தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிங்கப்பூர் தொழில் முனைவோர் கூடுதலாக
முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்
சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்துள்ள சண்முகம் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது 2023ம் ஆண்டுக்குள் 15 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் தமது திட்டம் குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சரிடம், முதலமைச்சர் விளக்கினார்.
தமிழ்நாடு விஷன் 2023 திட்டத்தை செயல்படுத்துவத்தில் சிங்கப்பூர் ஒரு முக்கிய பங்காற்றுவதை எதிர்நோக்கியிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தின் வலுவான தொழில் உற்பத்தி தளமும், சிங்கப்பூரில் முதலீடு வாய்ப்புகளை எதிர்நோக்கி அதிக அளவில் நிதியும் இருப்பதை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சண்முகம் சுட்டிக்காட்டினார். இதனால் தமிழகம்- சிங்கப்பூர் இடையே வர்த்தக ரீதியான உறவுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் அடிப்படை சுகாதாரம், கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் சிங்கப்பூர் உதவி செய்யவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதாலும், தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் நிலவும் சூழலாலும், சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக சண்முகம் முதலமைச்சரிடம் தெரிவித்தார்.
================================================================
Thanks : புதிய தலைமுறை / Puthiya Thalaimurai News
* Channel News Asia ( Singapore)
http://www.channelnewsasia.com/news/singapore/tamil-nadu-and-singapore/1235664.html
=============================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக