இலங்கைக்கு
எதிரான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் திராவிட முன்னேற்றக்
கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மு.க.ஸ்ராலின் தலைமையிலான குழுவொன்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை செப்ரெம்பர் 20இல் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச்
சந்திப்பின் போது அண்மையில் சென்னையில் நடந்த தமிழீழ ஆதரவாளர்களின்
அமைப்பின் "டெசோ' மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள் ஐ.நா. செயலாளர்
நாயகத்திடம் கையளிக்கப்படவுள்ளன.
இதேபோல்,
மு.க.ஸ்ராலின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான
ஆணையாளரிடமும் இந்தத் தீர்மானங்களைக் கையளிக்கவுள்ளார். தி.மு.க. சிரேஷ்ட
தலைவர் டி.ஆர்.பாலு, ஸ்ராலினுடன் செல்லவிருப்பதுடன் திராவிடக் கழகத்தின்
தலைவர் வீரமணியும் சுபவீரபாண்டியனும் அந்தக் குழுவில் இடம் பெறவுள்ளனர்.
தமிழர்களின்
ஆதிக்கத்தில் உள்ள இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரசியல்
கருத்துக் கணிப்பொன்றை நடத்துவதன் மூலம் அங்கு வாழும் தமிழ் மக்கள் தங்களது
சொந்த எதிர்காலத்தைப்பற்றித் தீர்மானிப்பது, அப்பிரதேசங்களில் நடக்கும்
புனர் நிர்மாணப் பணிகளை மேற்பார்வை செய்ய ஐக்கிய நாடுகளின்
கண்காணிப்புக்குழுவொன்றை நியமிப்பது, புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில்
இலங்கை இராணுவம் மேற்கொண்ட யுத்தக்குற்றங்கள் பற்றிய விசாரணையை ஐ.நா.
நடத்துவது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்
பரிந்துரைகளை நிராகரிப்பது ஆகியவையே "டெசோ' மாநாட்டின் தீர்மானங்களாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக