திங்கள், 10 செப்டம்பர், 2012

தண்ணீர் திறந்து விட கர்நாடகம் கோர்ட்டில் ஒப்புதல்!




தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தினந்தோறும் 2 டிஎம்சி நீரைத் திறந்து விட வேண்டும் என்று கோரியிருந்தது. ஆனால் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்தது.

இதையடுத்து தமிழகத்துக்கு இந்த ஆண்டு திறந்து விடப்பட்ட நீரின் அளவு தொடர்பான ஆவணங்களை கர்நாடகம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி இன்று வழக்கு விசாரணை நடைபெற்றபோது, கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் செப்டம்பர் 19ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

19ம் தேதி காவிரி ஆணைய கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: