வியாழன், 20 பிப்ரவரி, 2014

முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது; உச்சநீதிமன்றம் இடைக்கால தடை



முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது; உச்சநீதிமன்றம் இடைக்கால தடை 


news
முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலைலை செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

விடுதலை செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.ராஜீவ் கொலையாளிகள் விடுதலை முடிவு விஷயத்தில் உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை, தமிழக அரசு அவர்களை விடுவிக்க கூடாது என உயர் நீதிமன்ம் இடைக்கால தடைவிதித்தது.


முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்.  விடுதலை தொடர்பாக தமிழக அரசு வழிமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டும்.  எந்த அடிப்படையில் தமிழக அரசு இவர்களை விடுவிக்க முடிவெடுத்தது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதேவேளை குறித்த வழக்கு விசாரணையை மார்ச் 6ம் திகதிக்கு தள்ளி வைத்ததுடன். விதிகளை மீறி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட  முதல்வர் ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று காலை தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ், ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மூன்று நாட்களுக்குள் இவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=865802665620383996#sthash.Bon36PPX.dpuf

கருத்துகள் இல்லை: