்விவகாரம் தொடர்பாக பேசிய பிரதமர் மன்மோகன் சிங் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்; 7 பேர் விடுதலை என்பது நீதித்துறையின் மாண்புகளுக்கு எதிரானது. 


தமிழக அரசின் பரிந்துரையின் படி நடவடிக்கை எடுக்க முடியாது. ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்கும் நடவடிக்கை தொடர கூடாது. 

காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவின் ஆன்மா மீது நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் மீது எந்த அரசியல் கட்சியும் மென்மை காட்டக் கூடாது என்று கூறியுள்ளார்.

மாலைமலர் இ-பேப்பர் 20-FEB-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  20-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

உதயன் Uthayan ePaper 20FEB2014


விடுதலை !


யாழ்ப்பாணம் ( பலாலி ) , திருகோணமலை - யில் இருந்து தமிழ்நாட்டுக்கு விமான சேவை ! வடக்கு மாநிலம் - தீர்மானம் !



யாழ்ப்பாணம் ( பலாலி ) , திருகோணமலை - யில் இருந்து தமிழ்நாட்டுக்கு விமான சேவை !

வடக்கு மாநிலம் - தீர்மானம் !

ஈழத் தமிழர்கள் வாழும் திருகோணமலை மற்றும்யாழ்ப்பாணம் - பலாலியில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை இயக்கப்பட வேண்டும் என்று இலங்கையின் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 இலங்கை வடக்கு மாகாண சபையின் கூட்டம் கைதடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வடக்கில் உள்ள பலாலி, கிழக்கில் உள்ள திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை நடத்தப்பட வேண்டும். 

தலைமன்னார்- ராமேஸ்வரம் இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் இயக்கப்பட வேண்டும் என சிவாஜிலிங்கம் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். 

இதை மற்றொரு உறுப்பினரான கந்தையா சர்வேஸ்வரன் வழிமொழிந்தார். பின்னர் தீர்மானம் ஏகமனதாக நேற்று மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.





புதன், 19 பிப்ரவரி, 2014

பேரறிவாளன்-முருகன்-சாந்தன் விடுதலை: தமிழக முதல்வருக்கு வைகோ நன்றி ! Vaiko Thanks TN Chief Minister Jayalalitha

புதுடெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-





ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 1998 ஆம் ஆண்டு ஜனவரி 28இல், பூவிருந்தவல்லி தடா நீதிமன்றத்தில், முருகன், சாந்தன் பேரறிவாளர் ஆகிய ஆகிய மூவர் உட்பட, 26 பேர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தால் 19 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்; மூவருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது; நால்வருக்குத் தூக்கு உறுதி செய்யப்பட்டது. பின்னர் நளினியின் கருணை மனு மீது, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கடைசியாக, மேற்கண்ட மூவருக்கும் தூக்கு உறுதி செய்யப்பட்டது. 

இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இவர்கள் விடுத்த கருணை மனுக்கள் மீது, 11 ஆண்டுகள் 4 மாதங்கள் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 2014 ஜனவரி 21 ஆம் தேதி, 15 பேர்களது மரண தண்டனையை இரத்துச் செய்த அந்தத் தீர்ப்பின் அடிப்படையில், இன்றைக்கு இந்த மூவருடைய தூக்குத் தண்டனையையும் உச்சநீதிமன்றம் இரத்துச் செய்து இருக்கின்றது. மேலும் மாநில அரசு அவர்களைச் சிறையில் இருந்து விடுவிப்பதற்கான சாத்தியங்களை உள்ளடக்கியதாக இந்தத் தீர்ப்பினை வழங்கி இருக்கின்றார்கள்.  

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம் சுட்டிக் காட்டி இருப்பதைப் போல, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 432, 433 ஏ பிரிவுகளின்படி, இவர்கள் மூவரையும் வேலூர்ச் சிறையில் இருந்து உடனே விடுதலை செய்ய வேண்டும் என நேற்று உச்சநீதிமன்றத்தின் முன்பு இருந்து, தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்தேன். 


இன்று தமிழ்நாடு அமைச்சரவையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவு எடுத்து இருக்கின்றது. இது மெச்சத்தகுந்த, மனிதாபிமான நடவடிக்கை ஆகும். தமிழக முதல்வரின் கருணையும், மனிதாபிமானமும் மிக்க இந்த நடவடிக்கைக்கு, கோடிக்கணக்கான தமிழர்கள் சார்பிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ கூறினார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டசபையில் அனைத்து கட்சி உறுப்பினர் பாராட்டு ! ( காங்கிரஸ் எதிர்ப்பு - வெளிநடப்பு )




முதல்வர் ஜெயலலிதாவுக்கு  சட்டசபையில் அனைத்து கட்சி உறுப்பினர் பாராட்டு !
( காங்கிரஸ்  எதிர்ப்பு - வெளிநடப்பு )

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar ePaper 19-FEB-2014 முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை !

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  19-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !








உதயன் Uthayan epaper 19FEB2014


முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு !

ராஜீவ் காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இன்று காலை தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான தூக்கு தண்டனையை  உச்ச நீதிமன்றம் நேற்று இரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. 


தமிழக சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ், ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 


மூன்று நாட்களுக்குள் இவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யும் என்று குறிப்பிட்டார்.


 இதேவேளை தூக்கு தண்டனையை இரத்து செய்து நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432 இன் படி தமிழக அரசு மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கலாம் என பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=359842663119602570#sthash.r3T0my2v.dpuf

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 6 பேரை உடனே விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை, ஆயுள்தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் 3 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்திருந்தனர். 

இந்நிலையில், இன்று சட்டசபையில் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். 


அதில், ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் ஆயுள் தண்டனை குறைப்பு பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும், வேலூர் சிறையில் இருந்த நளினியும் விடுவிக்கப்படுவார்.

நளினியுடன், ஜெயச்சந்திரன், ராபர்ட் பயாஸ் போன்றோரும் விடுதலை செய்யப்படுவார்கள். மேற்குறிப்பிட்ட 6 பேரையும் விரைவில் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.

3 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் அந்த 6 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்யும் என்று குறிப்பிட்டார்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar epaper 18-FEB-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  18-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வழக்கு: தூக்குத் தண்டனை ரத்து SC commutes Rajiv Gandhi's assassins death sentence to life imprisonment

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கருணை மனு மீது முடிவெடுக்க மத்திய அரசு 11 ஆண்டுகள் தாமதம் ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டியது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கான தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாக கூறிய நீதிபதிகள், இம்மூவரும் சிறையில் மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறிய மத்திய அரசின் வாதத்தை நிராகரித்தனர். 23 ஆண்டுகளாக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சிறையில் இருப்பதால், அவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தூக்குத் தண்டனை வழக்குகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் கருணை மனு மீது முடிவெடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். வருங்காலத்தில் கருணை மனு மீது விரைவாக முடிவெடுக்கப்படும் என நம்புவதாகவும் தீர்ப்பின்போது நீதிபதிகள் தெரிவித்தனர். 199‌1ஆம் ஆண்டு ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு 1998ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இதில் நளினிக்கான தண்டனை, ஏற்கனவே ஆயுளாக குறைக்கப்பட்டது.

<script src="http://embed.flowplayer.org/5.3.2/embed.min.js"><div class="flowplayer" data-origin="http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-119093.html" data-logo="http://www.puthiyathalaimurai.tv/wp-content/themes/pttv/images/PTTV_Logo_Line_big.png" data-key="$662685021924271" style="width: 640px; height: 360px;"><video><source type="video/flash" src="http://www.puthiyathalaimurai.tv/wp-content/uploads/video-gallery/TopNews/death-penalty-cancelled-full-pack.mp4"></video></div></script>


( Thanks : puthiyathalaimurai.tv )


வழக்கு கடந்த வந்த பாதை

ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மனித வெடிகுண்டு தாக்குதலில் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். இதற்கான சதியில் ஈடுபட்டதாகக்கூறி 1998ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 26 பேருக்கு தூக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் இவர்களில் 19 பேரை விடுவித்த நீதிமன்றம், மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. எஞ்சிய முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரின் தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களின் கருணை மனுக்கள் 1999ம் ஆண்டு, அக்டோபர் 17ம் தேதி தமிழக ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது. எனினும், அதற்கடுத்த ஆண்டு, நளினியின் தூக்கு தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாகக் தமிழக ஆளுநர் குறைத்தார். இதனையடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும், தூக்கு தண்டனையை குறைக்க கோரி கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி, குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படாததை அடுத்து, 2006, 2007, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து நினைவூட்டல் கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. கடந்த, 2011ம் ஆண்டு, ஆகஸ்ட் 26ம் தேதி, இவர்கள் மூவரின் கருணை மனுக்களை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்தார்.

இதனையடுத்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றும் தேதியாக 2011, செப்டம்பர் 9ம் தேதி அறிவிக்கப்பட்டது. நெருக்கடி முற்றிய நிலையில், 2011, ஆகஸ்ட் 30ம் தேதி, தூக்கு தண்டனையைக் குறைக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜனவரி 21ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் அளித்தது. கருணை மனுக்கள் ஆண்டுக் கணக்கில் குடியரசுத் தலைவரால் கிடப்பில் போடப்பட்டதை காரணம் காட்டி, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 15 கைதிகளின் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. கருணை மனுக்களை தேவையின்றி நீண்ட காலம் கிடப்பில் போட்டால், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்தார்.

சனி, 15 பிப்ரவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar epaper 21-FEB-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  21-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar epaper 17-FEB-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  17-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

உதயன் Uthayan epaper 15FEB2014


மாலைமலர் இ-பேப்பர் 15-FEB-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  15-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் 14-FEB-2014 MaalaiMalar Epaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  14-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வியாழன், 13 பிப்ரவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் 13-FEB-2014 Maalaimalar Epaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  13-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

புதன், 12 பிப்ரவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் 12-FEB-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  12-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் 11-FEB-2014 Maalaimalar Epaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  11-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

திங்கள், 10 பிப்ரவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் 10-FEB-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  10-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

சனி, 8 பிப்ரவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் 08-FEB-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  08-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

தெலுங்கானா மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Teleganana







ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா உருவாக்குவதற்கான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த  அமைச்சரவை கூட்டத்தில் தெலுங்கானா மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
அமைச்சர்கள் குழு அனுப்பிய மசோதாவில் சில திருத்தங்களுடன் மசோதவை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின் தெலுங்கானா மசோதா குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஐதராபாத்திற்கு யூனியன் பிரதேசம் அந்தஸ்து வழங்கப்படவில்லை.
தெலுங்கானா பிரிவதால் சீமாந்திராவுக்கு பெரும் தொகை இழப்பீடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தெலுங்கானா, சீமாந்திரா பொது தலைநகராக  ஐதாராபாத் தொடரும். ஐதாராபாத்தின் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு ஆளுநர் வசம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மசோதா திங்களன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் 07-FEB-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  07-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வியாழன், 6 பிப்ரவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் 06-FEB-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  06-FEB-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

புதன், 5 பிப்ரவரி, 2014

தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு: இலங்கை தூதரை அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்





பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பாரம்பரியம் மிக்க பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 57 பேரை இரு வேறு சம்பவங்களில் அவர்களது 11 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. இது குறித்து தங்களுக்கு கடந்த ஜனவரி 30-ந் தேதியும், கடந்த 3-ந் தேதியும் கடிதங்கள் எழுதி யிருந்தேன்.
கடந்த ஜனவரி 27-ந் தேதி சென்னையில் மீன வர்கள் மட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் பே£து தமிழக மீனவர்கள் கைது  செய்யப்பட்டனர். எதிர்காலத்தில் இது பே£ன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தூதரக மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தி இருந்தேன்.
மேலும், தாங்கள் தனிப் பட்ட முறையில் இதில் தலையிட்டு கைது செய்யப் பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
மேற்கண்ட 2 கடிதங்கள் எழுதிய மை காய்வதற்குள் இது பே£ன்ற மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வடக்கு மீன்பிடி பகுதியில் உள்ள ராமேசுவரம் மற்றும் மண்டபம், நாகபட்டினம் மாவட்டம் ஆறுகோட்டுதுறை மீன்பிடி பகுதியை சேர்ந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி 8 படகுகளுடன் கைது செய்துள்ளனர்
இச்சம்பவம் நேற்று (4-ந் தேதி) அதிகாலையில் நடந்துள்ளது. அவர்கள் அனைவரும் வருகிற 13-ந் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வடக்கு மீன்பிடி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் மண்டபம், நாகபட்டினம் மாவட்டம் ஆறுகோட்டுத்துறையில் இருந்து கடந்த 3-ந் தேதி 7 எந்திர படகுகள் மற்றும் ஒரு மோட்டார் படகில் இவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்களை 4-ந் தேதி அதிகாலை பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் மாவட்டம் கய்ட்ஸ் மாஜிஸ்திரேட்டு கோர்ட்ல் ஆஜர்படுத்தி வருகிற 13-ந் தேதி வரை காவலில் வைத்துள்ளனர்.
எதிர்காலத்தில் நமது அப்பாவி மீனவர்கள் கைது செய்யப்படுதல் மற்றும் தாக்குதல் நடவடிக்கை களில் இருந்து காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத் தில் எனது அரசு தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே நேரடி பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்தது.
ஆனால் இந்தியாவை சேர்ந்த தமிழக மீனவர்களின் உரிமையை காப்பதில் மத்திய அரசு கடுமையாக தோல்வி அடைந்து விட்டது. மீனவர்கள் இடையேயான பேச்சு வார்த்தை நடந்த பிறகும் இது பே£ன்ற சம்பவங்கள் நடைபெறுவது மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தையும், அச்ச உணர்வையும் அதிகரிக்க செய்துள்ளது.
நமது மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப் படுவது எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இச்சம்பவங்கள் மீனவர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தி உருவாக் கப்பட்ட நல்லெண்ணத்துக்கு எதிராக உள்ளது.
மீனவர்களிடையே இது பே£ன்ற பதட்டம் தொடர வேண்டும் என்பது இலங்கை அரச மற்றும் இலங்கை கடற்படையின் உண்மையான நோக்கமாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சினையில் மத்திய அரசுக்கு கடும் பொறுப்பு உள்ளது. மேல்மட்ட அளவில் தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெளியுறவு அமைச்சகம் மூலம் டெல்லியில் உள்ள இலங்கை தூதரை வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் நமது கடுமையான எதிர்ப்¬ப பதிவு செய்ய வேண்டும்.
இப்பிரச்சினையை எந்த வித தாமதமும் இன்றி இலங்கை அரசின் உயர் மட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்ல வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன்.
உடனடி நடவடிக்கை மேற் கொள்ளாவிடில் மீனவர்கள் மட்டத்தில் ஆன பேச்சு வார்த்தை நடவடிக்கைகள் தடம் புரளும் சூழ்நிலை ஏற்படும். அதனால் தமிழக மீனவர்களின் வாழ்வா தாரம் மிக மோசமான நிலைக்கு சென்று விடும்.
எனவே, கடந்த வாரம் இலங்கை கடற்படையில் கைது செய்யப்பட்ட 87 மீனவர்களையும், அவர்களது 19 மீன் பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.