குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சேவை மற்றும் சாதனை
செய்தவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், ஆண்டு தோறும், பத்ம விருதுகள்
வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான, பத்ம விருதுக்கு, 127 பேர் தேர்வு
செய்யப்பட்டு உள்ளனர்.
இதில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், சினிமாவில் 50 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன அமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக அடையாளங்களை கொண்டு, உலகநாயகன் என அனைவராலும் அழைக்கப்படும் கமல்ஹாசனுக்கு இந்தாண்டு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1990-ம் ஆண்டு கமல்ஹாசனுக்கு மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இதேப்போல் சினிமாவில் 7,500 பாடல்களுக்கு மேல் எழுதி சாதனைப்படைத்த கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும் இந்தாண்டு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கும் 2003ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக