வியாழன், 2 அக்டோபர், 2014

ஜெயலலிதா ஜாமீன் மனுவை இன்று மாலை விசாரிக்க கோரிய 2-வது அவசர கால மனுவை ஏற்க பதிவாளர் மறுப்பு

ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.இதையடுத்து பெங்களூர் பரப்பன அஹ்ரகார சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை  விடுமுறைக்கால நீதிபதி ரத்ன கலா வருகிற 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.இதையடுத்து ஜெயலலிதா தரப்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது  இன்று விசாரணை நடைபெற்றது. ஆனால் அரசு வழக்கறிஞர் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால், . மேலும் மனுவை விசாரிக்க மறுத்து அக்டோபர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்

நீதிபதி ரத்னகலா இரு முறை விசாரணையை ஒத்தி வைத்து விட்டதால் ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் அதிர்ச்சி அடைந்தனர். இன்று அவர்கள் மீண்டும் அவசர கால மனுவை 2-வது முறையாக தாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதா ஜாமீன் மனுவை வேறு நீதிபதி கொண்டு இன்று மாலையே விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.

கர்நாடக ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பட்டேலை சந்தித்து இந்த மனுவை கொடுத்தனர். ஆனால் அவர் அவசர கால மனுவை ஏற்க மறுத்து விட்டார்.

கருத்துகள் இல்லை: