தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
அ.தி.மு.க. தனித்து போட்டி
இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது.
எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் அ.தி.மு.க. துணிச்சலுடன் தனித்து களம் இறங்கியதுமுதல்-அமைச்சர் ஜெயலலிதா மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்டார். அவரது உரையை கேட்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.37 தொகுதிகளில் வெற்றிதேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. 37 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்து உள்ளது.தமிழ்நாட்டில் கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதாவும், தர்மபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரசும் வெற்றி பெற்றன. இந்த 3 தொகுதிகள் தவிர மற்ற 37 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடினார்கள்.
இது, இதற்கு முன் எப்போதும் கிடைக்காத வெற்றி ஆகும். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் கூட அ.தி.மு.க. இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது இல்லை.
வரலாற்று சாதனைகடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 33 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
அதன்பிறகு 2009-ம் ஆண்டு தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சி 9 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால் இந்த தேர்தலில் தனித்து களம் இறங்கிய அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது.
இது ஒரு வரலாற்று சாதனை ஆகும்.
அ.தி.மு.க. வென்ற தொகுதிகள்
அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் வருமாறு:-
1. திருவள்ளூர் - டாக்டர் வேணுகோபால்
2. வடசென்னை- டி.ஜி.வெங்கடேஷ்பாபு
3. தென்சென்னை- டாக்டர் ஜெ.ஜெயவர்தன்
4. மத்திய சென்னை- எஸ்.ஆர்.விஜயகுமார்
5. ஸ்ரீபெரும்புதூர்- கே.என்.ராமச்சந்திரன்
6. காஞ்சீபுரம்- மரகதம் குமரவேல்
7. அரக்கோணம்-திருத்தணி கோ.அரி
8. வேலூர்- பா.செங்குட்டுவன்
9. கிருஷ்ணகிரி- கே.அசோக்குமார்
10. திருவண்ணாமலை- ஆர்.வனரோஜா
11. ஆரணி- செஞ்சி சேவல் வெ.ஏழுமலை
12. விழுப்புரம்- எஸ்.ராஜேந்திரன்
13. கள்ளக்குறிச்சி- டாக்டர் காமராஜ்
14. சேலம்- வி.பன்னீர்செல்வம்
15. நாமக்கல்- வி.ஆர்.சுந்தரம்
16. ஈரோடு- எஸ்.செல்வக்குமார சின்னையன்
17. திருப்பூர்- வி.சத்தியபாமா
18. நீலகிரி- சி.கோபாலகிருஷ்ணன்
19. கோயம்புத்தூர்- ஏ.பி.நாகராஜன்
20. பொள்ளாச்சி- சி.மகேந்திரன்
21. திண்டுக்கல்- எம்.உதயகுமார்
22. கரூர்- மு.தம்பிதுரை
23. திருச்சி- ப.குமார்
24. பெரம்பலூர்- ஆர்.பி.மருதைராஜ்
25. கடலூர்- அருண்மொழிதேவன்
26. சிதம்பரம்- மா.சந்திரகாசி
27. மயிலாடுதுறை- ஆர்.கே.பாரதி மோகன்
28. நாகப்பட்டினம்- டாக்டர் கே.கோபால்
29. தஞ்சாவூர்- கு.பரசுராமன்
30. சிவகங்கை- பி.ஆர்.செந்தில்நாதன்
31. மதுரை- இரா.கோபாலகிருஷ்ணன்
32. தேனி- ஆர்.பார்த்திபன்
33. விருதுநகர்- டி.ராதாகிருஷ்ணன்
34. ராமநாதபுரம்- அ.அன்வர்ராஜா
35. தூத்துக்குடி- ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி
36. தென்காசி- வசந்தி முருகேசன்
37. திருநெல்வேலி- கே.ஆர்.பி.பிரபாகரன்
--------------------------------------------------------------------------------------------
கன்னியாகுமரி : பொன்.ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)
தருமபுரி : அன்பு மணி இராமதாஸ் ( ப.ம.கட்சி )
--------------------------------------------------------------------------------------------------
வைகோ : தோல்வி
விருதுநகரில் போட்டியிட்ட திரு.வைகோ தோல்வியடைந்தார் !
----------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக