Tamil Newspapers & ePaper,தமிழ்ச் செய்திதாள்கள் & இ பேப்பர் ,Journaux Tamouls, Tamilisch Zeitung, Kranten, Aviser
ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
சனி, 29 செப்டம்பர், 2012
வெள்ளி, 28 செப்டம்பர், 2012
தமிழ்நாட்டுக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங் பிறப்பித்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதி
தமிழ்நாட்டுக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங் பிறப்பித்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவரான பிரதமரின் உத்தரவை செயல்படுத்த மறுப்பதற்காக கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
பிரதமரின் உத்தரவுப்படி, தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், அக்டோபர் 15-ம் தேதி வரை தினசரி விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 19-ம் தேதி, பிரதமர் தலைமையில் நடந்த காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தில், தமிழகம், கர்நாடகம் மற்றும் புதுவை முதலமைச்சர்களும், கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் பங்கேற்றார்கள்.
தமிழ்நாடு அரசு, 30 நாட்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டிஎம்சி தண்ணீராவது வேண்டும் என்று கேட்டது. ஆனால், கர்நாடகம் மறுத்துவிட்டது. அதையடுத்து, ஆணையத்தின் தலைவர் என்ற முறையில், செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15 வரை தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு பிரதமர் உத்தரவிட்டார். ஆனால் அது சாத்ததியமில்லை என்று கூறிய கர்நாடக முதல்வர், அந்த உத்தரவுக்கு எதிராக வெளிநடப்புச் செய்தார். அதே நேரத்தில், 9 ஆயிரம் கனஅடி நீர் என்பது எதற்குமே போதாது என தமிழகமும் அதை ஏற்க மறுத்தது.
இந்நிலையில், தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது. 24 நாட்களுக்கு தினசரி 2 டிஎம்சி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரியது.
"உயர்ந்த அதிகாரம் படைத்த பிரதமரின் உத்தரவை செயல்படுத்த முடியாது என்று கூறுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது"
உச்சநீதிமன்றம்
அந்த மனு, நீதிபதிகள் டி.கே. ஜெயின் மற்றும் மதன் லோகுர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, பிரதமரின் உத்தரவை செயல்படுத்த மறுப்பது ஏன் என்று நீதிபதிகள் கர்நாடக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
கோரிக்கை
கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுவதாகவும், அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்றும் கர்நாடக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால் அந்த விளக்கத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். 'உயர்ந்த அதிகாரம் படைத்த பிரதமரின் உத்தரவை செயல்படுத்த முடியாது என்று கூறுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என்று கூறிய நீதிபதிகள், அக்டோபர் 15 வரை விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம், தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிட்டார்கள்.
அதே நேரத்தில், தினசரி 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பிரதமர் உத்தரவிட்ட பிறகும் அதை செயல்படுத்தாமல் இருந்தது ஏன் என்பது குறித்தும் பதிலளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதிடும்போது, 9 ஆயிரம் கனஅடி நீர் போதுமானது அல்ல என்றும் 2 டிஎம்சியாவது வேண்டும் என்று கோரினார். ஆனால், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்தாலோசித்துத்தான் பிரதமர் இந்த முடிவை எடுத்திருப்பார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால், பற்றாக்குறை காலத்தில் தங்களுக்கு வர வேண்டிய நியாயமான அளவைத்தான் தமிழகம் கோருவதாக வைத்திநாதன் சுட்டிக்காட்டினார்.
வியாழன், 27 செப்டம்பர், 2012
புதன், 26 செப்டம்பர், 2012
செவ்வாய், 25 செப்டம்பர், 2012
திங்கள், 24 செப்டம்பர், 2012
ஞாயிறு, 23 செப்டம்பர், 2012
உதயன் 23Sep2012 ஐ.நா. பொதுச்சபையில் இலங்கைக்கு கண்டனம்
ஐ.நா. பொதுச்சபையில் இலங்கைக்கு கண்டனம் பிரிட்டனின் ஆதரவுடன் மற்றொரு தீர்மானம் நிறைவேறும் சாத்தியம்
ஐ.நா. பொதுச்சபையின்
67ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் தீர்மானம் ஒன்றைக்
கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம் பெறுவதாக இராஜதந்திர
வட்டாரங்களை மேற் கோள்காட்டித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டனின் ஆதரவுடனேயே இந்தத்
தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா.
பொதுச் சபையின் 67ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை
ஆரம்பமாகி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 19ஆம் திகதி முடிவடைகிறது.
இந்தக் கூட்டத் தொடரிலேயே இலங்கையின்
மனித உரிமை விவகாரம் பற்றிய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக
நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத்தின் மூன்றாவது அமர்விலேயே இந்தத்
தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிகள் நடப்பதாகத்
தெரியவந்துள்ளது.
இது தொடர்பாகப் பிரிட்டன் அரசின்
பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று நியூயோர்க்கில் ஐ.நாவின் பிரதிநிதிகளுடன்
கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன.
இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானம்
எதிர்வரும் ஒக்ரோபர் 10 ஆம் திகதி கொண்டு வரப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஐ.நாவில் இந்த்த் தீர்மானத்தை
எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் இலங்கை அரச அதிகாரிகள் பலரும்
மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
------------------------------------------------------------------
Viduthalai iphone Apps விடுதலை நாளிதழ் ஐ-போன் செயலி
விடுதலை நாளிதழ் ஐ-போன் செயலியை தரமிறக்க 'ஆப்பிள்' நிறுவன தளத்திக்கு செல்லவும்
-------------------------------------------------------------------------------------
சனி, 22 செப்டம்பர், 2012
தொடங்கியது தூத்துக்குடி துறைமுக முற்றுகை போராட்டம்
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான நெல்லை, தூத்துக்குடி மக்களின் துறைமுக முற்றுகைப் போராட்டம் இன்று ( 22Sep ) நடைப் பெற்றுவருகிறது.
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இடிந்தகரை மக்கள் பல்வேறுக் கட்டங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இன்று 22Sep நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மீனவ மக்கள் தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆண்கள் நேற்றே தங்கள் மீன் பிடி படகுகள் மூலம் புறப்பட்டு வீரபாண்டி பட்டினத்தில் தங்கியிருந்து விட்டு இன்று தூத்துக்குடி துறைமுக எல்லையில் முற்றுகைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மீன்பிடி படகின் முன்புறம் தேசியக் கொடியும், பின்புறம் கறுப்புக் கோடியும் கட்டியபடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடித்துறை முகத்திலிருந்து 300 விசைப்படகு மற்றும் நாட்டுப்புற படகுகளில் துறைமுகம் நோக்கி அவர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தை கடல் வழியாக சென்று முற்றுகையிட, 5 ஆயிரம் மீனவர்களாக படகுகளில் பயணம் சென்றுள்ளனர்.
இடிந்தகரை பெண்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, கடற்கரை சாலையில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக இவர்களின் மனித சங்கிலிப் போராட்டம் நீண்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகை இட சென்ற மீனவர்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க நெய்வேலி, சேலம் ஆகிய ஊர்களின் பாதுகாப்புப் படை காவல்துறையினர் வரவழைக்கப் பட்டுள்ளனர் என்று தெரிகிறது.
வெள்ளி, 21 செப்டம்பர், 2012
வைகோ கைது ! ( கறுப்புக்கொடி காட்டாமலேயே )
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கறுப்புக் கொடி காட்ட மத்திய பிரதேசம் சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் புத்தமத பல்கலைக்கழக விழாவில் கலந்து கொள்ள அதிபர் ராஜபக்ச சென்றிருக்கிறாN.
இந்நிலையில் இன்று காலை சிந்த்வாராவிலிருந்து சாஞ்சி நோக்கி தமது தொண்டர் படையுடன் வைகோ புறப்படத் தயாரானார்.
ஆனால் வைகோ மற்றும் அவரது தொண்டர்களை முன்னேறவிடாமல் தடுத்த மத்திய பிரதேச மாநில பொலிஸார் அனைவரையும் கைது செய்தனர்.
அப்போது வைகோ மற்றும் அவரது தொண்டர்கள், "மன்னிக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்! மத்திய அரசை மன்னிக்கமாட்டோம்"!
மத்திய பிரதேச பாஜக அரசையும் மன்னிக்க மாட்டோம் என்று முழக்கமிட்டனர்.
கைது நடவடிக்கையின்போது பொலிஸாருக்கும் மதிமுக தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது.
அப்போது பேசிய வைகோ, தமிழர்கள் விடயத்தில் பாஜகவும் காங்கிரசும் மக்களின் மன ஓட்டைத்தைப் புரிந்து கொள்ளாமல் செயற்பட்டு வருகின்றன என்றார்.
வியாழன், 20 செப்டம்பர், 2012
சுட்டெரிக்கும் வெயிலில் போராடும் வைகோ
ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேச மாநில எல்லையில் நடுரோட்டில் அமர்ந்து வைகோ போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று இரவு விடிய விடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராடிய வைகோ, இன்று சுட்டெரிக்கும் வெயிலிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தமத கல்வி நிலைய தொடக்க விழாவில் பங்கேற்க டெல்லி வந்துள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு பேருந்துகளில் சென்றனர்.
இவர்கள் மகாராஷ்டிரம்- மத்தியப் பிரதேச எல்லையில் உள்ள பந்துர்னா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், போராட்டத்தைக் கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு கூறினர்.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தொடர்பு கொண்டு, போராட்ட முடிவைக் கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு கோரிக்கைவைத்தார்.
இன்று காலையும் உயர் அதிகாரிகள் வந்து வைகோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வைகோ திரும்பிச் செல்வதில்லை என்று தெளிவாக கூறிவிட்டார்.
அப்போது ராஜபக்சவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. அசம்பாவித சம்பாவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு குவிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பொலிஸாரும் அவர்களுக்கு எதிரிலேயே அமர்ந்துள்ளனர்.
விடிய விடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராட்டம் நடைபெற்றது. வைகோ உடன் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் இரவு உணவு அங்கேயே சமைத்து பரிமாறப்பட்டது.
ராஜபக்சவின் கொடுமைகளை பற்றி ஹிந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தை அங்குள்ள கிராம மக்களுக்கு தொண்டர்கள் விநியோகம் செய்தனர்.
இதனையடுத்து நள்ளிரவில் கொட்டும் பனியில் நடுரோட்டில் தொண்டர்களுடன் வைகோ படுத்து உறங்கினார்.
காலையில் உள்ளூர் மக்கள் உணவும், நீரும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். கொளுத்தும் வெளியில் பேராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் கூட்டத்தில் பேசிய வைகோ, ராஜபக்சவுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மட்டுமல்லாது பாஜகவும் ஆதரவு தருவதாக குற்றம் சாட்டினார்.
மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று தம்மிடம் கூறிவிட்டு தற்போது எல்லையிலேயே தடுத்து நிறுத்திவிட்டதாகவும் வைகோ தெரிவித்தார்.
தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ச இந்தியாவிற்கு வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இதற்காக ஒரு உயிர் வேறு போயிருக்கிறது. தங்களை தடுத்து நிறுத்தினாலும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று கூறினார். இதற்காக தாம் கைதாகவும் தயார் என்றும் வைகோ கூறினார்.
உதயன் 20Sep2012
இனப்பிரச்சினைக்குச் சாத்தியமான அரசியல் தீர்வு காணுமாறு, புது டில்லியில் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பின் போது, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என்று புதுடில்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்பதற்காக, மத்தியப் பிரதேச மாநில அரசின்
அழைப்பின் பேரில், ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ மூன்று நாள் பயணமாக நேற்றுப்
புதுடில்லி சென்றுள்ளார்.
நேற்றிரவு புதுடில்லியைச் சென்றடைந்த
அவருக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இன்று இராப்போசன
விருந்தளிக்கிறார். இந்தத் தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்
சையத் அக்பர்தீன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த இராப்போசன விருந்துடனான
சந்திப்பின் போது, இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு
குறித்த விவகாரங்கள் தொடர்பான இந்தியாவின் கரிசனைகள் குறித்து மன்மோகன்சிங்
வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இலங்கையில் நீண்டகாலமாகத்
தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி மன்மோகன் சிங்
அழுத்தம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி
ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கும்போது இரண்டு முக்கியமான
விடயங்களை வலியுறுத்திப் பேச்சு நடத்தவுள்ளார் என அரச உயர்மட்ட வட்டாரங்கள்
தெரிவித்தன.
உதயன் epaper 20Sep2012 <<<<<
Labels:
இலங்கை / srilanka,
ஈழம் / Eelam,
உதயன் / Uthayan
புதன், 19 செப்டம்பர், 2012
செவ்வாய், 18 செப்டம்பர், 2012
மத்திய அரசுக்கு ஆதரவு விலகல் : மமதா அறிவிப்பு
இந்தியாவில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
முடிவெடுத்திருப்பதாக அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா
பானர்ஜி அறிவித்துள்ளார்.
ஆதரவை விலக்கிக் கொள்ள முடிவெடுத்திருக்கும் நிலையி்ல், வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியம் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
தற்போதுள்ள மத்திய அரசு 3 அல்லது 6 மாதங்களுக்குத்தான் நீடிக்கும் என்று கூறிய மமதா பானர்ஜி, தலை துண்டிக்கப்படும்போது அந்த அரசில் தொடர்வது சாத்தியமில்லை என்று குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை ராஜிநாமா
அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வெள்ளிக்கிழமையன்று பிரதமரிடம் ராஜிநாமா கடிதங்களை சமர்ப்பிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு எந்த முடிவு குறித்தும் தங்களிடம் ஆலோசனை நடத்தவில்லை என்றும், துளி கூட மரியாதை இ்ல்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்த பிரச்சினையை திசை திருப்புவதற்குத்தாநன் அரசு அன்னிய முதலீட்டை அனுமதித்திருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், இ்ந்தியாவில் 50 பில்லியின் ம்ககள் அமைப்புசாரா தொழிலில் , சில்லறை வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசு சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் அவர்கள் கதி என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.
கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவர அரசு தயங்குவது ஏன் என்று மமதா கேள்வி எழுப்பினார்.
ஒரு கட்சி ஆதரவளிக்காவிட்டால், இன்னொரு கட்சி ஆதரவு என்று காங்கிரஸ் கட்சியின் விளையாட்டுப் பற்றி தங்களுக்கு நன்றாகவே தெரியும் என்ற அவர், அந்தக் கட்சி பிளாக்மெயில் அரசியல் நடத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்த இருப்பதாகவும், ரயில்வே அமைச்சகத்தை இழந்ததைப் பற்றி்க் கவலைப்படவில்லை என்றும் மமதா பானர்ஜி தெரிவித்தார்.
ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்ட ம.பி.க்கு தொண்டர்களுடன் வைகோ பேருந்தில் பயணம்
சென்னை: மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு வருகை தர உள்ள இலங்கை அதிபர் மகிந்த
ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தொண்டர்களுடன் 15 பேருந்துகளில் அம்மாநிலத்துக்கு சென்றுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற உள்ள புத்த மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் 21-ந் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே வருகை தருகிறார். ஆனால் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சேவின் வருகைக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக அறிவித்திருந்தது. ஆனால் இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு வைகோவுக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை வைகோ நிராகரித்துவிட்டார். திட்டமிட்டபடி பேருந்துகளில் தொண்டர்களுடன் மத்தியப் பிரதேசம் செல்வோம் என்று வைகோ அறிவித்திருந்தார்.
காந்தி படத்துக்கு கோட்சே மாலை போடுவதா?
இதைத் தொடர்ந்து நேற்று மத்திய பிரதேசம் செல்வதற்கு முன்பாக அண்ணா நினைவிடத்துக்கு சென்ற வைகோ அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய அரசு நடத்தும் விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை தமிழர்கள் பட்ட வேதனையை உலகத் தமிழர்களிடம் எடுத்து செல்வதற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம். நாதியில்லாமல் போய்விட்டதா தமிழ் ஜாதி.
மகாத்மா காந்தி படத்துக்கு மாலைபோட கோட்சேவை கூப்பிடுவதா?.
இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணத்தில், தமிழர் வாழ்ந்த பகுதியில் 1,607 இந்து கோவில்களை இடித்ததாக 1993-ம் ஆண்டு இலங்கை அரசே கூறியுள்ளது. அப்படி இருக்கும்போது, இந்து கோவில்களை இடித்த இலங்கை அரசின் அதிபரை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்திய பிரதேச அரசு அழைத்திருக்கிறது. சொரணை உள்ள தமிழன் தமிழ்நாட்டில் இருக்கிறான் என்பதை காட்டவே போராட்டம் நடத்த செல்கிறோம். எங்கள் போராட்டம் அறவழியில்தான் நடக்கும். போபால் போலீஸ் எங்களை உள்ளே விடவில்லை என்றால், எல்லையிலேயே போராட்டம் நடத்துவோம்.
தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்றால், மத்தியபிரதேச மக்கள் ராஜபக்சேவை உள்ளே விடாமல் விரட்ட வேண்டும் என்றார் அவர்.
அதன் பின்னர் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் முன்பு இருந்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க. தொண்டர்கள் 600 பேர், 15 பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற உள்ள புத்த மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் 21-ந் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே வருகை தருகிறார். ஆனால் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சேவின் வருகைக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக அறிவித்திருந்தது. ஆனால் இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு வைகோவுக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை வைகோ நிராகரித்துவிட்டார். திட்டமிட்டபடி பேருந்துகளில் தொண்டர்களுடன் மத்தியப் பிரதேசம் செல்வோம் என்று வைகோ அறிவித்திருந்தார்.
காந்தி படத்துக்கு கோட்சே மாலை போடுவதா?
இதைத் தொடர்ந்து நேற்று மத்திய பிரதேசம் செல்வதற்கு முன்பாக அண்ணா நினைவிடத்துக்கு சென்ற வைகோ அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய அரசு நடத்தும் விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை தமிழர்கள் பட்ட வேதனையை உலகத் தமிழர்களிடம் எடுத்து செல்வதற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம். நாதியில்லாமல் போய்விட்டதா தமிழ் ஜாதி.
மகாத்மா காந்தி படத்துக்கு மாலைபோட கோட்சேவை கூப்பிடுவதா?.
இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணத்தில், தமிழர் வாழ்ந்த பகுதியில் 1,607 இந்து கோவில்களை இடித்ததாக 1993-ம் ஆண்டு இலங்கை அரசே கூறியுள்ளது. அப்படி இருக்கும்போது, இந்து கோவில்களை இடித்த இலங்கை அரசின் அதிபரை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்திய பிரதேச அரசு அழைத்திருக்கிறது. சொரணை உள்ள தமிழன் தமிழ்நாட்டில் இருக்கிறான் என்பதை காட்டவே போராட்டம் நடத்த செல்கிறோம். எங்கள் போராட்டம் அறவழியில்தான் நடக்கும். போபால் போலீஸ் எங்களை உள்ளே விடவில்லை என்றால், எல்லையிலேயே போராட்டம் நடத்துவோம்.
தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்றால், மத்தியபிரதேச மக்கள் ராஜபக்சேவை உள்ளே விடாமல் விரட்ட வேண்டும் என்றார் அவர்.
அதன் பின்னர் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் முன்பு இருந்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க. தொண்டர்கள் 600 பேர், 15 பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர்.
திங்கள், 17 செப்டம்பர், 2012
ஞாயிறு, 16 செப்டம்பர், 2012
அமெரிக்கர்களை தாக்கினால் பொறுத்து கொள்ள மாட்டோம்: ஒபாமா பேச்சு
அமெரிக்காவின் காப்டிக் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தில் இஸ்லாம் பற்றி விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எகிப்து, லிபியா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன.
லிபியாவில் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், வாஷிங்டனில் அதிபர் ஒபாமா நேற்று ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசியதாவது: உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் இந்த நேரத்தில் உலகத்துக்கு ஒரு உறுதியான செய்தியை சொல்கிறோம். எங்கள் நாட்டு மக்களை தாக்கியவர்கள் நீதியின் பிடியில் இருந்து தப்ப முடியாது.
அமெரிக்காவை அசைக்க நினைக்கும் எவரையும் அனுமதிக்க மாட்டோம். அமெரிக்க மக்களை யாரும் தாக்குவதை ஒருபோதும் பொறுத்து கொள்ளவே மாட்டோம். நாங்கள் மத சுதந்திரத்தை மதிக்கிறோம்.
இஸ்லாம் உள்பட எந்த மதத்தையும் யாரும் துவேஷிப்பதை நிராகரிக்கிறோம். அதே சமயம், வன்முறைக்கு எந்தவிதத்திலும் நியாயம் கற்பிக்க முடியாது. எங்கள் தூதரகங்களை தாக்கியவர்களுக்கு மன்னிப்பு கிடையாது.
சனி, 15 செப்டம்பர், 2012
104-வது பிறந்த நாள் விழா: அண்ணா சிலைக்கு ஜெயலலிதா மரியாதை
சென்னை, செப். 15-
பேரறிஞர் அண்ணாவின் 104-வதுபிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவச்சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 10.45 மணிக்கு அண்ணா சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு முதல் - அமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
( நன்றி : தினகரன் )
``````
கருணாநிதி மலர் தூவி: வள்ளுவர் கோட்டத்தில் அண்ணா படத்திற்கு கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார்.
-------------------------------------------------------------------------------------------------
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றில் தமிழக அரசு மீள் மனு
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றில் தமிழக அரசு மீள் மனு | |||
நேற்று நடைபெற்ற கட்சிக்
கூட்டத்தில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துவிட்ட ஒப்பந்தங்கள்
செல்லத்தக்க தல்ல என ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்றம்
உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி மனு ஒன்றினைத்
தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல்
செய்யப்படும் இவ்வாறு தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
1974ஆம் ஆண்டு கருணாநிதியின்
தலைமையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவினை இலங்கைக்கு இந்தியா
தாரை வார்த்ததன் காரணமாக, ராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த தமிழக மீனவர்களின்
தொழில் பாதிக்கப்படுவதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள்
தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு
காணும் வகையில், மேற்கு வங்க மாநிலம் “பெருபாரி” வழக்கில் உச்ச நீதிமன்றம்
அளித்த தீர்ப்பினைச் சுட்டிக்காட்டி, கச்சத்தீவினை இலங்கைக்கு இந்தியா
தாரை வார்த்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என
சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் நான் 2008ஆம் ஆண்டு அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் வழக்கு
தொடர்ந்தேன்.
இது மட்டுமல்லாமல், கடந்த 2011 ஆம்
ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றவுடன், இந்த வழக்கிற்கு வலு சேர்க்கும்
விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள
தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை தன்னை ஒரு வாதியாக சேர்த்துக் கொள்ளும்படி
உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு
சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்ற நடவடிக்கை எடுத்தேன்.
இந்தத் தீர்மானத்தினையடுத்து,
தமிழ்நாடு அரசின் வருவாய் துறையும் மேற்படி வழக்கில் தன்னை ஒரு வாதியாக
இணைத்துக் கொண்டது. என்னால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்திய
நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான
உடன்பாட்டை பாராளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்புச்
சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960ஆம்
ஆண்டு உச்ச நீதிமன்றம் “பெருபாரி” வழக்கில் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டி,
இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான வகையில்
பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், கச்சத்தீவை தாரை
வார்க்கும் ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும்
1976ஆம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டது செல்லத்தக்கதல்ல என்று எடுத்துரைத்து
இருக்கிறேன்.
தற்போது தமிழக மீனவர்கள் மீதான
இலங்கைக் கடற்படையின் தாக்குதல் குறையாத இன்றைய நிலையில், அது குறித்து
நேற்று எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இந்தக்
கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், வருவாய்த் துறை
முதன்மைச் செயலாளர், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்
வளத்துறை செயலாளர், அரசு தலைமை வழக்குரைஞர், அரசு கூடுதல் தலைமை
வழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது- என்றுள்ளது.
|
|||
வெள்ளி, 14 செப்டம்பர், 2012
கூடங்குளம் : எரிபொருள் நிரப்ப தடை இல்லை - உச்சநீதி மன்றம்
புது தில்லி, செப்.13:
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்குத் தடை விதிக்க
முடியாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கூறிவிட்டது.
இருப்பினும் அணு மின் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான பிரச்னைகளை ஆராய்வதற்கு நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இம்மாதம் 20-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் கூறினர்.கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதற்குத் தடையில்லை என கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து ஜி. சுந்தர்ராஜன் என்பவர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அணு உலை அமைப்பதற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு உள்ளது என்றும் கூறினார். இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பு வாதம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதைக் கேட்ட நீதிபதிகள், ""நீங்கள் அணு உலை அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது புரிகிறது. உங்களது கவலை முழுவதும் அணு மின் நிலையத்தால் அப்பகுதி மக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். உங்களது எதிர்ப்பு அணு மின் நிலையத்துக்கு எதிரானதல்ல, நிபுணர் குழுவின் 17 பாதுகாப்பு பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான். அத்தகைய பாதுகாப்பு அம்சங்களை நீதிமன்றம் நிச்சயம் பரிசீலிக்கும்,'' என்றனர்.
பாதுகாப்புப் பரிந்துரைகளில் 6 பரிந்துரைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய பூஷண், இந்நிலையில் எரிபொருள் நிரப்பும் பணியைத் தொடர அனுமதிக்கக் கூடாது என்றார்.அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கூலம் இ. வாகனவதி, சொலிசிட்டர் ஜெனரல் ரோஹின்டன் நாரிமன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ஆகியோர் ஆஜராகி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என வாதாடினர். அணு உலை மிகவும் பத்திரமானது என்றும், எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கினாலும் அது செயல்படுவதற்கு இரண்டு மாதம் ஆகும் என்று தெரிவித்தனர்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ""நாங்கள் அணு உலைக்கு எதிரானவர்களோ அல்லது மனுதாரருக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர்களோ அல்லர். ஆனால், அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் (ஏஇஆர்பி) அறிவுறுத்திய பரிந்துரைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பது தெரிய வேண்டும்'' என்று கூறினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.
அத்துடன் இந்த வழக்கை முழுமையாக ஆரம்பம் முதல் விசாரிக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டனர்.அரசுத் தரப்பில் வாதாடிய ரோஹின்டன் நாரிமன், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அதன் பிறகே அணு உலையில் எரிபொருள் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. ஆய்வுக்குழு அளித்த அனைத்து பரிந்துரைகளையும் ஒரே சமயத்தில் செயல்படுத்த முடியாது.
இப்போது தொடங்கினால்தான் இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து நடவடிக்கைளையும் செயல்படுத்த முடியும் என்றார்.பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டிலான இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முன்பு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு குழுக்களை அமைத்து பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தன. தொடக்கத்தில் இத்திட்டத்துக்கு எதிராக இருந்த தமிழக அரசு பின்னர் முழு அளவில் திட்டத்தை ஏற்றுக் கொண்டது. இத்திட்டத்தில்இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. மின் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எனவே நல்ல நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று வாதாடினார்.
இதை ஏற்ற நீதிபதிகள், அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்புவதால் மின் உற்பத்தி தொடங்கிவிடாது என்ற மத்திய அரசின் விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கிறது. எனவே எரிபொருள் நிரப்பத் தடை கோரும் மனுதாரரின் வாதம் ஏற்புடையதல்ல.
அதேசமயம், மனுதாரர் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவது மிகவும் அவசியம் என்பதை நீதிமன்றம் உணர்கிறது. எனவே அணு மின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கைகள், மத்திய அணுசக்திக் குழுவின் பரிந்துரைகளின் அமலாக்கம் குறித்த ஆவணங்களை அடுத்த விசாரணை நடைபெறும் 20-ம் தேதியன்று மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர்.
டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு ! உடனடியாக அமுல் !
புது தில்லி, செப். 13: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்துவதென முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் மதிப்புக்கூட்டு வரி(வாட்) தனி. விலை உயர்வுக்கு முன் தில்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.41.32-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ரூ.46.95-ஆக விலை உயர்ந்துள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் விலை ஏறவில்லை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லிட்டருக்கு ரூ.14.78-ஆக இருந்த கலால் வரியில் இருந்து ரூ.5.50-ஐ அரசு குறைத்துள்ளதால் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. அதேபோல் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையும் உயர்த்தப்படவில்லை. மானிய சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு: குடும்பத்துக்கு ஆண்டொன்றுக்கு மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கை 6- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
6 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படுபவர்கள் சந்தைவிலையில் தான் இனி பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.நடப்பு நிதியாண்டில் எஞ்சியுள்ள மாதங்களுக்கு 3 சிலிண்டர்கள் வரை மானிய விலையில் பெற முடியும். வீட்டு உபயோக சமையல் எரிவாயு பயன்படுத்துபவர்களில் 44 சதவீதத்தினர் 6 அல்லது அதற்கும் குறைவான சிலிண்டர்களே பயன்படுத்துவதால், அவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். இந்த உச்சவரம்பு மூலம் மானிய விலை சிலிண்டர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது குறையும் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டீசல் விலை உயர்வு மற்றும் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான உச்சவரம்பு ஆகியவற்றால், எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வந்த இழப்பில் ரூ.20 ஆயிரத்து 300 கோடி ஈடு செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் ரூ.48.91சென்னை, செப். 13: டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டதால் சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.48.91 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை ஒரு லிட்டர் டீசல் ரூ.43.91-க்கு விற்கப்பட்டது.
உதயகுமார் கோர்ட்டில் ஆஜராக சம்மன் !
வருகிற 18-ந் தேதி கூடங்குளம் அணு உலை நிலைய எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2 தினங்களுக்கு முன் உதயகுமார் போலீசில் சரணடைவதாக அறிவித்தார். ஆனால், அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால் மற்றும் ஊர் மக்களின் வேண்டுகோளை ஏற்று சரணடைவதை தவிர்த்து, தலைமறைவாக உள்ளார். தொடர்ந்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், போலீசார் இன்று நாகர்கோவிலில் உள்ள உதயகுமார் பெற்றோரின் வீட்டுக்கு சென்று, அவர் எங்கே இருக்கிறார்? என்று விசாரித்தனர். அவர் வீட்டில் இருக்கிறாரா என்றும் சோதனை செய்தனர். அவர் அங்கு இல்லை என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, அந்த வீட்டில் உதயகுமார் கோர்ட்டில் ஆஜராவதற்கான சம்மனை ஒட்டிச் சென்றனர். அதில், வருகிற 18-ந் தேதி உதயகுமார் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தலைவர் புஷ்பராயன், நிர்வாகிகள் முகிலன், மைபா ஜேசுராஜன் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய போலீசார் இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சோதனை நடத்தினர்.
2 தினங்களுக்கு முன் உதயகுமார் போலீசில் சரணடைவதாக அறிவித்தார். ஆனால், அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால் மற்றும் ஊர் மக்களின் வேண்டுகோளை ஏற்று சரணடைவதை தவிர்த்து, தலைமறைவாக உள்ளார். தொடர்ந்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், போலீசார் இன்று நாகர்கோவிலில் உள்ள உதயகுமார் பெற்றோரின் வீட்டுக்கு சென்று, அவர் எங்கே இருக்கிறார்? என்று விசாரித்தனர். அவர் வீட்டில் இருக்கிறாரா என்றும் சோதனை செய்தனர். அவர் அங்கு இல்லை என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, அந்த வீட்டில் உதயகுமார் கோர்ட்டில் ஆஜராவதற்கான சம்மனை ஒட்டிச் சென்றனர். அதில், வருகிற 18-ந் தேதி உதயகுமார் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தலைவர் புஷ்பராயன், நிர்வாகிகள் முகிலன், மைபா ஜேசுராஜன் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய போலீசார் இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சோதனை நடத்தினர்.
வியாழன், 13 செப்டம்பர், 2012
மாலைமலர் இ-பேப்பர் - 13-Sep-2012
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும் <<<
மாலைமலர் இ-பேப்பர் - 13-Sep-2012
-------------------------
புதன், 12 செப்டம்பர், 2012
இலங்கை : கிழக்கில் தேசிய அரசு ???
கிழக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு தேசிய அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கி உள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.
தேர்தலில் 14 ஆசனங்களைப் பெற்று
தனிப்பெரும் கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வந்தபோதும் கிழக்கில்
ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆதரவை பெறுவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலை
காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்தால் மட்டுமே
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கில் மாகாண அரசை அமைக்க முடியும்.
ஆனால்,அரசுடன் சேர்வதற்கு முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஒரு சாரார் கடும்
எதிர்ப்பை வெளியிட்டு வருவதால் இதுகுறித்து நேற்று நள்ளிரவு வரை தீர்க்கமான
முடிவு எதனையும் எடுக்கமுடியாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இருந்தது.
இந்த நிலையில் கிழக்கில் தேசிய அரசு
ஒன்றை அமைப்பதற்கான சமிக்ஞைகள் அரசிடம் இருந்து தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நம்பகமாகத் தெரிய வருகிறது. சர்வதேச
நாடுகள் பலவற்றின் அழுத்தங்களைத் தொடர்ந்தே அரசு, கிழக்கில் தேசிய அரசை
அமைக்கும் நிலையை நோக்கி நகர்வதாக கொழும்பில் உள்ள பெயர் குறிப்பிட
விரும்பாத இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------
Labels:
இலங்கை / srilanka,
ஈழம் / Eelam,
உதயன் / Uthayan
கூடங்குளத்தில் பதற்றம் நீடிப்பு
திருநெல்வேலி, செப். 11: கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் பதற்றம் நீடித்ததால் கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கூடங்குளம் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 51 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.இப் பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடிக்காமல் இருக்க வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதலாக ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற மோதல் பெரும் வன்முறையாக மாறியது.
போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். பதிலுக்கு போராட்டக்காரர்களும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர்.இச்சம்பவத்தில் போராட்டக்காரர்களும், தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் உள்பட போலீஸார் சிலரும் காயமடைந்தனர். இச் சம்பவத்தையடுத்து கூடங்குளம், வைராவிகிணறு, உவரி, கூத்தங்குழி உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் மூண்டது. போலீஸ் படையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.ஊராட்சி அலுவலகம் மீண்டும் சூறை: இந்நிலையில், 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை இடிந்தகரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பதற்றம் நீடித்தது.கூடங்குளத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்தை அதிகாலை 4 மணி அளவில் அடையாளம் தெரியாத கும்பல் சூறையாடி அங்கிருந்த பொருள்களை நாசப்படுத்தியது. இதில் அங்கிருந்த ஆவணங்கள் அனைத்தும் நாசமாயின. ஏற்கெனவே திங்கள்கிழமையும் இந்த அலுவலகம் சூறையாடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஊராட்சித் தலைவர் சாண்டல் முத்துராஜ் போலீஸில் புகார் செய்துள்ளார்.இச்சம்பவத்தை அடுத்து திருநெல்வேலி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி தலைமையிலான அதிரடிப் படை போலீஸார் கூடங்குளம் பகுதிக்குள் தேடுதல் வேட்டை நடத்தி 17 பேரை பிடித்தனர்.
கூடங்குளத்தில் சாலைகளில் போராட்டக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகளை போலீஸார் அப்புறப்படுத்தினர்.2 இடங்களில் உண்ணாவிரதம்: இடிந்தகரையில் லூர்துமாதா ஆலயம் முன் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் திங்கள்கிழமை மாலையில் தொடங்கிய 48 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. இதில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். உண்ணாவிரதத்தை போராட்டக் குழுவைச் சேர்ந்த மை.பா.ஜேசுராஜ் வழிநடத்தினார்.இதற்கிடையே, போலீஸாரின் தாக்குதலைக் கண்டித்தும், அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தியும், தங்களுக்குச் சொந்தமான 7 படகுகளை ஒப்படைக்கக் கோரியும் உவரியில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்குத் தந்தை கிருபாகரன், ம.தி.மு.க மாவட்டப் பொருளாளர் ரைமண்ட், முன்னாள் ஊராட்சித் தலைவர் அந்தோனி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் போக்குவரத்து முடங்கி இருந்தது. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் உள்ள 10 கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனிடையே, இடிந்தகரைக்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
பல்வேறு ஊர்களிலும் போராட்டம்:
கூடங்குளத்தில் போராட்டக்காரர்களின் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ராமேசுவரம், பாம்பனில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
போராட்டம் தொடரும்
"நான் கைதான பின்னரும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்' என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் கூறினார்.தப்பிச் சென்றதாக கூறப்பட்ட உதயகுமார் செவ்வாய்க்கிழமை மாலை இடிந்தகரைக்கு வந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் உதயகுமார் கூறியதாவது:நாங்கள் யாரையும் கொலை செய்யவில்லை; கொள்ளையடிக்கவில்லை. காந்திய வழியில் போராடினோம்.போராட்டத்தில் பங்கேற்ற பெண்களையும் குழந்தைகளையும் போலீஸார் கொடூரமாகத் தாக்கினார்கள். அணுமின் நிலைய முற்றுகைக்குச் சென்ற மக்கள் நிராயுதபாணியாகத்தான் சென்றனர். காவல் துறையினர்தான் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர்.நாங்கள் கைதான பின்னரும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தமிழக அளவில் போராட்டம் தொடரும் என்றார் உதயகுமார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
----------------------------------------------------------------------
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள அணு உலையில் எரிபொருள் நிரப்பலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தவர்களில் ஒருவரான ஜி. சுந்தர்ராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது: ""அணு விபத்து ஏற்படாமல் இருக்க அணுமின் நிலையத்தில் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்படவில்லை.
--------------------------------------------------
கூடங்குளம்: சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய ஆதரவாளர்கள்
மக்கள்
மீதான அடக்குமுறையை நிறுத்தும்பொருட்டு தான் கைதாகப் போவதாக உதயகுமார்
அறிவித்ததைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக்
கொண்டிருந்தார். அப்போது நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் வாங்குவதாக
மத்திய உள்துறை அமைச்சர் சொல்கிறாரே என்று ஒரு நிருபர் கேட்டவுடன் உணர்ச்சி
வசப்பட்ட உதயகுமார், நான் எந்த வெளிநாட்டிலிருந்தும் ஒரு ரூபாய் கூட
வாங்கவில்லை, என்பதை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். இந்த மாதா மீது
சத்தியமாக சொல்கிறேன் நான் எந்த வெளிநாட்டிலும் ஒரு காசு கூட வாங்கவில்லை
என்று கூறி உணர்ச்சிவயப்பட்டு உடைந்து அழுதார்.
இதைக் கண்டவுடன் அங்கிருந்த ஆயிரக்கணக்கான
பெண்களும் உணர்ச்சிவயப்பட்டு கதறி அழத்தொடங்கினர். திடீரென்று ஆத்திரம்
கொண்டு எழும்பிய ஒரு இளைஞர்கள் குழு, உதயகுமார், புஷ்பராயன் போன்றோரை
அப்படியே தூக்கிச் சென்றது. உதயகுமாரை கைது செய்ய விடமாட்டோம். வா, வந்து
பார். எங்கள் பிணத்தின் மீதுதான் அவரைக் கைது செய்ய முடியும் என்று
மைக்கில் முழக்கமிட்டபடியே அவரைத் தூக்கிச் சென்றனர் இளைஞர்கள்.
மின்னல் வேகத்தில் படகு புறப்பட்டுவிட்டது.
ஒரு கொந்தளிப்பான சூழலை
எதிர்நோக்கியிருக்கிறது கூடங்குளம் போராட்டம். நூற்றுக்கணக்கான பிணங்களின்
மீது மட்டுமே இந்த அணு உலை இயங்க முடியும் என்பது வெளிச்சமாகி விட்டது.
======================================
-------------------------------------------
செவ்வாய், 11 செப்டம்பர், 2012
திங்கள், 10 செப்டம்பர், 2012
கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக சாலை மறியல்: மணப்பாடு துப்பாக்கி சூட்டில் மீனவர் பலி
தூத்துக்குடி, செப். 10-
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது இன்று காலை போலீசார் நடத்திய கண்ணீர் புகைக் குண்டு வீச்சு, லேசான தடியடியை அடுத்து கூடங்குளமே போராட்ட களமாக காட்சியளிக்கிறது. போலீசார் வன்முறையில் ஈடுபட்டு வரும் கலவரக்காரர்கள் மீது தொடர்ந்து கண்ணீர் புகைக் குண்டை வீசி வருகின்றனர்.
இடிந்தகரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. உவரியில் இரண்டு அரசு பஸ்களை போராட்டக்காரர்கள் சிறை வைத்துள்ளனர். தூத்துக்குடியிலும் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக சாலை மறியல் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் முன்பு மீனவர் அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர். சிலர் ஆவேசத்துடன் ரெயில் பெட்டியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இந்நிலையில், நாகர்கோவில் - தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ள மணப்பாடு கிராமத்திலும் மீனவர்கள் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். அப்போது சிலர் போலீசார் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். என்றாலும், நிலைமை விபரீதமானதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் அந்தோணி ஜார்ஜ் (வயது 40) என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தண்ணீர் திறந்து விட கர்நாடகம் கோர்ட்டில் ஒப்புதல்!
தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தினந்தோறும் 2 டிஎம்சி நீரைத் திறந்து விட வேண்டும் என்று கோரியிருந்தது. ஆனால் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்தது.
இதையடுத்து தமிழகத்துக்கு இந்த ஆண்டு திறந்து விடப்பட்ட நீரின் அளவு தொடர்பான ஆவணங்களை கர்நாடகம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி இன்று வழக்கு விசாரணை நடைபெற்றபோது, கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் செப்டம்பர் 19ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
19ம் தேதி காவிரி ஆணைய கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
உதயன் 10Sep2012 : கூட்டாட்சிக்குத் தயார்
கூட்டாட்சிக்குத் தயார் முஸ்லிம் காங்கிரஸுக்கு கூட்டமைப்பு அழைப்பு
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்குத் தாராளமான விட்டுக்கொடுப்புகளுடன் செயற்படுவதற்குத் தயாராக இருக்கிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்றுப் பகிரங்கமாகவே அறிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்
முடிவுகள் வெளிவந்துள்ள சூழ்நிலையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுக்களை நடத்துவீர்களா? என்று கேட்ட
போதே இந்த அறிவிப்பை விடுத்த சம்பந்தன், மேலும் கூறியதாவது,
அரசு தனது வளங்களைத் துஷ்பிரயோகம்
செய்த நிலையில் பயமுறுத்தல்கள், லஞ்சம், ஊழல்கள் தலைவிரித் தாடிய நிலையில்
தமிழ் பேசும் மக்கள் தமது மன உணர்வுகளை இந்தத் தேர்தலின் மூலம்
வெளிக்காட்டியுள்ளனர். இப்போது சாவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
கைகளில் உள்ளது.
தமிழ் பேசும் மக்களுக்கு நிம்மதியான
வாழ்வே இன்றைய தேவை. எல்லா மக்களும் ஒத்துழைத்து வாழக்கூடிய வகையில்
நாங்கள் செயற்படுவோம் என்பதைக் குறிப்பிட்டு வைக்க விரும்புகிறோம்.
அரசை எதிர்த்துப் போட்டியிட்ட
கட்சிகளான தமிழ்க் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ்
என்பன 22 ஆசனங்களுடன் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் உள்ளன. இந்தப்
பின்னணியின் கீழ், கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்குத்
தாராளமான விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்குத் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது என்றும் குறிப்பிட்டார் சம்பந்தன்
எம்.பி.
--------------------------------------------------------------------------------------
Labels:
இலங்கை / srilanka,
ஈழம் / Eelam,
உதயன் / Uthayan
இலங்கை : கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகப் பூர்வ முடிவுகள்
|
Labels:
இலங்கை / srilanka,
ஈழம் / Eelam,
உதயன் / Uthayan
ஞாயிறு, 9 செப்டம்பர், 2012
சனி, 8 செப்டம்பர், 2012
வெள்ளி, 7 செப்டம்பர், 2012
கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா - இந்திய எம்.பி.க்கள் குழுவை விசாரிக்க வேண்டும் - வழக்கு!
இலங்கைக்கு சென்ற இந்திய பாராளுமன்ற குழுவினர் இந்தியாவில் ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளனர். இதனையடுத்து எம்.பி.க்கள் குழுவிடம் டக்ளஸ் தேவானந்தா பற்றி விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்ப்ட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் இருளாண்டி சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய குழு கடந்த 18.4.2012 அன்று இலங்கை சென்றது. இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசியது. அந்த சந்திப்பின்போது இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா உடனிருந்தார்.
டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி. எனவே அவரை பற்றிய முழு விவரமும் எம்.பி.க்கள் குழுவுக்கு தெரிந்திருக்ககூடும்.
எனவே இலங்கை சென்ற சுஷ்மா சுவராஜ் தலைமையிலான எம்.பி.க்களிடம் டக்ளஸ் தேவானந்தாவை பற்றி விசாரிக்க கேட்டு ஏப்ரல் 26-ந்தேதி அன்று உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோரிடம் மனு கொடுத்து இருந்தேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க இந்த கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை ஏற்றுக் கொண்ட நீதிபதி டிவிசன் பெஞ்சிற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)