அமெரிக்காவின் காப்டிக் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தில் இஸ்லாம் பற்றி விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எகிப்து, லிபியா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன.
லிபியாவில் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், வாஷிங்டனில் அதிபர் ஒபாமா நேற்று ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசியதாவது: உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் இந்த நேரத்தில் உலகத்துக்கு ஒரு உறுதியான செய்தியை சொல்கிறோம். எங்கள் நாட்டு மக்களை தாக்கியவர்கள் நீதியின் பிடியில் இருந்து தப்ப முடியாது.
அமெரிக்காவை அசைக்க நினைக்கும் எவரையும் அனுமதிக்க மாட்டோம். அமெரிக்க மக்களை யாரும் தாக்குவதை ஒருபோதும் பொறுத்து கொள்ளவே மாட்டோம். நாங்கள் மத சுதந்திரத்தை மதிக்கிறோம்.
இஸ்லாம் உள்பட எந்த மதத்தையும் யாரும் துவேஷிப்பதை நிராகரிக்கிறோம். அதே சமயம், வன்முறைக்கு எந்தவிதத்திலும் நியாயம் கற்பிக்க முடியாது. எங்கள் தூதரகங்களை தாக்கியவர்களுக்கு மன்னிப்பு கிடையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக