http://epaper.virakesari.com:8080/home/index?editionId=13&editionDate=05/07/2014
இலங்கையில் வாக்காளர்களை தெளிவுபடுத்தும் நோக்கில் அமெரிக்காவின் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் உதவித்
திட்டத்தின் கீழ் நடத்தப்படவிருந்த நிகழ்ச்சி திட்டம் இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பு காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
''வாக்காளர் கல்வியூடாக தேர்தல் ஒத்துழைப்பு'' என்ற
தொனிப்பொருளில் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் வாக்குரிமை தொடர்பாக
நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நிகழ்ச்சித் திட்டங்களை
நடத்துவதற்கு யூ.எஸ்.எயிட் நிறுவனம் தீர்மானித்திருந்தது.
இத்தகைய நிகழ்ச்சித் திட்டங்களை நடத்த விரும்பும் சிவில் அமைப்புக்கள்
தங்களின் யோசனைகளை முன்வைக்குமாறு யூ.எஸ்.எயிட் நிறுவனம்
ஊடகங்களில் விளம்பரம் செய்திருந்தது. இதனையடுத்து இந்த
நிகழ்ச்சித் திட்டத்திற்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு
தெரிவித்திருந்தது. நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ
தலைமை
யில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் இந்த விட
யம் குறித்து ஆராயப்பட்டதுடன் இலங்கைக்கான அமெரிக்க
தூதுவரை அழைத்து இந்த விடயம் தொடர்பில் கண்டனம் தெரிவிப்பது என்றும்
தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இவ்விடயம் குறித்து விளக்கம்
அளிப்பதற்காக வெளிவிவகார அமைச்சுக்கு வருமாறு அமெரிக்க தூதுவர்
மிச்சேல் ஜே சிஸனுக்கு வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
வாக்காளர் கல்வியூடாக தேர்தல் ஒத்துழைப்புஎன்ற
தொனிப்பொருளிலான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அரசாங்கம் எதிர்ப்பு
தெரிவித்ததையடுத்து இந்த திட்டத்தை யூ.எஸ்.எயிட் நிறுவனம் இரத்து
செய்துள்ளது. சிவில் அமைப்புக்க
ளுக்கு நேற்று வெள்ளிக்கிழமை மின்னஞ்சலொன்றை அனுப்பியுள்ள
அரசாங்கத்தின்...
யூஎஸ்எயிட் நிறுவனம், குறித்த நிகழ்ச்சி திட்டம் இரத்து
செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் இது குறித்த யோசனைகள் ஏற்றுக்
கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வாக்காளர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சி
திட்டங்களுக்கு அமெரிக்க நிதியுதவி அளிப்பது உள்நாட்டு
விவகாரங்களில் தலையீடும் செயற்பாடாகும். இதற்கு அனுமதிக்க
முடியாது என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க
அமெரிக்க தூதுவர் மிச்சேல் சிஸனை அழைத்து விளக்கம் கேட்கவிருப்பதாக
வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
என்று அமைச்சரவையின் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்கொல
தெரிவித்துள்ளார்.
இதேவேளை யூஎஸ்எயிட் நிறுவனம் இவ்வாறான நிகழ்ச்சி
திட்டங்களை நீண்ட காலமாக இலங்கையிலும் மற்றும் பல நாடுகளிலும் உள்ள
சிவில் அமைப்புக்களுடன் இணைந்து நடாத்தி வந்திருக்கின்றது என்று
அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி திட்டத்திற்கு இலங்கை அரசாங்கத்திடம்
இருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றமை தொடர்பிலும் இந்த நிகழ்ச்சி
திட்டம் இரத்தாகியமை குறித்தும் கருத்து தெரிவிக்க அமெரிக்க
தூதரகத்தின் பேச்சாளர் மறுத்துவிட்டார்.
வாக்காளர்களை தெளிவூட்டும் இத்தகைய நிகழ்ச்சி
திட்டங்கள் 2010 ஆண்டில் இருந்து நடத்தப்பட்டுவருகின்றது.
இலங்கையில் பல தேர்தல் கண்கானிப்பு குழுக்கள் இவ்வாறான
நிதியுதவிகளை கொண்டே இயங்குகின்றன. அரசாங்கம் குற்றம் சாட்டுவதை
போல அவற்றினால் அரசியல் செயற்பாடுகள் எதுவும் நடப்பதில்லை என்று
பெயர் குறிப்பிடவிரும்பாத சிவில் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர்
தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன்
முக்கியத்துவத்தை தெளிவுப்படுத்துதல், வாக்களிப்பதற்கு
தேவையான அடையாள ஆவணங்கள் பற்றி தெளிவுப்படுத்துதல் , பெண்களை
அரசியலில் ஊக்குவித்தல் போன்ற பணிகளை இந்த செயற் திட்டத்தின் மூலம்
இடம் பெற்றுவந்தன. இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் மற்றும்
போர்க்கால குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா.நடத்தவுள்ள விசாரணை
காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவும்
முறுகல் நிலையே அரசாங்கம் யூஎஸ்எயிட் நிகழ்ச்சி திட்டத்திற்கு
எதிர்ப்பு தெரிவிக்க காரணம்இன்றி பெயர் குறிப்பிட விரும்பாத சிவில்
அமைப்பொன்றை பிரதிநிதியொருவர் கூறினார்.
இதேவேளை அமெரிக்கா இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த
முயல்வதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
ஆங்கில பத்திரிகையொன்றிற்கு கருத்து தெரிவித்த அவர், யூஎஸ்எயிட் நிகழ்ச்சி
திட்டம் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்கான முயற்சியென்று
வருணித்துள்ளார்.
=============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக