திங்கள், 25 நவம்பர், 2013

உதயன் epaper 25Nov மாவீரருக்கு அஞ்சலி செய்ய கூட்டமைப்பு முயற்சிக்கும்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகவல்.

http://euthayan.com/indexresult.php?id=24347&thrus=0

"ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தில் கூட தீபமேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி  செலுத்தப்பட்டது. அப்படியிருக்கையில் போர் முடிந்த பின்னர் இறந்தவர்களை நினைவுகூரக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்? 

எமது உரிமைக்காகப் போராடி மரணித்த உறவுகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த இறுதிவரை நாம் முயல்வோம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தாயக மண்ணின் விடுதலைக்காக வித்தாகிப்போனவர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை நினைவு கூரப்படவுள்ளது. இந்த நிலையில், அன்றைய நாள் பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் இராணுவத்தினரும் பொலிஸாரும் அறிவித்துள்ளனர்.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் இந்தத் தடை உத்தரவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று மாலை "உதயன்' வினவியது.

இதன்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

மாவீரர் அஞ்சலி மரபார்ந்த நிகழ்வு - மாவை சேனாதிராசா

இந்த நாடு ஜனநாயக நாடு என்றால் மக்கள் தங்கள் எண்ணங்களை - உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், ஒன்று கூடுவதற்கும், இறந்தவர்களை நினைவு கூருவதற்கும் சுதந்திரம் உள்ளது. தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களுக்கு ஈமக்கடன் நிறைவேற்றுவது
முக்கியமானதாக விளங்குகின்றது.

எனவே, தமிழர்கள் தமது உரிமைக்காகப் போராடி மரணித்த உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி - அஞ்சலி செலுத்துவதை எவராலும் தடுக்கமுடியாது.

அவர்கள் வீடுகளில் கூட மரணித்த தமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள். இது அன்றுதொட்டு நிலவிவரும் வழக்கமாகும்.

இந்த நிலையில், மாவீரர் நாளான நவம்பர் 27ஆம் திகதியை பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் இராணுவமும், பொலிஸாரும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் இவ்வாறான தடை உத்தரவுகள் தமிழ் மக்களின் மனக்காயங்களையும், துன்ப துயரங்களையும் மேலும் ஆழப்படுத்தும் என்பதை அரசுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம்.

மாவீரர்களுக்கு பயங்கரவாத முத்திரையா? - செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவினைத் தழுவிய மாவீரர்களை தமிழர்கள் நினைவு கூருவதை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது பெரும் மனித உரிமை மீறலாகும்.

இலங்கையில் "மாவீரர்' என்ற பதம் அரசுக்கும், சிங்களப் பேரினவாதத்திற்கும் அச்சத்தைத் தரும் ஒரு சொல்லாக உள்ளது.

தாயக மண்ணையும் தமிழ் மக்களையும் நேசித்துப் போராடி உயிர்நீத்த அந்த உத்தம தியாகிகளுக்கு தீவிரவாதிகள் - பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

இறந்தவர்கள் விடயத்திலும் அடக்கு முறையை இலங்கை அரசு பிரயோகித்து வருகின்றது. எனினும், தமிழர்கள் மரணித்த தமது உறவுகளுக்கு வருடாவருடம் ஏதோ ஒரு வழியில் விளக்கேற்றி - அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எத்தடை வரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து மரணித்த தமது உறவுகளுக்கு தமிழர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள்.

நாடாளுமன்றத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலித்ததை மறந்துவிட்டார்களா ---பா.அரியநேத்திரன்

மாவீரர்கள் இலங்கையில்தான் பிறந்தவர்கள். அவர்கள் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர். அவர்களும் எம்மைப் போல தமிழ்த் தாயின் வயிற்றில்தான் பிறந்தார்கள்.

தமிழருக்கான உரிமை சிங்கள அரசால்  மறுக்கப்பட்டதனால் தான் அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி மரணித்தார்கள். மாவீரர்களின் இந்தத் தியாகத்தினால்தான் அவர்களை நாம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துகின்றோம்.

கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற வளாகத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதை ஆட்சியில் உள்ளவர்கள் மறக்கமாட்டார்கள். அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதையடுத்து இவ்வாறான அஞ்சலி நிகழ்வுக்கு அரசு தடைவிதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், மாவீரர்கள் உயிருடன் உள்ளவர்கள் அல்லர். அவர்கள் இறந்தவர்கள். இறந்தவர்களை நினைவு கூருவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு.

தமிழர்கள், இறந்தவர்களை நினைவு கூருவதற்குக்கூட தடைவிதித்தால் நாட்டில் இன ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பே இருக்காது என்பதை அரசும், அதன் படைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். இதையும் மீறி தடை விதித்தாலும் தமிழர்கள் தமது மனங்களில் - தமது வீடுகளில் மாவீரர் செல்வங்களை நினைவுகூருவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது'' என்றார்.

=====================================

"ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தில் கூட தீபமேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி  செலுத்தப்பட்டது. அப்படியிருக்கையில் போர் முடிந்த பின்னர் இறந்தவர்களை நினைவுகூரக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்? எமது உரிமைக்காகப் போராடி மரணித்த உறவுகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த இறுதிவரை நாம் முயல்வோம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 
தாயக மண்ணின் விடுதலைக்காக வித்தாகிப்போனவர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை நினைவு கூரப்படவுள்ளது. இந்த நிலையில், அன்றைய நாள் பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் இராணுவத்தினரும் பொலிஸாரும் அறிவித்துள்ளனர்.
 
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் இந்தத் தடை உத்தரவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று மாலை "உதயன்' வினவியது. 
 
இதன்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: 
 
மாவீரர் அஞ்சலி மரபார்ந்த நிகழ்வு - மாவை சேனாதிராசா
இந்த நாடு ஜனநாயக நாடு என்றால் மக்கள் தங்கள் எண்ணங்களை - உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், ஒன்று கூடுவதற்கும், இறந்தவர்களை நினைவு கூருவதற்கும் சுதந்திரம் உள்ளது. தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களுக்கு ஈமக்கடன் நிறைவேற்றுவது 
முக்கியமானதாக விளங்குகின்றது. 
 
எனவே, தமிழர்கள் தமது உரிமைக்காகப் போராடி மரணித்த உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி - அஞ்சலி செலுத்துவதை எவராலும் தடுக்கமுடியாது. 
 
அவர்கள் வீடுகளில் கூட மரணித்த தமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள். இது அன்றுதொட்டு நிலவிவரும் வழக்கமாகும். 
 
இந்த நிலையில், மாவீரர் நாளான நவம்பர் 27ஆம் திகதியை பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் இராணுவமும், பொலிஸாரும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 
 
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் இவ்வாறான தடை உத்தரவுகள் தமிழ் மக்களின் மனக்காயங்களையும், துன்ப துயரங்களையும் மேலும் ஆழப்படுத்தும் என்பதை அரசுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம்.
 
மாவீரர்களுக்கு பயங்கரவாத முத்திரையா? - செல்வம் அடைக்கலநாதன் 
தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவினைத் தழுவிய மாவீரர்களை தமிழர்கள் நினைவு கூருவதை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது பெரும் மனித உரிமை மீறலாகும். 
 
இலங்கையில் "மாவீரர்' என்ற பதம் அரசுக்கும், சிங்களப் பேரினவாதத்திற்கும் அச்சத்தைத் தரும் ஒரு சொல்லாக உள்ளது. 
 
தாயக மண்ணையும் தமிழ் மக்களையும் நேசித்துப் போராடி உயிர்நீத்த அந்த உத்தம தியாகிகளுக்கு தீவிரவாதிகள் - பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
 
இறந்தவர்கள் விடயத்திலும் அடக்கு முறையை இலங்கை அரசு பிரயோகித்து வருகின்றது. எனினும், தமிழர்கள் மரணித்த தமது உறவுகளுக்கு வருடாவருடம் ஏதோ ஒரு வழியில் விளக்கேற்றி - அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
 
எத்தடை வரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து மரணித்த தமது உறவுகளுக்கு தமிழர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள்.
 
நாடாளுமன்றத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலித்ததை மறந்துவிட்டார்களா பா.அரியநேத்திரன் 
 
மாவீரர்கள் இலங்கையில்தான் பிறந்தவர்கள். அவர்கள் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர். அவர்களும் எம்மைப் போல தமிழ்த் தாயின் வயிற்றில்தான் பிறந்தார்கள். 
 
தமிழருக்கான உரிமை சிங்கள அரசால்  மறுக்கப்பட்டதனால் தான் அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி மரணித்தார்கள். மாவீரர்களின் இந்தத் தியாகத்தினால்தான் அவர்களை நாம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துகின்றோம். 
 
கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற வளாகத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதை ஆட்சியில் உள்ளவர்கள் மறக்கமாட்டார்கள். அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 
 
விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதையடுத்து இவ்வாறான அஞ்சலி நிகழ்வுக்கு அரசு தடைவிதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், மாவீரர்கள் உயிருடன் உள்ளவர்கள் அல்லர். அவர்கள் இறந்தவர்கள். இறந்தவர்களை நினைவு கூருவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு. 
 
தமிழர்கள், இறந்தவர்களை நினைவு கூருவதற்குக்கூட தடைவிதித்தால் நாட்டில் இன ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பே இருக்காது என்பதை அரசும், அதன் படைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். இதையும் மீறி தடை விதித்தாலும் தமிழர்கள் தமது மனங்களில் - தமது வீடுகளில் மாவீரர் செல்வங்களை நினைவுகூருவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது'' என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=623992466225289047#sthash.FWhL7M6s.dpuf

கருத்துகள் இல்லை: