புதன், 26 பிப்ரவரி, 2014

காமராஜர் துறைமுகமானது எண்ணூர் துறைமுகம் Ennore Portசென்னை:  
 
எண்ணூர் துறைமுகத்துக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பெயர் சூட்டினார். 
 
 
எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டும் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலை நடந்தது. மேடையில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர் பெயர் பலகையை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ‘ரிமோட்' மூலம் திறந்து வைத்து எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜர் பெயரை சூட்டினார். 
 
அப்போது விழாவில் பங்கேற்ற அனைவரும் காமராஜர் புகழ் ஓங்குக என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
 
 
மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சராக ஜி.கே.வாசன் பொறுப்பேற்ற உடன், முதலில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்பட்டது. தற்போது எண்ணூர் துறைமுகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/ennore-port-named-former-chief-minister-kamaraj-194403.html


Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/ennore-port-named-former-chief-minister-kamaraj-194403.html

கருத்துகள் இல்லை: