புதன், 27 நவம்பர், 2013

உதயன் Epaper 27Nov2013

பிரபாவின் பெயரால் நேற்று நாடாளுமன்று கொந்தளிப்பு; கூட்டமைப்பு எம்.பியின் உரையால் அரச தரப்பினர் சீற்றம்

http://euthayan.com/indexresult.php?id=24391&thrus=0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் நேற்று பிரபாகரன் குறித்தும் இன்று அனுஷ்டிக்கப்படும் மாவீரர்நாள் தொடர்பிலும் ஆற்றிய உரைக்கு ஆளும் தரப்பால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

நாடாளுமன்றில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர்  வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது.

இதில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தமிழீழ  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் தொடர்பிலும் மாவீரர்நாள் சம்பந்தமாகவும் உணர்வுபூர்வமான கருத்துகளை வெளியிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் உரையைத் தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்., பிரபாகரன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பேசிய விடயங்களை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு சபா பீடத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து அப்போது சபா பீடத்துக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் "சிறிதரன் எம்.பி.யின் உரையில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு முரணான கருத்துக்கள் இருப்பின் அவை ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படும்" என்று கூறினார்.

இதன் பின்னர் உரையாற்றிய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, சிறிதரன் எம்.பி.யின் உரையை கடுமையாகக் கண்டித்துப் பேசினார். பிரபாகரன் தீவிரவாதி அல்லர். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என சிறிதரன் எம்.பி. கூறுகிறார்.

இவர்கள் இப்படியான கருத்துகளைத் தொடர்ந்து கூறிவருவதால்தான் வடக்கில் இராணுவத்தினர் நிலைநிறுத் தப்பட்டுள்ளனர் என்றும் எஸ்.பி. காட்டம் வெளியிட்டார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளை நினைவுகூரும் கோரிக்கையை உலகம்கூட ஏற்காது என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் தெரிவித்தார். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் சிறிதரன் எம்.பியின் உரையை விமர்சித்திருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்ததினமான நேற்று அவரின் பெயர் மற்றும் மாவீரர் நாள் தொடர்பில் நாடாளுமன்றில் அரச தரப்பு சீற்றமடைந்தது.
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=641682472027727312#sthash.iwoAyh23.dpuf

கருத்துகள் இல்லை: