2 தினங்களுக்கு முன் உதயகுமார் போலீசில் சரணடைவதாக அறிவித்தார். ஆனால், அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால் மற்றும் ஊர் மக்களின் வேண்டுகோளை ஏற்று சரணடைவதை தவிர்த்து, தலைமறைவாக உள்ளார். தொடர்ந்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், போலீசார் இன்று நாகர்கோவிலில் உள்ள உதயகுமார் பெற்றோரின் வீட்டுக்கு சென்று, அவர் எங்கே இருக்கிறார்? என்று விசாரித்தனர். அவர் வீட்டில் இருக்கிறாரா என்றும் சோதனை செய்தனர். அவர் அங்கு இல்லை என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, அந்த வீட்டில் உதயகுமார் கோர்ட்டில் ஆஜராவதற்கான சம்மனை ஒட்டிச் சென்றனர். அதில், வருகிற 18-ந் தேதி உதயகுமார் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தலைவர் புஷ்பராயன், நிர்வாகிகள் முகிலன், மைபா ஜேசுராஜன் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய போலீசார் இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சோதனை நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக