வெள்ளி, 9 ஜனவரி, 2015

கருணாநிதி திமுக தலைவரான வரலாறு


பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலைமையேற்று நடத்திடும் பொறுப்பு, 1969-ல் கருணாநிதிக்கு கிட்டியது. 

அன்று முதல் இன்று வரை தொடர்ந்து 45 ஆண்டுகளாக தி.மு.க தலைவராக கருணாநிதி இருந்து வருகிறார்.

1969-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி நடைபெற்ற தி.மு.க.வின் நான்காவது பொதுக்குழுவில் முதன் முதலாக தி.மு.க தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக 1974-ம் ஆண்டு ஜூலை 7-ல் நடைபெற்ற 5-வது பொதுக்குழுவிலும், மூன்றாவது முறையாக, 1978-ம் ஆண்டு ஜூன் 18-ல் நடைபெற்ற 6-வது பொதுக்குழுவிலும் கருணாநிதி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

நான்காவது முறையாக 1983-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதியும், ஐந்தாவது முறையாக 1988-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதியும் கருணாநிதி தி.மு.க தலைவரானார். ஆறாவது முறையாக 1992 ஜூன் 2-ம் தேதியும், ஏழாவது முறையாக 1997-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதியும், எட்டாவது முறையாக, 2000-மாவது ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதியும், ஒன்பதாவது முறையாக 2003-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதியும் தி.மு.க தலைவராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார்.

 பத்தாவது முறையாக 2008 டிசம்பர் 27-ல் நடைபெற்ற 13-வது பொதுக்குழுவிலும்,


09JAN2015  இன்று நடைபெற்ற தி.மு.க.வின் 14-வது பொதுக்குழுவில் 11-வது முறையாகவும் தி.மு.க தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை: