சனி, 14 ஜூலை, 2012

புலி போன்று பாய வேண்டிய மத்திய அரசு, சுண்டெலி போல இலங்கை அரசிடம் பணிந்து செல்வது வருந்தத்தக்கது.



சென்னை: இலங்கை விமானப்படை வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒட்டு மொத்த தமிழர்களின் கடும் எதிர்ப்பையடுத்தும், எனது கடும் கண்டனத்தையடுத்தும், இலங்கை விமானப்படை வீரர்களுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்ப பயிற்சியை சென்னையில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப்படை நிலையத்திற்கு மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தகவல் கிடைத்தவுடன், இலங்கை வீரர்கள் யாருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் நான் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தேன். புலி போல் பாய வேண்டிய இந்திய பேரரசு சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிந்து செல்வது வருந்தத்தக்கது என்பதை தெரிவித்து கொள்வதோடு, இலங்கை விமானப்படை வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.




கருத்துகள் இல்லை: