போர்குற்றம் குறித்த சர்வதேச விசாரணை
http://www.euthayan.com/indexresult.php?id=25891&thrus=0
இலங்கை வட மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி நட்டைபெற்று வருகிறது.இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, வடக்கு மாகாண சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை தமிழர் பிரச்னைகளை தீர்ப்பதற்கு அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் மூன்று அம்ச தீர்மானங்கள் வடக்கு மாகாண சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தங்களது கவலைகள் குறித்து இலங்கை அரசு உண்மையிலேயே நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு இல்லை என்பதால், இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானிக்கப்பட்டதாக, சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக