டெசோ மாநாட்டில், தமிழர் மறுவாழ்வு நடவடிக்கைகளை கண்காணிக்க பன்னாட்டு குழு அமைக்க வேண்டும், ( இலங்கை ) ஈழத்தமிழர் பிரச்னையை ஐ.நா. தீர்மானம் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
TESO டெசோ அமைப்பின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபேற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு ( டெசோ) மாநாட்டை திமுக தலைவர் கருணாநிதி தலைமையேற்று நடத்தினார்.
இந்த மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- போர் குற்றவாளிகள் ஐ.நா., சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் & தண்டிக்க பட வேண்டும்
- இலங்கையில் தமிழ்மொழி அடையாளங்கள் அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
- சிங்களர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வீடு மற்றும் நிலங்களை மீட்க வேண்டும்.
- தமிழர் மறுவாழ்வு நடவடிக்கைகளை கண்காணிக்க பன்னாட்டு குழு தேவை.
- இலங்கை தமிழர் பிரச்னையில் அரசியல் தீர்வு காண ஜ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.இந்த தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஐ.நாவை வலியுறுத்த வேண்டும்.
- தமிழர் பகுதியிலிருந்து ராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
- இலங்கை ராணுவத்திற்கு இந்தியா எந்த மாநிலத்திலும் பயிற்சி அளிக்கக்கூடாது.
- இந்தியாவின் நிர்வாக எல்லைகளுக்குட்பட்டிருந்த கச்சத் தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டதால், தமிழ் மீனவர்கள் அப்பகுதிக்குச் சென்றாலே, சுட்டுக் கொல்கின்றனர். எனவே, இக்கொடுமைக்கு முடிவு கட்ட, கச்சத் தீவை இந்தியா மீட்க வேண்டும்.
- மேலும், தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் கடற்படை தளத்தை இந்தியா அமைக்க வேண்டும்
இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக