Tamil Newspapers & ePaper,தமிழ்ச் செய்திதாள்கள் & இ பேப்பர் ,Journaux Tamouls, Tamilisch Zeitung, Kranten, Aviser
புதன், 4 ஜூலை, 2012
பிரணாப் முகர்ஜி அளித்த கடிதம், மோசடியாக தயாரிக்கப்பட்டது - பா.ஜனதா
ஆதாயம் தரும் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
தினத்தந்தி :
தினமணி :
பிரணாப் முகர்ஜியின் ராஜிநாமா 100 சதவிகிதம் போலியானது என்று எங்கள் கட்சி குற்றம்சாட்டுகிறது. இப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவின் உயர் பதவிக்குப் போட்டியிடவிருப்பது துரதிருஷ்டவசமானது. தேர்தல் ஆணையத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம்.
தேர்தல் அதிகாரியின் சான்றளிக்கப்பட்ட கடிதத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். அதன் பிறகு, சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வது பற்றி தீர்மானிப்போம் என்றார் அனந்த் குமார். பிரணாபின் வேட்பு மனுவைக் காப்பாற்றுவதற்காக, சங்மாவின் குற்றச்சாட்டுக்குப் பிறகு ராஜிநாமா கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று சங்மாவின் வழக்குரைஞர் சத்யபால் ஜெயின் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்திய புள்ளியியல் கழகத்தின் தலைவராக பிரணாப் முகர்ஜி உள்ளதால் வருவாய் தரக் கூடிய பதவியில் அவர் இருக்கிறார். எனவே, அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என பி.ஏ. சங்மா தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
-------------------------------------------------------------------------------
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக