தூத்துக்குடி, செப். 10-
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது இன்று காலை போலீசார் நடத்திய கண்ணீர் புகைக் குண்டு வீச்சு, லேசான தடியடியை அடுத்து கூடங்குளமே போராட்ட களமாக காட்சியளிக்கிறது. போலீசார் வன்முறையில் ஈடுபட்டு வரும் கலவரக்காரர்கள் மீது தொடர்ந்து கண்ணீர் புகைக் குண்டை வீசி வருகின்றனர்.
இடிந்தகரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. உவரியில் இரண்டு அரசு பஸ்களை போராட்டக்காரர்கள் சிறை வைத்துள்ளனர். தூத்துக்குடியிலும் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக சாலை மறியல் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் முன்பு மீனவர் அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர். சிலர் ஆவேசத்துடன் ரெயில் பெட்டியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இந்நிலையில், நாகர்கோவில் - தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ள மணப்பாடு கிராமத்திலும் மீனவர்கள் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். அப்போது சிலர் போலீசார் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். என்றாலும், நிலைமை விபரீதமானதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் அந்தோணி ஜார்ஜ் (வயது 40) என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக