தஞ்சை- விளார் சாலையில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று புதன் திறந்துவைக்கப்பட்டது.
விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முற்றம் அமைக்கப்பட்டிருக்கிறது.
அது திறக்கப்படுவதற்கான அனுமதியினை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நேற்று அளித்த நிலையில் இன்று நினைவு முற்றத்தை உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து மூன்று நாட்கள், நவம்பர் 8, 9, 10 தேதிகளில் முற்றத் திறப்பினை ஒட்டிய விழா முத்துக்குமார் திடல் பாலச்சந்திரன் அரங்கில் விழா நடைபெறுகிறது.
பல்வேறு கட்சித் தலைவர்களும், தமிழ் அறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
( BBC UK - Tamil News )
Venue : Thanjavur : Vilar Salai (Road) தஞ்சை- விளார் சாலை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக