வெள்ளி, 28 நவம்பர், 2014

Tamil Maanila Congress தமிழ் மாநில காங்கிரஸ்


தமிழ் மாநில காங்கிரஸ்


முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார். கட்சியின் கொடியை நேற்று முன்தினம் (26–ந்தேதி) ஜி.கே.வாசன் சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார். அதில் காவி, வெள்ளை, பச்சை நிறத்துடன் காமராஜர், மூப்பனார் படங்கள் இடம் பெற்றிருந்தன.



இதையடுத்து மாநாட்டை அறிவிக்கும் வகையில் நேற்று சென்னையில் ராட்சத பலூனையும் பறக்க விட்டார்.

புதிய கட்சியின் பிரமாண்ட தொடக்க விழா திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் இன்று மாலை கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதற்காக அங்கு 60 அடி நீளம், 40 அடி அகலத்தில் 120 பேர் அமரும் வகையில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.

கோட்டை வடிவிலான மேடையின் வலதுபுறம் வளமான தமிழகம் என்ற வாசகத்துடன் புனித ஜார்ஜ் கோட்டையும், இடதுபுறம் வலிமையான பாரதம் என்ற வாசகத்துடன் டெல்லி செங்கோட்டையின் மாதிரியும் வைக்கப்பட்டிருந்தது.

மாலை 5 மணிக்கு மேடையேறிய ஜி.கே.வாசன், புதிய கட்சி துவக்க விழாவிற்கு வந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக பேசத் தொடங்கினார். வளமான தமிழகத்தை உருவாக்க மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கியிருப்பதாக கூறினார். இதன்மூலம், மூப்பனார் உருவாக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் உதயமாகி உள்ளது. புதிய கட்சியின் பெயரை வாசன் முறைப்படி அறிவித்த பின்னர் கட்சியின் மூத்த தலைவர்கள் உரையாற்றினர்.

கருத்துகள் இல்லை: